பக்கம்:இராவண காவியம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 பிrவன காவிரி 54. தும்பியந் தொடையல் மார்ப சூழ்ச்சியே னிதற்கி யானைக் கும்பலி லரியே றென்னக் கொடியவர் குழாத்துட் பாய்ந்தே இம்பரி லாரி யப்பூண் டிலாதொழித் திதோயான் மீள்வேன் நம்பி விடைதா வென்ன நடுமகன் கனன்று கூறி. வேறு 55. அண்ணாவிதொ வடவாரிய ரருகோடியே யறிவில் 15ண்ணாச்குல மடியோட்டி நகராமலே யொழியப் பண் ணேனெனில், நலிவுற்றெழு பசிகொன் றசெய் - நன்றி எண்ணாதொழி முழுமூடரி னிடருற்றினை வேனே. 56. சின்னஞ்சிறு வின மானிடை செல்லும்புலி யென்ன வன்னெஞ்சுடை வடவோர்தமை மடிவீக்குவ வின்றேல், அன்னஞ்செறி பழனந்திக மணிசெந்தமிழ் நாடா! கன் னின்றிடு வேனீயது கண்டேமகிழ் வாயே. 57, கோள்வாயரி யேறாமெனக் குமுறிக்குல வடவோர் ஆன்வேலையை மலைவேலினா லறியக்குலை கலக்கி மீள்வேனிலை யேல்வண்டுணும் வேரிப்புனல் நாடா! வாள்வாயுறு வேளீயதை வந்தேயறி வாயே. 58. வன்னெஞ்சுடை வடவோர்தமை மாள்விக்குவ னல்லான் இன்னஞ்சில நாளெண்ணியே யிலங்கைப்புது வாழ்வை முன்னங்கொடு வடவோரடி முடிவைத்தவ ரம்பால் துன் னங்கொடு புண்ணோடுடற் சுமைதாங்கியே வாழேன். 59. கார்முற்றிய வகழிக்கிடை கதிர்முற்றியே வெயிலார் ஊர் முற்றிய வடவாரிய உயிருற்று ணும் போது நீர்முற்றிய காலத்தினில் நிலைபெற்றகல் புள்ளை நீர்வற்றிய நிலை கொட்டியை நெஞ்சுற்றிடு வேனே, 56. கல் நிற்றல்-நடுகல்லில் பொறிக்கப்படுதல், 57, கேர்ள்வாய்-கொல்லுதல் வாய்ந்த. வேரி-தேன். 58. முன்னுதல்-எண்ணு தல், துன்னம்-தையல். 69. எயில்-மதில், நீர்வற்றிய காலத்தில் அகல்புள், கொட்ட-நீர்ப்பூண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/408&oldid=987916" இலிருந்து மீள்விக்கப்பட்டது