பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கிடைக்காது என்றும் கூறினர். ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்றுள்ள இக்காலத்தில் ஒரே மருந்து பல நோய்களைத் தீர்க்கும் அதிசய சக்தி படைத்தது என்றும் தொடர்ந்து விளக்கிக் கூறினார். இதைக் கேட்டபோது எனக்கு மேலும் வியப்பேற்பட்டது மேலும் துருக்கி ஹாஜி தொடர்ந்து,அண்ணலார் காலந்தொட்டு இன்றுவரை அந்த மருந்து சர்வரோக சஞ்சீவியாகவே விளங்கிவருகிறது என மேலும் விளக்கினார்.

குறுக்கிட்டுப் பேசிய பாகிஸ்தான் ஹாஜி அந்த மருந்துக்கு மற்றொரு சிறப்பும் உண்டு முதன் முதலாக அந்த மருந்தை உருவாக்கியவரே பெருமானார் தான் மருத்துவத்திறன் நிரம்பப் பெற்ற பெருமானார் பத்ரு போர்க்களத்தில் படுகாயமுற்று, நோயலாய்ப்பட்ட முஸ்லிம் போது வீரர்கள் விரைவில் குணமடையும் பொருட்டு அப்பாலைப் பகுதியில் மட்டும் வளரக்கூடிய ஒருவகை மரத்தின் சாறிலிருந்து உருவாக்கிய இம்மருந்து பாதிப்புக்காளான முஸ்லிம் படை வீரர்கள் அனைவரின் காயமும் நோயும் விரைந்து மறைய ஏதுவாயிற்று. அன்று முதல் அம்மருந்தின் சிறப்பும் உயர்வும் நிலைத்துவிட்டது பெருமானார் வழிமுறையைப் பின்பற்றி இன்றும் அம்மருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது சவூதி வரும் பயணிகளை இம்மருந்தை அறிந்தவர்கள் வாங்காமல் செல்லதே இல்லை என்று கூறியபோது எனக்குப் பெருமாரின் மருத்துவத் திறன் மீதும் அம்மருந்தின் மீதும் பற்றே ஏற்பட்ட டுவிட்ட தெனலாம் அப் மருந்து இல்லாத கடையே இல்லை எனுமளவுக்கு எல்லாக் கடைகளிலும் அம்மருந்து விற்பனையாகிறது. இதற்கான தனி விளம்பரப்பலகை எல்லாக் கடைகளிலுமே உண்டு, அவர்களோடு நான் வாங்கி வந்த அம்மருந்தை இங்குப் பயன்படுத்தியபோது அதிசயிக்கத் தக்க வகையில் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கண்டு வியப்படைந்தேன். இதிலிருந்து பெருமானாரின் மருத்துவ முறையும் திறனும் காலத்தையும் வென்று நிலைக்கும் வல்லமை பொருந்தியது என்பது போதரும்.