பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/கண்மூடி ஆட்டம்

விக்கிமூலம் இலிருந்து


18. கண்மூடி ஆட்டம்


ஆட்ட அமைப்பு : விளையாட வந்திருக்கின்ற அனைவரையும் எண்ணிக்கை க்கேற்ப, சிறிய அல்லது பெரிய வட்டமாக அமர்ந்திருக்கும்படி செய்ய வேண்டும். விளையாட்டை நடத்துபவர். ஏதாவது 15 அல்லது.20 சிறுசிறு பொருட்களை முன் கூட்டியே. கொண்டு வந்து தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது அந்த சூழ்நிலையில் என்னென்ன கிடைக்கின்றதோ. குறிப்பாக, கடற்கரை மணற்பகுதி என்றால் அங்கு கிடைக்கும் கிளிஞ்சல், கற்கள். போல, அவற்றையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், விளையாட இருப்பவர்களின் எண்ணிக்கையின்படி எழுதுவதற்கு ஒரு காகிதமும், ஒரு பென்சில் அல்லது பேனாவும் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை : ஆட்டம் தொடங்குவதற்கு, முன்னதாகவே, விளையாட்டில்பங்கு பெறுபவர்களின் கண்களை ஒரு சிறு துணியால் அல்லது கைகுட்டை 

யால் கட்டிவிட வேண்டும். மிகமிக நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்றால், தாமாகவே கண்களை மூடிக்கொண்டு, மறு உத்தரவு கிடைக்கும் வரை கண்களைத் திறக்காமலேயே விளையாட வேண்டும். .'

இனி ஆட்டத்தைத் தொடங்கலாம். ஆட்டத்தை நடத்துபவர், விசில் ஒலிமூலம் அனுமதி கொடுத்தபிறகு, தயாராக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்று ஒன்றாக ஒருவர் மூலம் தர, அதை பக்கத்தில் உள்ளவரிடம் கொடுக்க, இவ்வாறு எல்லா பொருட்களையும் ஒருவர் தன் கையால் வாங்கி வாங்கிப் பக்கத்தில் உட்காரிந்திருப்பவரிடம் கொடுக்கின்ற முழு வாய்ப்பையும் பெற்று விடுவார்.

இவ்வாறு ஏறத்தாழ 20 பொருட்களையும் அல்லது வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் ஒருவர் தொட்டு உணர்ந்த பிறகு, விசில் ஒலி மூலம் ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும்.

விசில் ஒலி கேட்டவுடன் கண்களின் கட்டை அவிழ்த்து விட்டு தன்னிடம் உள்ள பேப்பரில், தான் தொட்டு உணர்ந்த அத்தனைப் பொருட்களின் பெயர் களையும் எழுதிவிட வேண்டும். -

இதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதித் தந்துவிட வேண்டும். என்ற விதியையும் சேர்த்துக் கொள்ளலாம். 

அதிக எண்ணிக்கையில் சரியாகப் பெயர்களை எழுதியவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார். -

விதிமுறைக் குறிப்புக்கள் : 1. பொழுதுபோக்காக விளையாடும் பொழுதே, நமது நினைவாற்றலின் நிலையைப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சி பெறவும் கூடிய வாய்ப்பளிக்கும் விளையாட்டாதலால், எல்லோருமே கண்களைக் கட்டி மறைத்துக் கொள்ளும்போது, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். -

தப்பாட்டத்தை முடிந்த வரை தவிர்த்துவிட வேண்டும்.

2. பொருட்கள் கைமாறும் பொழுதே, என்னென்ன பொருள்கள் வந்தன என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். -

3. எழுதும் பொழுது பிறரிடம் காட்டுவதோ அல்லது பிறரைப் பார்த்து எழுதுவதோ கூடாது.

4. முடிந்தவரை கண்ணியமாக நடந்துகொண்டால்தான் இந்த ஆட்டம் சிறப்பாக அமையும்.