பக்கம்:இராவண காவியம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. எம்மி னத்தரிங் கிருப்பதற் கெவ்வகை யூறும் உம்மி னத்தவர் செய்திடாச் செய்வதீ தொன்றே உம்மி னத்தவர்க் குரியவா முரிமைக ளெல்லாம் எம்மினத்தரு மியல்பினி லெய்திடச் செய்வாய். 16, எய்தி யுள்ளவெம் முரிமையை யென்றுமே தமிழர் கொய்தி டாதுசெய் வாயது வன்றியெங் குலத்தர் எய்தி யிங்குவாழ் வதற்கொரு தடையிலா தென்றும் செய்தி மற்று நம் மவர்பகை கொளாமலுஞ் செய்வாய். 17. உங்கள் தாய்மொழி யுங்களுக் குரியதுபோ லுயர்ந்தோய்! எங்கள் தாய்மொழி யெங்களுக் குரியதா வீங்குத் தங்கி வாழ்ந்திடு மெம்மவர் தாய்மொழி தன்னை இங்கு பேசவுங் கற்கவு முரிமைசெய் யென்றும். 18. பின் னு மெம்மவர் பிறப்புரி மையனெ தும் பிழையா தன்ன லம்புரிந் திடுகமற் றெங்கள் நன் னாட்டில் இன் னு முன் குறும் பரும்படை யெடுத்திடா திருக்க மன்ன கட்டளை யிடுகுவை யன் னர்க்கு வகுத்தே. 18. மண்ண வாவியான் றமிழகம் வரவிலை மன்னா! விண்ண வாவிய வேள்விசெய் தெங்குல மேலோர் உண்ண வாவிய தொழித்தரை யெ எழித்தவர்க் குரிமை பண்ண வாவியே வந்தன னறிகுவை பதைத்தே. 20, என்று கூறவே யிரண்டக னிணையடி வணங்கி நன்று நன்றுயா னின்னும்வேண் டியவெலா நயப்பேன் கொன்று தின்பதை யன்றிவே றெதையுமெங் குலத்தர் அன்றெ னாரென வகத்தியன் கேட்டியென் றறைவான், 21. வேள்வி செய்தலா லுண்கில மினியந்த வேள்வி ஆள்வி னைக்குயர் வலியுடைத் தென்பதை யரசே கேள்வி வல்லவர் கிளக்குவர் தமிழர்கள் கேட்டே நாள்வ ஸம்பட 15ம்பவ ரெனவவன் நவின்றான். 19. அவாவிய-விரும்பிய, 20, நயப்பேன் -விரும்பிச் செய்வேன், 21. ஆள் வினை-போர். நாள் வளம்பட்-நாள் ஆகஆக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/496&oldid=988011" இலிருந்து மீள்விக்கப்பட்டது