பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கூ) இறையனார் அகப்பொருள் 193 சூத்திரம் - ருக எல்லா வாயிலும் கிழவோன் பிரிவயின் பல்லாற் றானும் வன்புறை குறித்தன்று. என்பது என்னு தலிற்றோ எனின், பிரிவிடை ஆற்றாளாய தலை மகளை வாயில்கள் ஆற்றுவிக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : எல்லா வாயிலும் என்பது - தலைமகனும் விருந்தும் ஒழிந்து எல்லா வாயில்களும்; (தோழியும் பார்ப்பா னும் பாணனும் பாடினியும் என இவர்கள்) கிழவோன் பிரிவயின். தலைமகன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் பிரியும் பிரிவின் கண்; பல் ஆற்றானும் வன்புறை குறித்தன்று - பலநெறியானும் ஆற்றுவித்தலைக் கருதின என்றவாறு. என்பது, பருவம் குறிக்கப்பட்ட தலைமகள் பருவவரவின் கண், ஆற்றாளாய்க், 'கார்ப்பருவம் வரும்வழி அவர் பாணிப்பா ரல்லர், வந்தார், வாராநின்றார், வருவர்' எனவும், 'இதனைப் பருவ மன்றென்றும் பழித்து, அதனைப் பருவமே எனக் கருதினாயே யெனில் அவராற் குறிக்கப்பட்ட பருவமன்று; என்னை, அவர் பொய்யுரை உரையார் ஆகலான்; யாம் தெளியேம்' எனவும், காலங் காட்டியும், சொகின்' சொல்லியும், யாழ் பண்ணியும் எல்லாத்திறத்தானும் தலைமகளை ஆற்றுவிக்கும் என்பது. இனி தலைமகன் றன்னை, 'அன்பிலன் கொடியன்' எனவும் இத்தொடக் கத்தன எல்லாஞ் சொல்லியும் ஆற்றுவிக்கும். அவற்றுட் பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைமகளை ஆற் றுவித்தற்குப் படைத்து மொழிந்து பருவமன்று என்றதற்குச் செய்யுள் : பருவமன்றென்றல் ' கடாவும் நெடுந்தேர்க் கலிமத னன்கலி தேயச்செங்கோல் நடாவும் நகைமுத்த வெண்குடை வேந்தன் நண் ணார் மதில்பாய்ந் திடாவும் மதமா மழைபெய்யும் ஓதை எனமுழங்கப் பிடாவும் மலர்வன கண்டே மெலிவதென் பெண்ணணங்கே.' (கூ0க) ‘ விடக்கொன்று வைவேல் விசாரிதன் மற்றிவ் வியலிடம்போய் நடக்கின்ற செங்கோல் ஒருகுடை வேந்தன் நண் ணார்முனைபோல் கடக்குன்றஞ் சென்றநம் காதலர் பொய்யலர் தையல் பொன்னே மடக்கொன்றை வம்பினைக் காரென எண்ணி மலர்ந்தனவே.' (B02) 1. சொகினம் - விருச்சி : நிமித்தம். இ. அ.-13