தண்ணீர்மலை வடிவேலர் பேரில் துதிகவி

விக்கிமூலம் இலிருந்து
சிவமயம்
கணபதி துணை
பினாங்கு
தண்ணீர்மலை வடிவேலர் பேரில் துதிகவி
மதுரை ஜில்லா, கூந்தளூர்,

ரா.ம. வேங்கடாசலச் செட்டியார் அவர்கள் குமாரரும்

ஸ்ரீ-ல-ஸ்ரீ-அ. வன்றொண்டர் செட்டியார் அவர்கள்

மாணாக்கருள் ஒருவரும் ஆகிய
இராமநாதச் செட்டியாரவர்கள்
இயற்றியது.
இஃது பினாங்கில் வசிக்கின்ற
நாட்டுக்கோட்டை நகரத்தாரால், பினாங்கு,
“பினாங் அண்ட் ஸ்டெரியிட்ஸ் பிரஸ்,”
அச்சியந்திரச்சாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
விஜய-வருஷம் மார்கழி மாதம்
1894


சாற்றுகவி[தொகு]

கண்டமாணிக்கம்

மெய்யப்பச்செட்டியாரவர்கள் குமாரர்

மெய்யப்பச் செட்டியார்

இயற்றியது


வண்டமிழாற் றண்ணீர்மலை வேலன்றிண் புயத்திற்
கொண்டருளப் பாமாலை கூறினான் - றண்டமிழின்
சீராரும் வன்றொண்ட தேசிகர்பாற் கற்றுணர்ந்த
மாராம நாதனெனு மால்.


தண்ணீர் மலைவேலன் றன்புகழைத் தண்டமிழா
லுண்ணீ ரமுதமென வோதினான் - மண்ணோருண்
மிக்காரி யாரும் விரும்புபுகழ் மேற்கொண்ட
தக்கோ னிராமனா தன்.

நூல்

சிவமயம்

கணபதி துணை

பினாங்கு

தண்ணீர்மலை வடிவேலர் பேரில் துதிகவி

காப்பு

புந்திக்கு ளெண்ணியிந்தப் பூலோப்பி னாங்கிலுள்ளார்
வந்திக்குந் தண்ணீர் மலைக்குகனைச் - சிந்தித்துப்
பாமாலை சூட்டப் பரூஉத் தடக்கைத் தந்திமுகக்
கோமானை நெஞ்சே குறி.(01)

அவையடக்கம்

பாலொடு கலந்த நீரும் பனிமலர் முடிந்த நாருங்
தாலமீ தெவருந் தள்ளாத் தன்மையிற் றண்ணீர் வெற்பின்
வேலன்மெய்ப் புகழைப் பாடு மேன்மையா லென்புன் சொல்லுஞ்
சாலநன் றென்றே கொள்வர் தமிழறிந் துணர்ந்த தக்கோர். (02)


சந்தக் கவி[தொகு]

03. திருமருவு முழுமதிய மென்றா லதிற்சிறிது
   மறுவுளது மடலவிழும் வண்டாமரைப் புதிய
   செழுமலரை நிகரெனி லினன்சாய்வுறக் குவியு - மதனாலே
   
   தெரியிலிவர் வதன முயர்வென்றே குறித்தியலி
     னழகமையு மடவியர்கடங் காதலுற் றவர்கள்
     செறிமனையி னிடைதனி யடைந்தேவன் முற்றிமதன் - வலியாலே
     
   கருகியழ லிழுதெனவு மஞ்சாரி டிக்குளயர்
      பணியெனவு மரிவரவு கண்டே வெருக்கொண்மத
      கரியெனவு மனமறுகி நொந்தே சலிந்துநித - முழலாதே
      
   கனியிதழி னமுதுதவி விந்தா சலத்தைநிக
     ரிணைமுலையின் மிசையணை சுகந்தா னளித்தலபர
     கதியுதவு நெறியென வறைந்தாவ லுற்றலையு -மெனையாள்வா
     
   யருமறைக ளறிவரிய கங்கா தரக்கடவு
      ளிமையமலை மகள்வலிய சண்டா சுரப்பதக
      னழியவமர் பொருகவுரி பங்காளன் மெச்சவருள் - குருநாதா!
      
   அயனையொரு பொருள்வினவி யன்றேபிணித் தரிய
       சிறையிலிடு குககுமர கந்தா! நிரைக்கழுவி
       லமணர்குழு விழவழுதி தன்கூ னிமிர்க்கவரு - முரவோனே
       
   பொருகடலு மசுரர்களு நொந்தே திகைக்கமுனை
      யயிலெறியு மிடலுடைய வெந்தாய் குறச்சிறுமி
      புனைமணியி னிணைமுலை யணைந்தே களிக்குமுயர் - புயவீரா!
      
    புனிதநவநிதி கனக விண்டாமெனத் திகழு
        மெழுநகர வணிகர்நிதம் வந்தே துதிக்கவளர்
        புனல்வரையை யினிதுளமு வந்தா தரித்துலவு - முருகோனே! (01)

04) அருக்கனிந்திர திசையினின்மரகத

       நிறத்தரும்பரி குலவுமிரதமிசை
        யடுத்துவந்திட வமளியினெழுமியல்  - புடையோரா
  
   யதிர்ந்தெழுதிரை நதியினின்முழுகிமு
         மலத்தைவென்றுந னெறியொடுபரகதி
         யளிக்கும்வெண்பொடி யரனருள்விழிமணி  -  புனைவோராய்
    
   இருக்குவின்பய னெனுமுனைவழிபட
         மருக்கொழுந்தொடு தளவநன்மலர்பல
         வெடுத்துவந்திணை யடிதொழுமடியவர்  - தமதாளாய்
         
    இசைத்திடும்பணி புரிவதுபொருளென
          நினைத்திடும்படி யொருவரமருளுதி
          யிமைப்பலண்டர்கள்   சிறையொடுகுறைதெற  -  வெறிவேலோய்
          
    பெருத்ததண்புன லெதிர்வரவரனருள்
          பதித்ததென்றமி ழெழுதியபனைமடல்
          பிழைப்பிலன்பொடு விடவருமொருசிர   -  புரநாதா
     
     பிணைத்தடங்கரு விழியமுதுறழ்மொழி
          வரைக்கிநண்பென  வளரிருகுடமுலை
          பிடிக்கிணங்கிய  மடநடைநவிமகண்  -  மணவாளா!
          
      மருத்துவின்சுத னெனுமடலனுமனை
           விடுத்திலங்கையி லெரியிடுவனசமென்
           மலர்க்கணன்சுரி வளைசெறிகரன்மகிழ்  -  மருகோனே!
           
      மனத்துகந்தெழு  நகரவணிகர்தொழ
           வளத்தின்மிஞ்சிவி ணகடுறவளர்புனல்
           வரைக்கணின்புடன் மருவியவறுமுக  - முருகோனே!    (02)          

05) நிசியைநிகர்குழல் கனகவடவரை

        நிகருமிளமுலை  - மடமானார்
        நெடிதுபயிலக மருவியெனதுயிர் 
        நிலையில்வரவருள் - புரியீரேல்
        வசையுமுமதுறு பழியும்வருமென 
        வறியபலமொழி  - பகராதே
        மறைகளுணர்வரு முனதுதிருவடி 
        மலரையனுதின  - மடைவேனோ
        
     தசைகுருதிநிண மொழுகியவுணர்க 
         டலைகண்முடியொடு  - தரைமீதே
         சரியவடர்சமர் முனையிலயிலெறி 
         தருகுமரகுரு  - பரநாதா!
         வசரசரமுழு துதவுமுமையவ 
         ளருளுமறுமுக  - முடையோனே!
         யமரர்முதலடி  யவர்கள்வழிபடு 
         மணிகொள்புனல்வரை  - முருகோனே!  (03)

06) நஞ்செனப்பொலி வரிவிழிகடலமு

         துங்கசப்பெனு மழமொழிமடவெகி
         னங்கள்பெட்புறு  தளர்நடைகுவிமுலை - மடவாரே
    நந்தமக்குயி ரலதொருபொருளிலை
         யென்றுகைப்பொருண் முழுவதுமவர்கொள
         நன்களித்தவர் பணிவிடைபுரிவது -  கடனாய்மோ
         
         கஞ்செனித்திட நயமொழிபலசொலி
         யம்புயத்துணை மலரடிவருடுதல்
         கண்டெனைப்பல ரறிவிலியிவனென - யிகழாதே

ஆசிரிய விருத்தம்[தொகு]

ஊஞ்சல்[தொகு]

அறுசீரடி ஆசிரிய விருத்தம்[தொகு]

வெண்பா[தொகு]