பக்கம்:காவியப்பரிசு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கையன் : - என்ன சொன்னீர்? ஏடெடுப்போன் கையினிலே இரும்பு வாளா? காரிகையை உருப்போடும் கவிஞன் யுத்த களத்திற்கட் டுண்டானா? விந்தை! அந்தப் போதியற்றும் புலவனை யான்காணும் வேட்கை பொங்குகின்ற துள்ளத்தில்! -:- அமைச்சர் : பொறுப்பாய் மன்னா! ' நேரிலந்தப் புலவனை'நாம் வரவ ழைப்போம். .. நிற்கின்ற சேவகனே! கேட்பாய்! நேற்றைப் போரினிலே சிறைப்பிடித்த புலவன் தன்னைப் போயிங்கு அரை நொடியில் அழைத்து வாராய்! - (சேவகன் சென்று கவிவாணனோடு வருதல்) மன்னவனே! யான் முன்னம் சொன்ன அந்த மாமேதைக் கவிஞன் அதோ வருதல் காணாய்!' இவங்கையன் : - சின்னவனாய்த் தோற்றுகிறான்! அமைச்சன் : - ஆமாம். ஆனால் திறமையிலே வல்லவன்தான். வேங்கையன் : பொறுத்துப் பார்ப்போம்... கவிவாண! வரவேண்டும்! நேற்றைப் போரில் களத்தூடே வாளெடுத்த நின்றன் வீரம் செவிகேட்டேன், எனினும் நின் கவிதை கேட்கும் சித்தத்தால் உனையிங்கே அழைக்கச் செய்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/19&oldid=989508" இலிருந்து மீள்விக்கப்பட்டது