பக்கம்:இராவண காவியம்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பூமண நாரு: தேபொதி கொள்ளும் புறவாய்போல் தாமரை போலத் தமிழக மெங்குக் தகநின் ற கோமக னோடு வந்து பிறந்தான் கொடியோனும் தேமலி னின்னான் நன் றிது வென்றார் சிலமாதர். 21. பீடண னென்று பெற்றவ ரிட்ட பெயர் கொன்றே ஒடண னென் றே யுலகினர் தூற்ற முறைகொன்று சுேடண வியவிக் கொடியோன் போனீர்க் கிடையெங்கும் தேடினு மில்லை நன்றிது வென்றார் சிலமாதர். 22. ஒருகுடை நிழலிற் றமிழக முழுது முயிர்போலப் பெருகொளி முத்தின் குலமென வாண்ட பெரியோனின் திருவடி காண வடமக னடிமைச் சிறியோனூர்த் தெருவிடை வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 28. ஒன்றிய வுறவைத் தன் னொடு வந்த வுயர்கொம்பைக் கொன்றொழி தெவ்வைப் புகலென மானங் கொன் றந்தோ இன்றல வென்று மேயொரு தமிழரிவனே போற் சென்றவ ருண்டோ நன்றிது வென்றார் சிலமாதர். 24. இறையோன் காத்த தமிழக மென் னு மியல்காவைக் குறையா கென்று தின்றடி யோடு கொல்விக்கும் நறையான் போலத் தமிழர்கள் வாழ்வி னலங்கொல்லும் சிறையோ னானான் நன்றிது வென்றார் சிலமாதர். 25. பூப்போ லுள்ளம் புதுமணம் வீசும் புலவோர்செந் நாப்போ லென் றுந் தமிழர்கள், வாழ நலஞ்செய்யும் காப்போல் வந்த விறையொடு தமிழர் கையுண்ணும் 'தீப்போல் வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 20. புறவாய்-புறவிதழ. தேமல்-பெண் கள் உடலில் றேன் றி அழகைக் கெடுக்கும் பசுமை நிறம், 21. நீர்க்இடை.கடல்சூழ்ந்த உலகம். 94, குறை ஆகு என் று-அழிகவென் று சிறையோன். அடிம்ை, 28. அச்-சோலை. கை-ஒழுக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/505&oldid=988002" இலிருந்து மீள்விக்கப்பட்டது