பக்கம்:இராவண காவியம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28, 27. ஒருமையுங் குறைவி லாத வூக்கமு மாக்கக் தேடும் அருமையு மறிவு முற்றோர்க் காவன செய்து காக்கும் பெருமையும் தகவுஞ் சால்பும் பெருகிய தமிழர் தங்கள் உரிமையைப் பறிப்பான் போல வுயிரினைப் பறித்தா | அந்தோ ! 28. புரண்ட தி யாக்கை மண்ணிற் புலர்ந்தது குருதி வெள்ளம் திரண்டது தமிழர் வெள்ளஞ் செறிந்தது திசைகள் நான்கும் வெருண்டது வடவர் சேனை வீழ்ந்தது போரின் . கொட்டம் இருண்டது நெடிய வான மெழுந்தது பெருங்கூப்பாடே. கும்பலாய் மறவ ரோடிக் கோயிலைக் குறுகி யைய! தும்பையங் தொடையல் வேய்ந்து சுடுகணை தூவி யொன் னார் அம்பினுக் குயிர்தந் தோட வாரம ருழக்கி யீறாத் தம்பியும் வடவ னம்பாற் சாய்ந்தன னென்னா முன்னம். அரியணை யிருந்த மன்ன னாவென வலறிக் கீழே கரியென வுருண்டு வீழ்ந்து கைபிசைக் தமுங்கி யுள்ளம் உருகியே திரண்டு கண்க ளூற்றிருந் தொமுக மேடை பொருரியே பெருமூச் சாடிப் புலம்பின ன் வாய்விட் டம்மா ! வேறு 31. தம்பியோ வென்னைத் தனிவிட் டழுகென்றே நம்பியோ முன் னை நடந்தாயோ ஞாட்பினிடைத் தும்பியோ வென்னத் தொகைநின்ற வம்பலர்கள் வெம்பியோ வென்னத்தான் வென்றுகளங் கொண்டாயோ? 32. தம்பி யிருவரெனத் தாழாத் தருக்கழிந்தேன் உம்பி தனையா னுயிரோ டிழந்தேனென் எம்பி யுனையு மிழந்தே யிறவாமற் கொம்பை யிழந்த கொடுமரம்போல் நின்றேனே. 31. ஞாட்பு-போர். துாபி-யானை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/464&oldid=987981" இலிருந்து மீள்விக்கப்பட்டது