பக்கம்:இராவண காவியம்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. தம்பி நோவுறத் தானைத் தலைவரும் நம்பி னோர்களு நற்றவ மேலரும் வெம்பு சேனையும் வீவுறச் செய்தனன். கம்பி யென்றுவிற் கையன் புலம்பினான். 32. எண்ணி றந்த வினத்தரை யேழையேன் புண்ணி ருந்து புலம்பிடப் போயுயிர் மண்ணில் வீழ்ந்து மடிந்திட வையகோ பண்ணி னேனெனப் பாடிப் புலம்பினன். 33. இன்ன னாகி யினைய வட. புலன்; அன்னை யாகியு மாகியுந் தந்தை முன் மன்ன னாகியும் வாழ விருந்தவன் தன் னை யுன்னித் தமிழர்க ளேங்குவர். 34. பொன்னைத் தேக்கிலென் பூவைத் தொடுக்கிலென் தன்னை நேர்தமிழ்த் தாயிங் கிருக்கிலென் என்னை போனபின் னென் னி யிங்கென மன்னைக் காஞ்சி மருவிப் புலம்பினர். 35. செருவ கத்திறை வீழ்ந்தெனச் சீறியே ஒருவன் மண்டி யுடன்றெழுந் தொன்னலர் கருவ கத்தினிக் காண்பிலை யாமெனப் பொருக ளத்துப் புகுந்தடர்த் தார்த்தனன். 38. செய்தி கேட்டதும் தெவ்வு ரிலங்கையும் பொய்தி யாகப் பொருக்கெனப் போர்க்களம் எய்தி மக்களெல் லோரு மிறையெமக் குய்தி யுண்டோ வுலகிலென் றேங்கினார். 37. உருளை போல வுருண்டன ரோர்சிலர் ; குருளை போலக் குதித்தன ரோர்சிலர்; இருளை முன்பினு கீர்த்தன ரோர்சிலர்; தெருளை நீத்துத் தியங்கின ரங்ஙனே. 31, கம்பி-கடிவாளம-கடிவாளம் போன்றவன், 84. என் ஐ எனது தலைவன். மன்னைக்காஞ்சி -இறந்த வரி தன்மை கூறி யிரங்கல், ( 87, குருளை -விலங்கின் குட்டி, இருள் - கூந்தல், சருள். தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/487&oldid=987990" இலிருந்து மீள்விக்கப்பட்டது