பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

அறிய இயலாத இன்றைய உலகம் அவர்களைப் பழமைவாதிகள் எனப் பேசுவது விந்தையாக உள்ளது. இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் ‘இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குத் தங்கள் முன்னோர்களே மூல காரணம் என்பதை முஸ்லிம்களே சரியாக அறியாமல் இருப்பதுதான்’ என்பதாக இருந்த அவரது எண்ணங்களை அறிந்த போது என் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது.

இதைப் பற்றி என் மனம் இடைவிடாது அசை போடத் தொடங்கியது. அதற்கேற்ற இனிய வாய்ப்பாக அண்மையில் நானும் என் துணைவியாரும் மேற்கொண்ட புனித ஹஜ் பயணம் அமைந்தது. பெருமானாரின் வாழ்வும் வாக்கும் எந்த அளவுக்கு அறிவியல் உணர்வுகளை உள்ளீடாகக் கொண்டிருந்தது என்பதை ஆழமாகச் சிந்தித்துத் தெளிந்தபோது என் உள்ளம் உவகையால் விம்மியது.

அரபி மொழியில் 'இல்ம்' என்ற சொல் அறிவைக் குறிப்பதாகும். அறிவின் மிணை கொண்டு உருவாக்கப்படுவதே அறிவியல். எனவே, இஸ்லாம் அறிவியல் வளர்ச்சியை ஆன்மீக உயர்வை குறியாகக் கொண்டதெனக் கூறினும் பொருந்தும்.

மேலும், ‘சீனாவுக்குச் சென்றேனும் சீர்கல்வி பெறுக. தியாகியின் இரத்தத்தை விட அறிவாளியின் எழுதுகோல் மை மேலானது’, 'அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை' என்பன போன்ற அண்ணலாரின் அறிவுரைகள், அறிவுத் தேடலின் அவசியத்தை ஆழ்ந்தகன்ற முயற்சிகளை ஊக்குவிப்பனவாக உள்ளதை உணர்ந்தேன். இதன் விளைவாக பெருமானார் (சல்) அவர்களின் அறிவுத் தேடல் பணியை சிரமேற்கொண்டு செயலாற்ற முனைந்த முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தார்கள். அதற்காக அவர்கள் மேற்