பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

அவற்றில் ஏற்படும் கோட்டங்கள் பற்றியும் பலப்பல ஆய்வுகளை நிகழ்த்திப் புதிய தகவல்கள் பலவற்றைக் கண்டறிந்து கூறியவர். ஒளிப்பரப்புக் குறைவெல்லை பற்றிய கொள்கையான 'மியூ' பாதை விதியை முதன்முறையாக வகுத்த பெருமைக்குரியவர். இவரது அரிய கண்டுபிடிப்பான இவ்விதியைத்தான் பிற்காலத்தில் பெர்னார்ட் என்பவர் ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்தார்;அதையும் பின்னர் இயற்பியல் விஞ்ஞானிகளான ஸ்னெல் அவர்களும் டேக்கார்ட்டே அவர்களும் மேலும் குறைகளைந்து செம்மைப்படுத்திச் சீர் செய்து முறைப்படுத்தினார்கள். இவ்வாறு இத்துறையின் வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் அடிப்படைச் சக்தியாக விளங்கி வந்துள்ளார்.

தமது ஆராய்ச்சிகள் முழுமைக்கும் தேவையான பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் இவரே தயாரித்துப் பயன்படுத்தினார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தியாகும்.

இயற்பியல் துறையின் பேரங்கமான வானவியல் வளர்ச்சியில் புதுப்புது அத்தியாயங்களை உருவாக்கிப் புதிய வரலாறு படைத்தவர்கள் இஸ்லாமிய வானவியல் வல்லுநர்களே என்பதை முன்பே கண்டோம்.

விண்வெளி ஆய்வுக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லிம்களே

இன்று விண்வெளி ஆராய்ச்சிகளில் ஆயிரமாயிரம் வெற்றிகளை நம் விஞ்ஞானிகள் விளைவித்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்கான படிக்கட்டுகளை உருவாக்கி, வெற்றிச் சிரகத்தை எட்ட வழிகாட்டிய முஸ்லிம் விண்ணியல் விஞ்ஞான விற்பன்னர்களில் அல் பர்கனி,அபுல் இப்னு அமாஜு, அல் ஹஸன் அலி, ஷரப் அல், அல்தௌஸா, அப்துல் ரஹ்மான் அல் சூஃபி, அபுல்