உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி களஞ்சிய அகராதி-2/S

விக்கிமூலம் இலிருந்து

data transfer operations : தரவு செலுத்துச் செயல்முறைகள் : தரவு அனுப்புகைச் செயல்கள் : தரவுத் தொடர்பு வழியிலோ அல்லது கணினி ஒன்றின் சேமிப்புப் பகுதியிலோ, ஒரிடத் தில் உள்ளதை பிரதி செய்து மற்றொரு இடத்திற்கு மாற்றுதல்.

data transparency : தரவு மறைப்பின்மை : தரவுகள் எந்த அமைவிடத்தில் இருந்தாலும் அல்லது அது எதற்குப் பயன்படுவதாக இருந்தாலும், அதனை எளிதில் அணுகுவதற்கான திறம்பாடு.

data transmission : தரவு அனுபுகை : தரவு செலுத்துகை முறைமை ஒன்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, தரவுகளை அனுப்புதல்.

data transmission, asynchoronous : நேரச்சீரற்ற தரவு அனுப்பீடு.

data transmission channels : தரவு அனுப்பீட்டு வழிகள் : தரவு அனுப்பீட்டு வழிகள் அல்லது 'பெருவழிகள் என்பவை, ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்குத் தரவுகளைக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. இவை குறும அலைநீளம், அகல அலைநீளம், குரல் அலைநீளம் என மூன்று வகைப்படும்.

data transfer rate : தரவு செலுத்து வீதம் : தரவு அனுப்புகை வீதம் : கணினியின் முக்கிய நினைவிடத்திலிருந்து வட்டுக்கு அல்லது ஒரு கணினியின் நினைவிடத்திலிருந்து மற்றொரு கணினியின் நினை விடத்துக்குத் தரவுகளை அனுப்பும் வேகவீதம்.

data type : தரவு வகை : தரவு மாதிரி.

data validation : தரவு கள வரையறை : தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரவு, களங்கள் சோதனையிடப் படலாம்.

data value : தரவு மதிப்பளவுகள் : தரவு மதிப்பீடு தரவு வகைகளின் பிரதிநிதியாகப் பயன் டும் குறியீடுகளின் தொடர்.

data verification : தரவு சரிபார்த்தல் : தரவு ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தரவுகள் சரியான வகையைச் சார்ந்ததா, சரியான நீளமுடையதா என்பனவற்றைச் சரி பார்த்தல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாக, ஒரு சம்பளப பட்டியல் தரவு ஆதாரத்தில் ஒரு பணியாளரின் முகவரி அஞ்சல் குறியீடு முக்கியமாகப் பதிவாகியிருக்க வேண்டும். அஞ்சல் குறியீடு இலக்கங்களில அமைந்திருக்கறதா, ஆறு இலக்கங்களைக் கொண்டிருக்கிறதா (இந்திய அஞ்சல் குறியீடுகள் ஆறு இலக்கங்கள் கொண்டவை என்பதைத் தரவு ஆதாரம் சரி பார்த்தல் வேண்டும்.

data warehouse : தரவுக் கிடங்கு : ஒரு நிறுவனத்தின் அனைத்து வகைத் தரவுவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தரவுத் தளம். ஒரு தரவுக் கிடங்கு என்பது பல தரவுத் தளங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஒரே தரவுக்கிடங்கு, பல்வேறு கணினிகளில் பகிர்ந்து சேமிக்கப்பட்டிருக்க முடியும். வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு மூலங்களிலிருந்து தரவுக் கிடங்குக்கு தரவு வந்து சேர முடியும். ஆனால், ஒரு வழங்கன் கணினி மூலமாகத் தரவை அணுக இயல வேண்டும். பயனாளருக்குத் தரவுக் கிடங்கை அணூகும் முறை வெளிப்படையானது. மிகஎளிய கட்டளைகள் மூலம் தரவு கிடங்கிலிருந்து தகவலைப் பெறவும் முடியும்.

data word : தரவுச் சொல் : ஒழுங்கமைக்கப்பட்ட, குறிப் பிட்ட எழுத்துகளின் தொகுப்பு. பொதுவாக முன்பே வரையறுக்கப்பட் எண், கணினியின் இணைப்புகளில் சேமிக் கப்பட்டு, தரவுவின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது.

data word size : தரவுச் சொல் நீளம்.

date : தேதி . நாள்.

date expansion : தேதி விரிவாக்கம்.

date field : தேதிப் புலம் , தேதி வகைப் புலம்.

date math : தேதி கணக்கு : தேதிகளைக் கொண்டு செய்யப்பபடும் கணிப்புகள். எடுதுக்காட்டு ஜனவரி 3 - 5 , பிப்ரவரி 4.

date stamping : டேடி முத்திரை : அன்றைய தேதியை ஓர் ஆவதைதில் தானாகவே பதிய செய்யும் முறை பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் பலவற்றில் இவ்வசதவுண்டு.

date time : நாள் -நேரம்.

datum : தரவு உருப்படி : கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு. daughter board : துணைப் பலகை : தாய்ப் பலகையுடன் பொருத்தப்படும் இணைப்புப் பலகை.

DB : டிபி : டெசிபல் (Decibal ) என்பதன் குறும்பெயர். ஒரு செய்தித் தொடர்புக் கம்பியில் அனுப்பீட்டு இழப்பீடுகளை மடக்கை முறையில் அளவிடுவதற்கான அலகு.

DB/DC (Data Base / Data Communications) : தடவு தளம் / தரவுத் தொடர்புகள் : தரவுத் தளப்பணிகளையும், தரவு தொடர்புப் பணிகளையும் ஆற்றுகிற மென்பொருள்களைக் குறிக்கும் சொல்.

DB2 : டிபி2 (தரவுத் தளம்-2)  : ஒரு பெரிய முதன்மைப் பொறியமைவில் இயங்குகிற ஐபிஎம் (IBM) முதன்மைப் பொறியமைவிலிருந்து உருவான தரவுத் தள மேலாண்மைப் பொறியமைவு (DBMS). இது, ஐபிஎம்-இன் பெருந்தரவு தள விளை பொருளாகியுள்ள முழுமையான டிபிஎம்எஸ் பொறியமைவு. இது கட்டமைவு வினவு மொழி (SQL) இடைமுகப்பு.

DB-25-connector : டிபி-25 இணைப்பி : 25 செருகிகளை அல்லது 25 செருகு இடங்களைக் கொண்ட இணைப்பி, பெரும்பாலும் ஆர்எஸ்-232 சி முகவிடை இணைப்பில் பயன்படுத்தப்படுகிறது.

D. base file : தரவுத் தளக்கோப்பு.

D. base programme : தரவுத் தளச் செயல்முறை.

DBMS : டிபிஎம்எஸ் : Database Management System என்பதன் குறும்பெயர். இதற்குத் தரவுத் தள நிர்வாக முறைமை என்பது பொருளாகும்.

DC : டிசி : 1. தரவு மாற்றம் (Data Convertor). 2. வடிவமாற்றம் (Design Change). 3. மெண்ணியல் கணினி (Digital Computer). 4. நேர்மின் (Direct Current). 5. நேர்வட்டம் (Direct Circle). 6. பட வெளியீட்டு விசைப் பலகை (Display Console). ஆகியவற்றின் குறும்பெயர்.

DCA : டிசிஏ : ஆவண உள்ளடக்கக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architecture - SNA) பயன்படுத்தப்பட்ட, ஆவணங்களின் வடிவாக்கம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை இது குறிக்கிறது. வெவ்வேறு வகையான கணினிகளுக் கிடையே உரை மட்டும் உள்ள ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதை இது சாத்தியமாக்கிறது. டிசிஎ, இருவகையான ஆவண வடிவாக்கங்களை முன் வைக்கிறது. ஒன்றில், வடி வமைப்பில் மாற்றங்கள் செய்ய முடியும் (Revisable Form Text DCA). இன்னொன்றில் அத்தகைய மாறுதல்களைச் செய்யமுடியாது (Final Form Text DCA)

DCD : டிசிடி : தரவுச் சுமப்பி அறியப்பட்டது என்று பொருள்படும் (out Data Carrier Detected என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இரண்டு கணினிகளுக்கிடையேயான நேரியல் தாவுப் பரிமாற்றத்தில் (Serial Communication) ஒர் இனக்கி (Modem), தகவலை அனுப்பத் தயாராயிருக்கிறது என்பதை உணர்த்த, இணக்கியிலிருந்து கணினிக்கு அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.

DCE : டிசிஇ : தரவுத் தொடர்பு சாதனம் என்று பொருள்படும் Data Communication Equipment என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232 சி நிலை இனைப்பில் இருவகை உண்டு. ஒன்று டிசிஇ இன்னொன்று. டி. டீ இ (DTE-Data Termina Equipment). டிசிஇ ஒர் இடைநிலை சாதனம். ஒரு டிடிஇயிலிருந்து வரும் உள் வீட்டை பெறுநருக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பாக, ஏற்புடைய தகவலாய் மாற்றியமைக்கும். எடுத்துக்காட்டாக ஒர் இணக்கி, டிசிஇ-யாகச் செயல்படுகிறது. டி. இ-யாக இருக்கும் கணினியிலுள்ள தரவை இணக்கமான வடிவத்தில் (Analog) மாற்றி, தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கிறது.

decimal arithmatic, floating : மிதவைப் புள்ளி பதின்மக் கணக்கீடு.

decimal coded : குறிமுறைப் பதின்மம்.

decimal notation, binary coded : இருமக் குறியீட்டுப் பதின்மக் குறிமானம்.

decimal point, actual : உண்மைப் பதின்மப் புள்ளி.

decoding : குறிவிலக்கம் : குறி மொழி மாற்றல்.

D. COM : டிகாம் : பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தொழில்நுட்பத்தின் விரிவாக் கம். விண்டோஸ் அடிப்படையிலான பிணையங்களில் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குத் துணை புரியும் ஆக்கக் கூறுகள் தமக்குள்ளே எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இத்தொழில் நுட்பம் வரையறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புக்குத் தேவையான பல்வேறு ஆக்கக் கூறுகள் ஒரு பிணையத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பகிர்ந்தமைவதை இத் தொழில் நுட்பம் சாத்தியமாக்குகிறது. பயனாளரின் பார்வையில் அத்தொகுப்பு அனைத்து ஆக்கக்கூறுகளும் ஒருங்கினைக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பயன்பாடாகவே தோன்றும்.

DCTL : டிடிசி : Dlrect Coupled Transister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான் சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள்.

DDC : டிடிசி : காட்சித் தரவுத்தடம் என்று பொருள்படும் Display Data Channel என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியின் வரை கலை காட்சித்திரையை மென் பொருள் மூலம் கட்டுப்படுத்துவதை இயல்விக்கிற வீஸா (VESA) தரநிர்ணயம். டி. டி. சி-யின் கீழ், காட்சித் திரைக்குரிய பண்பியல்புகள் வரைகலைத் துணை முறைமைக்கு உணர்த்தப்படுகின்றன. அதனடிப்படையில் திரைக்காட்சி வடிவமைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கணினிக்கும் காட்சித் திரைக்குமிடையே ஒர் இருவழி தொடர் புத்தடம் உருவாக்கப்படுகிறது.

DDD : டிடிடி : நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialing என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதுார அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகு தொலைவில் உள்ள தொலை பேசியுடன் தொடர்பு கொள்ள இயலும் தரவுத் தொலைத் தொடர்புக்கும் இவ்வசதி பயன்படுகிறது.


DDE : டிடிஇ : இயங்குநிலைத் தரவு பரிமாற்றம் எனப் பொருள்படும் Dynamic Data Exchange என்ற தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண் டோஸ் மற்றும் ஒஎஸ்/2 ஆகிய வற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாட்டுத் தொகுப்புகள் தமக்கிடையே தரவுப் பரிமாற்றம் செய்துகொள்ளும் முறை. விண் டோஸ் 3. 1-ல் ஒஎல்இ (OLEObject Linking and Embedding) என்னும் செயல்முறை மூலம் இத்தகைய தரவுப் பரிமாற்றம் நடைபெற்றது. விண்டோஸ் 95/ 98/என்டி ஆகியவற்றில் ஒஎல் இ- யுடன் ஆக்டிவ்எக்ஸ் என்னும் தொழில்நுட்பமும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

DDL : டிடிஎல் : தரவு விவரிப்பு மொழி : Data Definition Language என்பதன் குறும்பெயர். தரவு அடிப்படை ஒன்றில் தரவு வடிவங்களை வெளியிடுவதற்கான மொழி.

de : டிஇ : ஜெர்மனி நாட்டில் இயங்கும் இணைய தளத்தைக் குறிக்கும் புவிசார் பெருங்களப் பெயர்.

dead halt : முழு நிறுத்தம் : இச்சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட மையத்துக்கு முறைமையினால் திரும்ப வரமுடிவதில்லை.

dead key : வெற்று விசை : நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக விசைப் பலகையில் ஒர் எழுத்து விசையை அழுத்தினால் அவ்வெழுத்து திரையில் பதிவதுடன், சுட்டுக்குறி அடுத்த இடத்துக்கு நகரும். ஆனால், பெரும்பாலும் வெற்று விசையை அழுத்தும்போது, அடுத்த எழுத்துக்கு நகர்வதில்லை. திரையில் எவ்வித எழுத்தும் தோன்றுவதில்லை. தமிழில் தட்டச்சு செய்யும் போது ஒரு மெய்யெழுத்தைப் பதிய முதலில் புள்ளியையும் பின் உயிர்மெய் எழுத்தையும் அழுத்தும் முறையில் புள்ளிக்குரிய விசை நகரா விசையாகச் செயல்படும். புள்ளி வைத்தபின் அதன் கீழேயே உயிர் மெய்யைப் போடவேண்டுமல்லவா?

dead letter box : சேராக் கடிதப் பெட்டி : செய்திகளின் நடை முறைக்கான முறைமைகளில் வழங்கமுடியாத செய்திகளைக் கைப்பற்றுவதற்கான கோப்பு.

dead lock : முட்டுக்கட்டை : முடக்க நிலை : தேக்க நிலை : ஆதாரம் ஒன்றிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும், தீர்வு காணப்படாத முட்டுக்கட்டை.

deadly embrace : தேக்கநிலை மேவல் : ஒரு செய்முறையில் இரு ஆக்கக்கூறுகள் ஒன்றின் பதிலை ஒன்று எதிர்பார்த்து ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு : ஒர் இணையத் தில், ஒரு பயனாளர் 'A' என்ற கோப்பில் பணிபுரிந்துகொண்டு, 'B' என்ற கோப்பினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மற்றொரு பயனாளர் 'B' கோப்பில் பணியாற்றிக் கொண்டு 'A' கோப்பை எதிர்பார்க்கிறார் என்றால் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்க்கின்றனர். இதனால், இருவர் பணியும் தேங்கிநிற்கிறது.

dealocate : விடுவி : ஒரு தரவை நினைவகத்தில் பதிவு செய் வதற்காக ஏற்கனவே ஒதுக்கி வைத்த நினைவக இருப் பிடத்தை விடுவித்தல்.

deallocation : விடுவிப்பு : இனி மேலும் தேவைப்படாத ஆதாரம் ஒன்றை நிரல் ஒன்றின் ஆதாரத்திலிருந்து விடுவித்தல் ஒதுக்கீடு என்பதற்கு எதிர் நிலையானது.

deamon : ஏவலாளி (பணி யேற்கும் நிரல்) d-BASE : தரவுத் தள நிரல் தொகுப்பு. ஆஸ்டன் டேட் (Ashton Tate) என்ற நிறுவனம் உருவாக்கிய தொகுப்பு.

debit card : பற்று அட்டை : கடை ஒன்றில் பொருள்களை வாங்கும் ஒருவர், பொருள்களுக்கான விலையைச் செலுத்தப் பயன்படுத்தும் வங்கி ஒன்றின் அட்டை (கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத் திருப்பார்).

deblock : ஆவணப்பிரிப்பு : ஒரு தொகுதியிலிருந்து ஆவணங்களைப் பிரித்தெடுத்தல்.

deblocking : தொகுப்பிலிருந்து பகுத்தல் : ஒரு தொகுப்பு அல்லது தருக்கவியல் ஆவணங்களின் குழு ஒன்றிலிருந்து தருக்கவியல் ஆவணம் ஒன்றைப் பிரித்தெடுத்தல்.

debounce : மறுபதிவு தவிர்ப்பு : கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு விசை அல்லது இணைப்புக் குமிழ் அழிவு தரும் வகையில் மூடப்படுவதைத் தவிர்த்தல். ஒரு மின்குமிழின் இணைப்புகள் தடைப்பட கால அவகாசம் அளிப்பது ஒரு வகை வழியாகும்.

debug : தவறு நீக்குதல் : தவறு நீக்கி பிழை நீக்கி : நிரல் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல், கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல்.

debugger : தவறு கண்டறி சாதனம் : பிழை நீக்கி : ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் தரவுகளையும், செயல்முறை மாறி மதிப்புருக்களையும் பார்க்க அனுமதிக்கிறது. நவீன தவறு கண்டறிசாதனங்கள் ஆதார மற்றும் இலக்குக் குறியீடுகளை இணைக்கிறது. இதனால், செயல்முறைப்படுத்துபவர், அறிவுறுத்தங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதாரச் செயல்முறையை வகுக்க முடிகிறது.

debugging : பிழைநீக்கம் : தவறு போக்கல் தவறு கண்டறிதல்.

debugging aids : பிழை நீக்க உதவிகள் : கணினியின் வழக்கமான சோதனை நடவடிக்கைகள்.

DEC : டிஇசி : Digital Equipment Corporation என்பதன் குறும் பெயர். எண்ணியல் துனைக் கருவி அமைவனமாகும்.

decatenate : தொடர் பிரிதல் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளாகப் பிரித்தல். சேர்த்தலுக்கு எதிர்நிலையானது.

decay : சிதைவு : குறியீடு அல்லது மின்னேற்றத் தின்வலிமை குறைதல்.

decay time : சரிசெய்யும் நேரம் :

deceleration time : ஒடுக்க நேரம்.

decending sort : இறங்குமுக வரிசைப்படுத்தல் : தரவுகளை மேலிருந்து கீழாக இறங்குமுக வரிசையில் வகைப்படுத்தல்.

decentralized computer system : மையமிலா கணினிப் பொறியமைவு : கணினியும், சேமிப்புச் சாதனங்களும் ஒரே அமைவிடத்தில் அமைந்து, கணினியை அணுகும் சாதனங்கள் வேறிடங்களில் அமைந்திருக்கிற பொறியமைவு.

decentralized processing : மையமற்று செயல்முறைப்படுத்துதல் : வெவ்வேறு அமைவிடங்களில் அமைந்துள்ள கணினியமைவுகள், கணினியமைவுகளிடையே தரவுகளை அனுப்பலாமென்றாலும், இது அன்றாடச் செய்தித் தொடர்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இது பகிர்மானச் செய்முறைப்படுத்துதல், மையச் செய்முறைப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.

dechotomissing research : இரு கிளைத் தேடல் :

decibel : டெசிபல் : ஒரு குறீயிட்டின் குரல் முனைப்பினை அல்லது வலிமையினை அளவிடும் அலகு. மனிதர்கள் 10 டி பி முதல் 110 டிபி வரை யிலான குரல் முனைப்பினைக் முடிகிறது. சந்தடி மிகுந்த ஒரு தொழிற்சாலையில் 90 டிபி ஓசை எழுகிறது. இடி முழக்கத்தில் 110 டிபி ஓசை உண்டாகிறது. 120 டிபி அளவுக்கு மேற்பட்ட ஒசையினால் காது வலி உண்டாகும்.

decimal : பதின்மம் தசமம் : பதின்மானம் பதின்மக் குறிமானத்தில் பயன்படுத்தப்படும் 0 முதல் 9 வரையிலான இலக்கம். பதின்மக் குறிமானத்தைக் (ஆதாரம் 10) கையாளும் போது, '0' முதல் 9 வரையிலான (பத்துக்கு ஒன்று குறைவு) இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போன்று 6 -ஐ ஆதாரமாகக் கொண்ட குறிமானத்தில் '0' முதல் 5 முதல் வரையிலான (ஆறைவிட ஒன்று குறைந்த) எண்களையும், ஈரிலக்கக் குறி மானத்தில் (ஆதாரம் 1) 0 முதல் 1 வரைமட்டும் பயன்படுத்துகிறோம்.

decimal code : பதின்மக் குறியீடு : தசமக் குறியீடு : தனியாக வேறொரு எண்முறைமையில் பதின்ம எண்களைக் குறிப்பிடும் முறை.

decimal digit : பதின்ம இலக்கம் : தசம இலக்கம் : பதின்ம எண் முறைமையில் உள்ள ஒரு எண். பதின்மமுறையின் அடிப்படை எண் 10, கீழ்க்காணும் குறியீடு கள் பயன்படுத்தப்படுகின்றன. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9.

decimal number : பதின்ம எண் , தசம எண் : பொதுவாக ஒற்றை இலக்கத்துக்கு மேற்பட்ட எண், அதன் அளவு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்களால் குறிக்கப்படுகிறது.

decimal numbering : பதின்ம இலக்கமிடல் : எண்ணுவதற்கு அடிப்படையாக ஒரு 10 இலக்கச் சுழற்சியைப் பயன் படுத்துகிற எண்மானமுறை. இதில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள் 0 1 2 3 4 5 6 7 8 9.

decimal point : பதின்மப் புள்ளி : தசமப்புள்ளி பதின்மப்புள்ளி என்பது எண்ணும் பதின்ம எண்களும் கலந்த ஒன்றில் முழு எண்களை பதின்ம எண்களிலிருந்து பிரிக்கிறது. 711. 12 என்ற பதின்ம எண்ணில் உள்ள 741-ஐயும் 12-ஐயும் பிரிக்கிறது.

decimal system : பதின்ம முறை : தசம முறை : அடிப்படை 10 எனக் கொள்ளும் எண் முறை மையாகும்.

decimal to binary conversion : பதின்ம-இருமமுறை-மாற்றம் : பதின்ம முறைமையிலிருந்து இரட்டை இலக்க எண்களாக மாற்றுதல் பதின்ம முறைமையில் எழுதப்பட்ட எண்களை இருமமுறைக்குச் சமமான எண்களாக மாற்றுதல்.

4410 = 1 × 24 + 0 x 23 - 1 x 22 + 1 x 21 + 0 x 20 = 1011002,

decimal to hexadecimal conversion : பதின்ம முறையிலிருந்து பதினாறெண் முறைக்கு மாற்றுதல் : 10-ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு எண்ணை 16-ஐ அடிப்படையாகக் கொண்ட எண் முறைமை யில் எழுதுதல்.

decimal to octal conversion : பதின்ம-எண்ம முறை மாற்றம் : பதின்ம முறையிலிருந்து எட்டை அடிப்படையாகக் கொண்ட முறைக்கு மாற்றுதல் : பத்தை அடிப்படையாகக் கொண்ட பதின்ம முறையில் எழுதப்பட்ட எண் ஒன்றை எட்டை அடிப்படையாகக் கொண்ட முறையில் சமமான எண்ணுக்கு மாற்றுதல்.

decision : தீர்வு : நினைவகத்தில் உள்ள தரவுகளுக்கிடையிலும், பதிவேட்டில் உள்ள தரவுகளுக்கிடையிலும் ஒரு வகையான உறவுமுறை உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் கணினிச் செயல். மாற்றுவழிகளுக்கு மாற்றுவதற்கான செயல், எதிர் கால நடவடிக்கையை உறுதி செய்தல்.

decision box : தீர்வுப் பேழை : தொடர் வரிசை வரைபடங்களில் பயன்படுத்தப்படும் சாய் சதுர வடிவக் குறியீடு. இது, ஒரு முடிவு தேவைப்படும்போது செயல்முறையில் ஒரு புள்ளி யைச் சுட்டிக் காட்டுகிறது.




decision instruction : முடிவு காணூம் கட்டளை : நிரல் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் கட்டளை. எடுத்துக் காட்டு : நிபந்தனைத் தாவல் ஆணை.

decision, logical : தருக்கத் தீர்வு : தருக்கமுறை முடிவு.

decision making : தீர்வு செய்தல் : பல விருப்பத் தேர்வுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், மனிதனும் எந்திரமும் எடுக்கும் முடிவுகளில் முறையான சமநிலை இருப்பது பொறியமைவின் வடிவமைப்பில் முக்கியமான அங்கமாகும். செயல் முறைப்படுத்தும் நோக்கில் இருவழிகளில் முடிவெடுக்கப்படுகிறது. இது, என்றும் மாறாத விதிகள் மற்றும் நிபந்தனைகளின் தொகுதி. இன்னொன்று, கண்டுணர்வு முறை. இதில், விதிகள் அவ்வப்போது நிலைமைக்கேற்ப மாறுதலடையும். கண்டுணர்வு முறை, செயற்கை துண்ணறிவு, (Al) பொறியமைவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

decision making process : முடிவெடுக்கும் செய்முறை : ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைப் போக்கினைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் அறிவுத் திறன், வடிவமைப்பு, தேர்வு நடவடிக்கைச் செய்முறை. decision structure : தீர்மானமான அமைப்பு : தேர்வு அமைப்பு போன்றது. decision support ; தீர்மான உதவி.

decision support system (DSS) : தீர்மானிக்க உதவும் பொறியமைவு (டிஎஸ்எஸ்)  : மற்றப் பொறியமைவுகளிலிருந்து இன்றியமையாத தரவுகளை எடுத்துக்கொண்டு, கட்டமைவற்ற முடிவுகளை எடுப்பதற்கு அந்தத் தரவுகளைப் பயன்படுத்த மேலாளர்களுக்கு உதவுகிற ஒரு மேலாண்மைத் தரவு பொறியமைவுப் பிரிவினைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்.

decision symbol : முடிவுக் குறியீடு முடிவு காண் குறியீடு : ஒரு தேர்வினைச் செய்வதற்குத் தருக்கமுறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு செய்முறையினைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். இணைகர வடிவம் உள்ளீடுவெளியீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சாய்சதுர வடிவத் தொடர்வரிசை வரைபடக் குறியீடு.

decision table : முடிவுக்காண அட்டவணை : சிக்கல் ஒன்றை விளக்கும்பொழுது தோன்றும் அனைத்து நிலைமைகளையும் அவற்றுக்கான நடவடிக்கைகளையும் வரிசைப்படுத்தும் அட்டவணை. சில நேரத்தில் நடவடிக்கை ஒழுங்குமுறைப் பட்டியலுக்குப்பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

decision theory : முடிவுக்காண கோட்பாடு : ஒன்றுக்கு மேநற்பட்ட பல இயலக்கூடிய மாற்றுகளிடையே ஒன்றைத் தேர்வு செய்யும் முறையை விவரிக்கவும், அதனை அறிவுபூர்வ மானதாக ஆக்கவும் உருவாக்கப்பட்ட உத்திகள் மற்றும் கொள்கைகளின் விரிவான வரிசை.

decision tree : முடிவுகாண் மரம் : எந்தவொரு சூழ்நிலையிலும் உள்ள மாற்றுகளை கூறும்படவிளக்கம்.

deck : தொகுப்பு : துளையிடப் பட்ட அட்டைகளின் தொகுப்பு.

declaration : அறிவுக்கை : செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வேண்டியிருக்குமிடத்து, சில செயல்முறைப்படுத்தும் மொழிகளில் பயன்படுத்தப்படும் உத்தி.

declaration : statement : அறிவிப்பு அறிக்கை நிரல் தொகுப்பின் மற்றக் கூறுகளின் தன்மையை விளக்கும் நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதி அல்லது வன்பொருள் ஒன்றின் சில பகுதிகளை சிறப்பான பயன்பாட்டுக்காக ஒதுக்கும் நிரல் தொகுப்புப் பகுதி.

declaration time : நிறுத்த நேரம் : நாடா ஒன்றிலிருந்து தரவு ஒன்றின் கடைப்பகுதியை படித்த அல்லது பதிவு செய்த பிறகு அதனை நிறுத்தத் தேவை யான நேரம்.

declarative knowledge : அறிவிப்பு அறிவு : பொருள்கள் பற்றியும், நிகழ்வுகள் குறித்தும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையன என்பது பற்றியும் உண்மைகளை அறிந்து கொள்வதன் மூலம் கற்றுக்கொள்ளுதல்.

declarative language : அறிவிப்பு மொழி : ஒரு பணியைச் செய்து முடிப்பதற்குக் கணினிக்குத் தேவைப்படும் துல்லியமான நடைமுறையைக் குறித்துரைப்பதிலிருந்து செயல் வரைவாளரை விடுவிக்கும் ஒரு செயல்வரைவு மொழி. பதிலாக, செயல்முறைப்படுத்துபவர், தான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைச் செயல்வரைவுக்குத் தெரிவிக்கிறார்.

decode : குறி மொழி மாற்றம் : குறிமுறை நீக்கம் : குறியீடுகளினால் கூறப்பட்ட தரவு ஒன்றை மொழி மாற்றம் செய்தல் அல்லது உறுதி செய்தல், EnCOde என்ற சொல்லுக்கு எதிர்நிலையானது.

decoder : குறி மொழி மாற்றி : குறி முறை நீக்கி : பொருள் உணர்த்தும் சாதனம் : 1. பொருள் உணர்த்தும் சாதனம், 2. தரப் படும் உள்ளிட்டுச் சமிக்கைகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளியீட்டு வழிகளைத் தேர்வு செய்யும் விசைகளின் அடித்தளப் பலகை.

decollate : தாள் பிரித்தல் : தொடர் படிவங்களின் பிரதி வரிசையாகச் சேர்த்து அவற்றுக்கிடையிலான கரித்தாள்களை அகற்றுதல்.

decompiler : பிரிப்பி : எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை. இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்து கொள்வதற்குக் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறிலி மதிப்புருக்களும், வாலாயங்களும் பொதுவாக A0001, A0002 போன்ற பெயர்களில் இருக்கும்.

decompress : தளர்த்துதல் : திரட்சியாக்கம் செய்த தரவுகளை அது முதலிலிருந்த வடிவளவுக்கு மீண்டும் தளர்த்திக் கொண்டுவருதல்.

decrement : குறைவு : கீழிறக்கு : குறைப்பு : மதிப்பீடு அல்லது மாறக்கூடிய ஒன்று குறைக்கப்பட்டிருக்கும் அளவு. Increment என்பதற்கு எதிர் நிலையானது.

decryption : குறியீடுமாற்றம் : குறியீடுகளினால் தரப்பட்ட செய்தி ஒன்றிலிருந்து பொருள் உள்ள ஆதி செய்தியை உருவாக்குதல் அல்லது தெளிவான உரைப்படுத்துதல். குறியீட்டுக்கு நிலையானது.

DECUS : இலக்கக் கருவிக் கணினி : Digital Eqipment Computer Users Society என்பதன் குறும் பெயர். இலக்கக் கருவிக் கணினியைப் பயன்படுத்துவோர் குழு, அக்குழுவின் நோக்கம் இலக்கக் கருவிக் கணினி தொடர்பான கருத்துகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்வதாகும்.

dedicated : தனிப்பயனான ஒதுக்கப்பட்ட : தொகுப்பாணைக் கருவிகள் தொடர்பான அல்லது சிறப்பான பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட அல்லது ஒதுக் கப்பட்ட நடைமுறைகள்.

dedicated channel : ஒருநோக்க வழி : ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் கணினி வழி அல்லது செய்தித் தொடர்பு வழி.

dedicated chip : தனிப்பயன் சிப்பு : ஒரு நோக்கச் சிப்பு : ஒரு பணியை மட்டுமே செய்கிற ஒரு சிப்பு. எடுத்துக்காட்டு : நினைவுப் பதிப்பான் சிப்பு.

dedicated computer : தனிப் பயன் கணினி : ஒதுக்கப்பட்ட கணினி : ஒரு குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினி வடிவத்தில் மட்டும் இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறப்புப் பயன் கணினியுடன் ஒப்பிடவும்.

dedicated device : தனிப்பயன் கருவி : ஒதுக்கப்பட்ட கருவி : ஒரு குறிப்பிட்ட வேலைக்கென வடிவமைக்கப்பட்ட கருவி. மற்ற பணிகளுக்காக அதில் ஆணையிட முடியாது.

dedicated lines : தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள் : ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலை பேசி இணைப்புகள் : தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குழு வினருக்கோ தொலைத்தரவு தொடர்புக்காக தனிப்பட்ட முறையில் குத்தகை முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகள். இத்தகைய இணைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்படுகிறது. பொதுவான இணைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு என்று கனக்கிட்டுக் கட்டணம் வசூலிப்பது போல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை.

dedicated service : அர்ப் பணிப்புப் பணி : ஒரு நோக்கப் பணி : மற்றப் பயன்படுத்துவோர் அல்லது அமைவனங்கள் பகிர்ந்து கொள்ளாத பணி.

dedicated system : தனிப் பயன் முறைமை : ஒதுக்கப்பட்ட முறைமை : ஒரே ஒரு பணிக்காக ஒதுக்கப்பட்ட கணினியை அடிப்படையாகக் கொண்ட கருவி. எடுத்துக்காட்டு சொற்களை வகைப்படுத்துதல். மற்ற பணிகளைவிட எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்காக அதனைப் பயன்படுத்துவது எளிது. பொதுவான நோக்கங்களுக்கான முறைமைகள் அதிக கொடுக்கக்மாக வளைந்து கூடியவை.

dedicated word processor : தனிப்பயன் சொல் தொகுப்பி : ஒதுக்கப்பட்ட சொல் வகை செய் கருவி : இக்கருவியின் வன்பொருள், சொற்களை வகை செய்வதற்காக வடிவமைக்கப் பட்டதாகும். இதன் விசைகள் சிறப்பான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு, நிரல்கள் அதன் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச் சொற்களை நீக்கு, வாக்கியத்தை நீக்கு அல்லது இடையில் சேர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

de facto standard : நடைமுறைத் தர அளவு : போட்டியில்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தர நிர்ணய அமைவனங்களினால் அதிகார முறையில் தரநிலை வாய்ந்ததாக அறிவிக்கப்படாத ஒரு செயல் முறைப்படுத்தும் மொழி, பொருள், வடிவமைப்பு அல்லது செயல்முறை.

default . முன்னிருப்பு : கொடா நிலை : முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்டது, தொடக்க நிலையில் முன் குறித்து, பயனாளரின் தலையீடு இன்றி தன்னியல்பாய் இருப்பது. நிரல் தொகுப்பு அல்லது பயனாளரினால் குறிப்பான விருப்பம் எதுவும் தரப்படாத நிலையில் முறைமை அல்லது மொழி மாற்றுவோரினால் தானாக மேற் கொள்ளப்படும் அனுமானம்.

default data : முன்னிருப்பு தரவு குறிப்பு : தன்னியல்பான தரவு : விசைப்பலகை சாவிப் பதிவு அழுத்தங்களைக் குறைத்து, கணினி பயன்படுத்துபவரின் ஆக்கத்திறனை அதிகரிப்பதற்கு மென்பொருளால் தானாகவே அளிக்கப்படும் மதிப்புருக்கள். எனினும், தேவைப்படுமானால் தன்னியல்பான தகவல்களுக்குப் பதிலாகப் புதிய மதிப்புருக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

default directory : முன்னிருப்பு விவரக் குறிப்பேடு : ஒரு வட்டு விவரக் குறிப்பேடு. இதில், வெளிப்படையான விவரக்குறிப்பேட்டுக் குறிப்பீடு இருந்தாலன்றி, கணினி பொதுவாகச் செயல்பாடுகளை நிறைவேற்று கிறது.

default drive : முன்குறித்த வட்டியக்கி : பயன்படுத்துவோரினால் குறிப்பான இயக்கி எண் தரப்படாவிட்டால் முறைமை ஒதுக்கித் தரும் வட்டு இயக்கி.

default font : முன்குறித்த எழுத்து முகப்பு : பயனாளரினால் வேறெதுவும் குறித்துரைக்கப்பட்டிராவிடில், அச்சடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அச்செழுத்து முகப்பு மற்றும் வடிவளவு.

default setting : தன்னியல்ப்பு அடைவு : பயன்படுத்துபவர் வேறுவகையில் குறித்துரைத் தாலன்றி, ஒரு செயல்முறையினால் தானாகவே பயன்படுத்தப்படும் அடைவு.

default value : முன்னிருப்பு மதிப்பீடு : தயாரிப்பாளரால் ஒரு கருவி அல்லது நிரல் தொகுப்புக்கு தரப்படும் மதிப்பு. பொதுவாக நிரல் தொகுப்பு ஒன்றில் தொடக்கநிலையில் உள்ள பொதுவான பாதுகாப்பான மதிப்பு.

deferred address : தாமத முகவரி : ஒத்திவைக்கப்பட்ட முகவரி : மறைமுக முகவரி.

deferred entry : தாமத முகவரி : தனக்குக் கட்டுப்பாட்டை மாற்றிய செயல்முறையிலிருந்து காலத்தாழ்வாக வெளியேறியதன் காரணமாக ஒரு நிரல்கூறில் செய்யப்படும் பதிவு.

deferred exit : தாமத வெளியேற்றம் : ஒத்திவைக்கப்பட்ட வெளியேற்றம் : முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அல்லாமல், ஒருங்கிணைவில்லா ஒரு நிகழ்ச்சியினால் தீர்மானிக்கப்படும் ஒரு நேரத்தில் நிரல்கூறு கட்டுப்பாடு மாற்றப்படல்.

definition , பிரச்சினை ஒன்றுக்கான வரையறை : தருக்கங்களை பதின்ம வடிவுகளாகவும், பட்டியல்களாகவும் மற்றும் நிரல் தொகுப்பு விளக்கங்களாகவும் தொகுத்தல். அவை பிரச்சினையை தெளிவாக விளக்குகின்றன, வரையறை செய்கின்றன.

defrag : நெருங்கமை : அடுத்தடுத்த அமைவிடங்களில் வட்டுக் கோப்புகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் நோக்கமுடைய DOS நிரல்.

defragmentation : நெருங்கமைத்தல் : ஒவ்வொரு கோப்பின் அனைத்துப் பகுதிகளும் அடுத்தடுத்த கூறுகளில் எழுதப்படுமாறு, அனைத்துக் கோப்புகளையும் ஒரு நிலை வட்டில் மறு படியும் எழுதுதல்.

degausser : காந்த புல நீக்கி : அழிப்பி : மின்காந்த வகையில் வட்டுகளிலும் நாடாக்களிலும் பதிவு செய்யப்பட்ட தரவுகளை அழிக்க உதவும் கருவி. இதனை பேரழிப்பி என்றும் கூறுவர்.

degradation : தரங்குறைத்தல் : தரமிழத்தல் : முறைமை தொடர்ந்து இயங்கினாலும், அதன் சேவை குறைந்த அளவிலேயே அமையும் முறையான கருவிப்பராமரிப்பு கிடைக்காத நிலை மற் றும் அன்றாடத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கணினி நிரல் தொகுப்புகள் பராமரிக்கப்படாதிருத்தல் ஆகியவை இரண்டு முக்கிய காரணங்களாகும்.

deinstall : நீக்கல் : இயக்கப் பயன்பாட்டிலிருந்து நிரல் தொகுப்பு ஒன்றையோ, வன் பொருளையோ நீக்குதல்.

dejagging : பிசிரற்ற வரைவு : பிசிரற்ற கோடுகளை, எழுத்துகளை, பல கோண வடிவங்களை வரையப் பயன்படுத்தப்படும் கணினி வரைபட உத்தி.

de jure standard : சட்டமுறைத் தர : அளவு அமெரிக்கத் தேசியத் தர நிமருணய நிறுவனம் (ANSI) போன்ற தர நிருணய நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்காடியில் விற்பனையிலுள்ள தர அளவுகள். delay circuit காலந்தாழ்த்தும் இணைப்பு : சமிக்கைகளை வழங்கும் பொழுது இடைவெளியை வேண்டுமென்றே அதிகமாக்கும் மின்னணுவியல் இணைப்பு.

delay line : சுணக்க வழி.

delay line storage : காலந்தாழ்ந்து வரும் வரிச்சேமிப்பகம் : காலந்தாழ்ந்து வரும் வரியைக் கொண்ட சேமிப்பகம். அதில் நிரலை மீண்டும் உருவாக்கி இணைப்பதற்கான வசதி உண்டு. ஆதிக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டது.

delete : நீக்கு நீக்குதல் : அழித்தல் : களம் அல்லது கோப்பு ஒன்றின் ஆவணத்திலிருந்து நீக்குதல் அல்லது அழித்தல் அல்லது போக்குதல். 2. தரவுகளைப் போக்கும் முறை.

delete all : அனைத்தும் அழி : அனைத்தும் நீக்கு.

delete file : கோப்பை நீக்கு.

delete key : நீக்கல் விசை : அழித்தல் விசை : 1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப் பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்டுக் குறியின் அடுத்துள்ள எழுத்து அழிக்கப்படும். ஆனாலும்வேறு சில பயன்பாடுகளில், தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதி அல்லது வரைகலைப் படத்தை நீக்கிவிடும். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் ஏடிபி மற்றும் விரிவாக்க விசைப்பலகைகளில் உள்ள விசை. செருகு குறிக்கு முந்தைய எழுத்தை அழிக்கும் அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியையோ, வரைகலைப்பகுதியையோ அழிக்கும்.

delete record : ஏட்டை நீக்கு.

deletion record : நீக்கும் ஆவணம் : அடிப்படைக் கோப்பு ஒன்றில் உள்ள ஆவணம் ஒன்றுக்குப் பதிலாக அமையும் புதிய ஆவணம்.

delimit : எல்லையிடு : வரம்பிடல் ஒன்றின் வரம்புகளைத் தீர்மானித்தல். குறிப்பிட்ட மாறக்கூடிய ஒன்றின் உயர்ந்த பட்ச, குறைந்தபட்ச வரம்புகளைத் தீர்மானித்தலைப் போன்றது.

delimiter வரம்புக்குறி : வரம்பு காட்டி : எல்லைக்குறியீடு : சிறப்பு வடிவம். எடுத்துக் காட்டாக பட்டியல் ஒன்றில் மாறக்கூடிய பெயர்கள் அல்லது பொருள்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும். அல்லது தரவு வகைகளைப் பிரிப்பதுபோல ஒரு தொடர் வடிவங்களை மற்றொன்றிலிருந்து பிரிக்கப் பயன்படும் கால் புள்ளி அல்லது இடைவெளி.

delivery : வழங்குதல் : பட்டு வாடா நிரல் தொகுப்பை உரு வாக்கும் பணி வட்டத்தில் இறுதிச்செயல். இதில், உண்மையான தரவுகளைக் கையாளப் பயனாளருக்கு நிரல் தொகுப்பு அல்லது முறைமை வழங்குகிறது.

delivery challon : விநியோகத் தரவு.

Dell Computer Corporation : டெல் கணினிக் கழகம் : IBM ஒத்தியல்பு நுண்கணினிகளைத் தயாரிக்கும் ஒர் அமைவனம். இதனை 1984இல் மைக்கேல் டெல் என்பவர் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள (அமெரிக்கா) ஆஸ்டின் நகரில் நிறுவினார். லேப்டாப் (Laptop) முதல் உயர் முனை எந்திரங்கள்வரைப் பல்வேறு வகை நுண்கணினிகளை இது தயாரிக்கிறது.

Delphi Information Service : டெல்ஃபி தரவு சேவை : அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இணையச் சேவை நிறுவனம் வழங்கும் இணையத் தரவு சேவை.

delta modulation : டெல்டா அதிர்விணக்கம் : குரல் அலைகளின் மாதிரியை எடுத்து, அவற்றை இலக்கக் குறியீடாக மாற்றுவதற்கான உத்தி.

deltree : அகற்றாணை : ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக் கோப்புகளையும் அகற்றி விட்டு, துணை விவரக்குறிப்பேடுகளையும் அகற்றுகிற ஒர் உயர்நுட்ப DOS நிரல்.

demagnetization : காந்த நீக்கி : காந்த வட்டு அல்லது நாடாக்களில் சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கும் செயல்.

demand driven processing : தேவை முடுக்கு செயலாக்கம் : தரவு பெறப்பட்ட உடனேயே நடைபெறும் செயலாக்கம். இது போன்ற நிகழ்நேரச் (Realtime) செயலாக்கத்தின் காரணமாய் செயலாக்கப்படுத்தாத தகவலைச் சேமித்து வைக்கத் தேவையில்லாமல் போகிறது.

demand paging : பக்கமேற்றல் கோரிக்கை : நிகழ்சேமிப்பு முறைமைகளில், புறப்பக்கச் சேமிப்பகத்திலிருந்து உண்மையான சேமிப்பகத்திற்கு அப்பணியை நிறைவேற்றப்படும் நேரத்தில் மாற்றுதல்.

demand report : கோரல் அறிக்கை வேண்டிய அறிக்கை : கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்படும் அறிக்கை. எதிர்பார்க்கப்படாத கேள்விகளுக்கான விடையாக வழங்க, மிக முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படையான முடிவுகளை மேற்கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது.

demo : செயல் விளக்க செய் முறை : விளம்பரம், விற்பனை நோக்கங்களுக்காக ஒரு பயன் பாட்டுச் செயல்முறையில் சில செயற்பணிகளை எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை.

demodulate : அதிர்விணக்க நீக்கம் : ஒத்தியல்புடைய சைகைகளை இலக்கங்களாக மாற்றுவதற்கான செய்முறை. ஊர்தியிலிருந்து தரவு சைகைகளை வடிகட்டுதல்.

demodulation : மீளப்பெறல் : தகவல் தொடர்பில் எடுத்துச் செல்லும் அலை வரிசையில் அனுப்பப்பட்ட ஆதிக்குறியீட்டை மீண்டும் பெறும் நடைமுறை. தரவு தொகுப்புகளில், தரவுத் தொடர்புச் சமிக்கைகள், கணினி முனையச் சமிக்கைகளுடன் இணையச்செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. Modulation என்பதன் இணைப் பகுதியாகும்.

de modulator : மீளப்பெறும் கருவி : தகவல் தொடர்பு இணைப்பு ஒன்றின் வழியாக அனுப்பப்படும் சமிக்கைகளை பெறும் கருவி. அது, அச்சமிக்கைளை மின் துடிப்புகளாக அல்லது துண்மிகளாக மாற்றி, தரவு தயாரிப்பு எந்திரங்களுக்கு அவற்றை உள்ளீடாகத் தரும். Modulator என்பதற்கு மாறானது.

demonstration programme : சான்று விளக்க நிரல் : முன்மாதிரி நிரல் : 1. உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு நிரலின் செயல் திறனை விளக்கும், அந்நிரலின் ஒரு முன்மாதிரி வடிவம். 2. ஒரு நிரலை விற்பனைக்குக் கொண்டுவரும்முன் அதன் செயல்திறனை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சுருக்கமான வடிவ முன்மாதிரி.

demonstrative education : செயல்முறை விளக்கக் கல்வி.

demount : இணைப்பைக் கழற்றுதல் : கருவி ஒன்றிலிருந்து எழுத அல்லது படிக்கக்கூடிய காந்த சேமிப்பு ஊடகத்தை நீக்குதல், இது வட்டு இயக்கி ஒன்றிலிருந்து வட்டுத் தொகுப்பு ஒன்றை நீககுதல் போனறது.

demultiplexer : ஒருங்கிணைக்கி : பல இணைப்புக் கருவி : ஒருங்கிணைத்து அனுப்பப் பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தரவுத் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு தரவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexes (பல்பயன் இணைப்பு) என்பதற்கு எதிரானது.

denary : பதின்மான முறை : பத்திலக்க பதின்ம எண்மான முறை.

denary notation : பதின்ம குறிமானம் : பதின்மங்களைப் பயன்படுத்தி நாம் எண்ணுகிற வழக்கமான எண்மான முறை.

dendrite : மர இழை : மனித மூளையிலுள்ள அடிப்படைச் சேமச்சிற்றம். இது, மரத்தடங்கள் (Dendrites) மரவடிவ இழைகளின் கட்டமைப்பைக் கொண்டது.

denizen : டெனிஸன் : இணையத்தில் செய்திக் குழுவில் பங்கு பெறும் ஒருவரை இவ்வாறு அழைக்கின்றனர்.

denominator : விகுதி .

dense binary code : செறிவு இரும எண் குறியீடு : எல்லா இயலத்தக்க இரும எண் (இரட்டை இலக்க) நிலைகளையும் பயன்படுத்தக்கூடிய குறியீடு.

dense list : செறிவுப் பட்டியல் : அடர் பட்டி : எல்லாச் சிற்றங்களும் இயன்றளவு நிரப்பப்பட்டிருக்கிற ஒரு பட்டியல்.

density : திண்மை : அடர்த்தி : செறிவு : ஒரு குறிப்பிட்ட பருண்மையான இடத்தில் சேமிக்கக் கூடிய எழுத்துகளின் எண்ணிக்கை. மின்காந்த ஊடகம் ஒன்றில் எவ்வளவு நெருக்கமாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற அளவுமுறை. பொதுவாக ஒரு அங்குலத்துக்கு இத்தனை எண்மிகள் (எட்டியல்) என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. பதிவுத்திண்மை அதிகரிக்க அதிகரிக்க சேமிப்புக் கருவியின் திறன் கூடுகிறது.

density, bit : துண்மி (பிட்) அடர்த்தி.

density, character : எழுத்து அடர்த்தி.

density, double : இரட்டை அடர்த்தி.

density, packing : பொதி அடர்த்தி.

density, recording : பதிவடர்த்தி.

density, single : ஒற்றை அடர்த்தி.

density, storage : சேமிப்பு அடர்த்தி.

departmental computing : துறைக் கணிப்பு : ஒரு துறையின் தரவுகளை அதன் சொந்தக் கணினி அமைவினைக் கொண்டே செய்முறைப் படுத்துதல்.

departmental processing : துறைசார் செயலாக்கம்.

dependability : நம்பகமான : நம்பத் தகுந்த .

dependency : சார்புநிலை சார்பு : மற்றொரு பணியைத் தொடங்கு முன் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணி ஒன்றை நிறைவேற்றும் உறவு நிலை.

dependent : சார்ந்திருப்பு.

dependent segment : சார்புக்கூறு : தரவு மேலாண்மையில், தரவு தனது முழுப்பொருளுக்காகவும் ஒர் உயர்நிலைத் தகவலை நம்பியிருக்கும் நிலை.

dependent variable : சாரு மாறியல் மதிப்புரு : ஒர் உருமாதிரியின் வெளிப்பாடு. இது, உட்பாடுகளை நம்பியிருப்பதால் இப்பெயர் பெற்றது.

deposit : வைப்பீடு : எந்திரப் பதிவேட்டில் அல்லது நினைவுப் பதிப்பியின் அமைவிடத்தில் தரவுகளைச் சேமித்து வைத்தல்.

depth queuing : முப்பறிமாணத் தோற்றமிடல் : இருபரிமானப் பொருளை முப்பரிமாணத் தோற்றமுடையதாக மாற்றப் பயன்படுத்தும் ஷேடிங் (Shading) போன்ற தொழில் நுட்பம்.

deque : டிகியூ : இருமுனைப் பட்டியல் : Double Ended Queue என்பதன் குறும்பெயருமாகும். பட்டியலின் இரண்டு முனைகளிலும் நீக்கவும், சேர்க்கவும் அனுமதிக்கும் இருபுறமும் உள்ள வரிசை.

dereference : சுட்டு விலக்கம் : மறைமுகச் சுட்டு : நினைவகத் தில் இருத்திவைக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பினை அணுக முகவரிச் சுட்டு (Pointer) என்னும் கருத்துரு சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. சுட்டு என்பது அம்மதிப்பு பதியப்பட்டுள்ள முகவரியையே குறிக்கும். அம்முகவரியில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மதிப்பினை எடுத்தாள அச்சுட்டினையே மறைமுகமாய் பயன்படுத்திக்கொள்ள முடியும். (எ-டு) ; சி மற்றும் சி++ மொழிகளில் int *p, int n = 5, p = & n : என்று கட்டளை அமைக்கலாம். p என்பது, 5 என்னும் மதிப்பு இருத்தி வைக்கப்பட்டுள்ள முகவரியைக் குறிக்கும். p என்பது 5 என்னும் மதிப்பைக் குறிக்கும். இவ்வாறு ஒரு முகவரிச் சுட்டு மூலம் அம்முகவரியிலுள்ள மதிப்பை மறைமுகமாகச் கட்ட முடியும். derived class : தருவித்த குழு : உட்குழு : தருவித்த வகுப்பு : பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில், ஒர் இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இன்னோர் இனக்குழு. அடிப்படை இனக் குழுவின் (Base Class) அனைத்து பண்பியல்புகளையும் தருவித்த இனக்குழு கொண்டிருக்கும். அதே வேளையில் அடிப்படை இனக்குழுவில் இல்லாத புதிய உறுப்புகளையும், செயல்முறைகளையும் சேர்த்துக்கொள்ள முடியும். சில செயல்முறைகளை மாற்றியமைக்கலாம். மறுவரையறை செய்யலாம்.

derived font : தருவித்த எழுத்துரு ஏற்கெனவே இருக்கும் ஒர் எழுத்துருவை சற்றே மாற்றியமைத்து உருவாக்கப்படும் புதிய எழுத்துரு. இப்போது பயன்பாட்டில் உள்ள வரைகலை அடிப்படையிலான மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள எழுத்துருக்களின் உருவளவுகளை மாற்றி புதிய எழுத்துகளை உருவாக்க முடியும்.

derived relation : தருவித்த உறவுமுறை : ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட உறவு முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய உறவுமுறை.

DES : டெஸ் : டிஇஎஸ் : தரவு மறையாக்கத் தரநிர்ணயம் எனப்பொருள்படும் Data Encryption Standard என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1976-ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கணினித் தரவு மறையாக்கத்துக்கான வரையறைகள். டெஸ், 56 துண்மி மறைக்குறியைப் பயன் படுத்துகிறது.

descendant : வாரிசு : 1. பொருள் நோக்கிலான நிரலாக்கத்தில் ஒர் இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழு அதன் வாரிசு என அழைக்கப்படுகிறது. தாத்தா, தந்தை, மகன் எனற உறவுமுறை யைப் போன்றது. 2. கணினிச் செயலாக்கத்தில், ஒரு குறிப்பிட்ட செயலாக்கம் (ஒரு நிரல் அல்லது ஒரு பணி) இன்னொரு செயலாக்கத்தினால் பயன்படுத் திக் கொள்ளப்படும்போது, மூலச் செயலாக்கத்தின் சில பண்பியல்புகளை அழைத்த செயலாக்கம் மரபுரிமையாகப் பெறும்.

descender : கீழிறங்கி : இறங்கி : மற்ற எழுத்துகளின் அடிக்கோட்டுக்கு கீழே இறங்கும் g போன்ற சிறிய எழுத்துகளின் பகுதி. Kern என்றும் அழைக்கப் படுகிறது.

decending : இறங்குமுகம்.

descending order : இறங்குமுக வரிசை : அகர வரிசையிலோ அல்லது எண்முறையிலோ அதிக அளவிலிருந்து குறைந்த அளவுக்கு இறங்கி வரும் வரிசை. -

descending sort : இறங்குமுக வரிசையாக்கம் : ஒரு பட்டியலுள்ள உறுப்புகளை இறங்கு முக வரிசை முறைப்படுத்தல். Z இல் தொடங்கி A-யில் முடியு மாறும், எண்களைப் பொறுத்தவரை பெரிய எண்ணில் தொடங்கி சிறிய எண்ணில் முடியுமாறும் வரிசைப்படுத்தல்.

description : விவரிப்பு.

description, data : தரவு விவரிப்பு.

descriptive statistics : விவரிப்பு புள்ளியல் : மாற்ற விகிதம், சகவிகிதங்களின் விகிதம், திட்ட அளவு பிழைபாடு, கணித நடு எண், வரிசை போன்ற எண்ணளவிலான தரவுத் தொகுதி ஒன்றின் முக்கியத் தன்மைகளைக் குறிப்பிடும் எண் மதிப்புகள்.

descriptor விளக்கச்சொல்; வர்ணிப்பி : விவரிப்புச் சொல் தகவலைப் பட்டியலிடவோ அல்லது வகை வாரியாகப் பிரிக்கவோ உதவும் முக்கிய சொல். விசைச்சொல் என்றும் சில சமயம் அழைக்கப்படும்.

deserialize : தொடர்வரிசை நீக்கம் : ஒரு தொடர்வரிசைத் துண்மிக்கற்றையை ஒருபோகு துண்மிக்கற்றையாக மாற்றுதல்.

desh symbol : கீற்று குழூஉக் குறி.

design : வடிவாக்கம் : வடிவமைப்பு.

design aids : வடிவமைப்பு உதவிகள் : கணினி அமைப்பைச் செயல்படுத்த உதவும் நோக்கமுள்ள கணினி நிரலாக்கத் தொடர் அல்லது வன்பொருள் உறுப்புகள்.

design automation : வடிவமைப்பு தன்னியக்கம் : மின் சுற்று வடிவங்கள், புதிய கணினி மற்றும் பிற மின்னணுச் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கணினியைப் பயன்படுத்துதல்.

design costs : வடிவமைப்பு செலவுகள் : அமைப்புகளின் வடிவமைப்பு, நிரலாக்கத் தொடர் பயிற்சி, மாற்றல், சோதனை செய்தல், ஆவணப்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள செலவு. design cycle : வடிவமைப்புச் சுழற்சி : ஒரு வன்பொருள்அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற்கான முழுத் திட்டம். இதில் சிக்கலை விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக் குறியீடு அமைத்தல், நிரல் தொடர் பிழை நீக்கம், ஆவணப் படுத்தல் ஆகியவை அடங்கும்.

design engineer : வடிவமைப்புப் பொறியாளர் : வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர்.

design error : வடிவமைப்புப் பிழை.

design heuristics : வடிவமைப்புக் கண்டுணர்தல் : ஒரு பெரிய சிக்கல் அல்லது நிரலாக்கத் தொடரை மிகச் சிறியதான எளிதில் சமாளிக்கக்கூடிய 'மாடுல் (module) கூறுகளாகப் பிரிப்பதற்குக் கடைபிடிக்கப் படும் வழிகாட்டுதல்கள்.

design language : வடிவமைப்பு மொழி : வடிவமைப்புப் பணியில் அதன் சொற்றொடர்களையும், இலக்கணங்களையும் பயன்படுத்தக்கூடிய நிரலாக்கத் தொடர்மொழி.

design phase : வடிவமைப்பு நிலை : முன்பே நிர்ணயிக்கப்பட்ட வடிவமைப்புத் தேவைகளைப் பொறுத்து ஒரு தகவல் அமைப்பை உருவாக்கும் செயல்.

design problem : வடிவமைப்புச் சிக்கல்.

design review : வடிவமைப்பு சீராய்வு வடிவமைப்பு : மீள் பார்வை.

design specifications : வடிவமைப்பு வரன்முறைகள் : வடிவமைப்புக் குறியீடுகள் : ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவின் தகவல் தேவைகளை ஆராய்ந்ததன் விளைவு. உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு போன்றவற்றிற்கான வரன்முறைகள்.

design, systems : முறைமை வடிவமைப்பு.

design template : வடிவமைப்புப் படிம அச்சு.

design time : வடிவமைப்பு நேரம்.

design walkthrough : வடிவமைப்பு மேல்நோக்கு : பயன்படுத்துவோர், செயல்முறையாளர்கள், ஆலோசகர்கள் ஆகி யோர் ஒரு பொறியமைவினை மேலிருந்து நோக்குதல்.

desk accessories : வடிவமைப்புத் தேவைகள் : வரைபட முறைகளைச் சார்ந்த அமைப்பில், பிற ஆவணங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பணியாற்றும் கருவிகள்.

desk checking : மேசை சோதனை : நிரலாக்கத் தொடர் அளவையில் பிழைகளைச் சோதிக்கும் மாதிரி தரவு பொருள்களைக்கொண்டு சோதித்தல். கணினியில் செயல்படுத்துவதற்கு முன்பு இத்தகைய சோதனை செய்யப்படுகிறது.

desk scanner : மேசை வருடி : மேசை நுண்ணாய்வுக் கருவி : மேசை நுண்ணாய்வுக் கருவியின் சுருக்கப் பெயர். இரு உருக்காட்சிகளை நுண்ணாய்வுச் செய்யப்பயன்படுகிறது. இந்த உருக்காட்சிகளைப் பின்னர் ஒரு மேசை வெளியீட்டு அல்லது வரைகலை மென்பொருள் உருவாக்கிய ஒர் ஆவணத்தில் பதிவு செய்யலாம். நுண்ணாய்வு செய்த உருக்காட்சிகளை விருப்பம்போல் வெட்டலாம், ஒட்டலாம். கையால் இயக்கும் நுண்ணாய்வுக் கருவிகளும், தட்டைப்படுகை நுண்ணாய்வுக் கருவிகளும் கிடைக்கின்றன.

desktop : மேசைப் பதிப்பு தொழில் நுட்பம் : ஆவணங்கள், காகிதங்கள் மற்றும் துணைப் பொருள்களைக் கொண்ட திரையில் காட்டப்படும் காட்சி.

desktop computer : மேசைக் கணினி : துண்செயலகம், உள்ளீடு, வெளியீடு, சேமிப்புச் சாதனங்களை ஒன்றாக, கணினி அமைப்பாக உருவாக்கி மேசை மேல் வைக்கக்கூடிய சிறு கணினி. வீட்டுக் கணினி (Home Computer), நுண் கணினி (Micro Computer), தனி முறைக் கணினி (Personal Computer) என வகை உண்டு.

desktop conferencing : மேசைக் கலந்துரையாடல்; கணினிக் கருத்தரங்கு தொலைதூர ஊர்களில் உள்ளவர்கள், ஒரே நேரத் தில் கணினி வழியாகக் கூடிப் பேசல். அவர்கள் ஒரிடத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இத்தகவல் தொடர்பில் பயன்பாட்டு நிரல்களிலுள்ள தரவுகள் மட்டுமின்றி கேட்பொலி (audio) ஒளிக்காட்சி (video) தரவு பரிமாற்றமும் இயலக்கூடியதே.

desktop enhancer : மேசைக் கணினித் திறன்கூட்டி : மைக் ரோசாஃப்ட் விண்டோஸ், மேக் ஒஎஸ் போன்ற சாளரக் காட்சி அடிப்படையிலான இயக்க முறைமைகளின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டும் மென் பொருள் தொகுப்பு. திறன் மிகுந்த கோப்பு உலாவி, இடைச் சேமிப்புப் பலகை (clipboard) மற்றும் பல்லூடக இயக்கி (multimedia player) போன்ற வசதிகள் இதில் அடங்கும்.

desktop file : மேசைக் கணினிக் கோப்பு : ஆப்பிள் மெக்கின் டோஷ் இயக்க முறைமையில் ஒரு வட்டிலுள்ள கோப்புகளின் விவரங்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்பு. இக்கோப்பு மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

desktop management interface : கணினிவழி மேலாண்மை இடைமுகம.

desktop publishing (DTP) : மேசைப்பதிப்பு வெளியீடு (டி. டீபீ) : மேசைப் பதிப்புத் தொழில்நுட்பம் வெளியீட்டாளர்களும், அச்சகங்களும் பயன்படுத்துவதற்கு, ஒளிப்பதிவு செய்வதற்கு ஆயத்தமான நிலையில் ஆவணங்களைத் தயாரிக்கும் கணினி இயக்கப்பொறியமைவு.

desktop publishing package : மேசை வெளியீட்டுத் தொகுதி : உருவமைப்பு வரைபடங்கள், படங்கள் ஆகியவற்றை வாசகர்கள், தலைப்புகள் ஆகியவற்றுடன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடிய வாசகமும், வரைகலை நுட்பங்களும் இணைந்த மென்பொருள். எடுத்துக்காட்டு : பக்க வடிவமைப்பி (பேஜ் மேக்கர்), வெஞ்சுரா, குவார்க் எக்ஸ்பிரஸ்.

desktop publishing system : மேசை வெளியீட்டுப் பொறியமைவு : படங்கள், பல்வேறு எழுத்து முகப்புகளுடன் அச்சிட்ட வாசகங்கள் ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமான பக்கவடிவமைப்புகளை உருவாக்கக் கூடிய புறநிலைச் சாதனங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு பொறியமைவு.

desktop system : மேசைப் பொறியமைவு : ஒர் அலுவலக மேசையில் முழுமையாகப் பொருந்தக்கூடிய ஒரு கணினி.

desktop video : மேசைக் கணினி ஒளிக்காட்சி : ஒளிப்படங்களைத் திரையிட சொந்தக் கணினியைப் பயன்படுத்துதல். ஒளிக் காட்சிப்படங்களை ஒளிக்காட்சிச் சுருளில் பதிவு செய்யலாம் அல்லது லேசர் வட்டுகளில் பதியலாம் அல்லது படப்பிடிப்புக் கருவி மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதியப்பட்ட படங்களை ஒளிக்காட்சிப் இலக்கமுறை (digital) வடிவில் அனுப்பி ஒரு பிணையத்தின் மூலம் நிகழ் படக் கலந்துரையாடலில் பயன் படுத்திக் கொள்ள முடியும்.

despatch : அனுப்பு : destination:சேருமிடம்:இலக்கு ஒரு தரவு மாற்றல் இயக்கத்தின்போது தரவுகளைப் பெறுகின்ற சாதனம் அல்லது முகவரி.

destination disk:இலக்கு வட்டு.

destination file:சேரிடக் கோப்பு.

destination,object:இலக்கு'.

destructive memory:அழிவுறு நினைவுப் பதிப்பி: படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும்.

destructive operation:சிதைப்புச் செயல்பாடு; அழிப்புச் செயல்பாடு.

destructive read:அழித்திடும் படிப்பு: சிலவகை நினைவக அமைப்புகளின் பண்பியல்பு. நினைவக இருப்பிடத்திலுள்ள தகவலைப் படிக்கும்போது அத்தகவல் செயலிச் சில்லுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.ஆனால் நினைவகத்தி லுள்ள தரவு அழிக்கப்பட்டுவிடும்.இத்தகைய நினைவக அமைப்பில் அழிக்கப்பட்ட இடத்தில் தக வலை மறுபடியும் எழுதுவதற்கு தனிச்சிறப்பான நுட்பம் தேவைப்படும்.

destructor அழிப்பி;சிதைப்பு:பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு.

detachable keyboard:பிரிக்கக் கூடிய விசைப்பலகை: காட்சித் திரை அல்லது வட்டு அலகுபோல ஒரே அமைப்பில் சேர்த்து உருவாக்கப் படாத விசைப்பலகை ஒரு கம்பியின் மூலம் கணினியுடன் இணைக்கப்பட்டு காட்சித்திரையை வைப்பதில் அதிக வசதியைத் தருகிறது.

detail:விவரம்:பெரியகோப்பு அல்லது வரைபடத்தின் சிறிய பிரிவு.

detail band:விவரக் கற்றை.

detail diagram:விவர வரைபடம்: ஹிப்போவின் (HIPO) ஒரு மாடுலில் (module) பயன்படுத்தப்படும் தரவுப் பொருள்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைக் குறிப்பிடும் வரைபடம்.

detail file:விவரக் கோப்பு: தற்காலிகத் தகவலைக்கொண்ட கோப்பு.ஒரு குறிப்பிட்ட நேரத் தில் நடைபெற்ற மாற்றங்களைக் கொண்ட பதிவேடுகள் போன்றவை,தற்காலிகத் தகவலாகக் கொள்ளப்படுகின்றன. detail flowchart : விவர வரைபடம் : ஒரு குறிப்பிட்ட நிரலாக்கத் தொடருக்குள் தேவைப்படும் செயலாக்க நிலைகளை குறிப்பிடும் வரைபடம்.

detail line : விவர வரி : செய்முறைப்படுத்தப்படும் ஒவ்வொரு பதிவேட்டையும் கண்காட்சியாகக் காட்டுகிற வரி.

detail printing : விவர அச்சிடல் : கணினிக்குள் படித்து அனுப்பப்படும் ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவரி அச்சிடப்படும் இயக்கம்.

detail report : நுணுக்க அறிக்கை : அச்சிட்ட அறிக்கை. இதில் ஒவ்வொரு வரியும் படித்து முடித்த உள்ளீட்டுப் பதிவேட்டை ஒட்டியே அமையும்.

detail view : விளக்கமான பார்வை;விளக்கக் காட்சி.

detection : கண்டுபிடித்தல் : ஒரு சிக்கலைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் ஒரு நிகழ்வை அமைதியாகக் கண்காணிப்பது.

determinant : தீர்வுப்பண்பு : தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஓர் அட்டவணையில் ஒரு பண்புக்கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கறு அல்லது பண்புக் கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்கு மாயின், அத்தகைய பண்புக்கூறு/கூறுகளை தீர்வுப் பண்பு என்கிறோம். சார்ந்து நிற்கும் பண்புக்கூறு/கூறுகளை சார்புப் பண்பு எனலாம்.

determinism : முன்னறி திறன் : கணினிவழிச் செயல்பாடுகளில், பலன் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும் திறன். ஒரு செயலாக்க முறைமையில் தரவு எவ்வாறு கையாளப்படும் என்பதை முன்கூட்டி அறிதல். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட உள்ளீடுகளைத் தரும்போது, குறிப்பிட்ட வெளியீட்டையே எப்போதும் தரக்கூடிய பாவிப்பு (Simulation) முன்னறியக்கூடிய பாவிப்பு (A Deterministic Simulation) எனப்படுகிறது.

deterministic model : முடிவு செய்யும் கருவி; உறுதியாக்கும் கருவி மாதிரி : நேரடியான காரண-விளைவுத் தொடர்புகளையும் தெரிந்த நிலையான மதிப்புகள் உள்ள தரவுகளைப் பற்றியும் ஆய்வு நடத்த உதவும் கணித மாதிரி.

developer : உருவாக்குபவர்.

developer's toolkit : உருவாக்கக் கருவித் தொகுதி : ஒரு பயன்பாட்டுச் செயல்முறையை ஒரு குறிப்பிட்ட சூழலுடன் இணைப்பதற்கு செயல்முறைப்படுத்து வதில் பயன்படுத்தப்படும் மென்பொருள் நிரல்கூறுகளின் தொகுதி.

development : உருவாக்கம்.

development engine : மேம்பாட்டு எந்திரம் : தரவு ஆதாரத்தை மேம்படுத்தவும், பேணிவரவும் தரவுப் பொறியாளருக்கும் மேலாண்மை வரம்புப் பொறியாளருக்கும் உதவுகிற எந்திரம்.

development cycle : உருவாக்கச் சுழற்சி : உருவாக்கப் படிநிலை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக்கொணர்வது முடிய, இடைப் படும் பல்வேறு செயலாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், முன்மாதிரி உருவாக்கம், நிரலாக்கம், சரிபார்ப்பு, நிறுவுதல், பராமரிப்பு போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளன.

developement library support : உருவாக்க நூலக உதவி;உருவாக்க உதவி நூலகம்.

development life cycle : உருவாக்க காலச் சுழற்சி.

developement support library : உருவாக்க உதவி நூலகம்.பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குபவர்களுக்கு உதவும் மென்பொருள் நிரல் தொகுதிகள். நிரலாக்கத் தொடர் அமைக்கும் நூலக அமைப்பு ஒன்று மூலக்கோடு மாற்றுதல், சோதனை தரவுத் தொகுதிகள், விளக்க ஆவணங் கள் போன்ற நிரலாக்கத்தொடர் வைத்திருந்து மனிதர்களின் பங்கு இல்லாமல் தானியங்கியாக செயல்படும் வசதி. கணினி மற்றும் மனிதர் படிக்கும் வடிவத்தில் நிரலாக்கத் தொடர்கள் மற்றும் சோதனைத் தரவுகளையும் புதுப்பித்து வைத்திருக் கிறது. எழுத்தர் முறை கணக்கு வைத்திருக்கும் இயக்கங்களிலிருந்து நிரல் தொடர் பணிகளைப் பிரித்து வைத்திருப்பது போன்று அலுவலக மற்றும் கணினி நடைமுறைகளின் தொகுதிக்கு ஏற்ப நூலகம் ஒன்றை வைத்திருக்கும் நூலக அமைப்பு.

development system : உருவாக்க அமைப்பு : ஒரு குறிப்பிட்ட நுண் செயலாக்கத்திற்கான திறன் மிக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன் பாடுகளுக்குள் தேவையான சக்திகள் கொண்ட கணினி அமைப்பு. இதில் துண்கணினி, முகப்பு, அச்சுப்பொறி, வட்டுச் சேமிப் பகம், ப்ராம் (Prom) நிரலாக்கத் தொடர்பொறி மற்றும் மின்சுற்று உருவாக்கி போன்றவை இதில் அடங்கும்.

development time : உருவாக்க நேரம் : புதிய நிரலாக்கத்தொடர் அல்லது மென்பொருளின் பிழையை நீக்கத் தேவைப்படும் நேரம்.

development tools : உருவாக்கக் கருவிகள் : உருவாக்க நிரலாக்கத் தொடர்கள் மற்றும் / அல்லது வன்பொருள் அமைப்பு பயன்படுத்து வதற்காக உருவாக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் உதவிச் சாதனங்கள்.

device : சாதனம் : கருவி : 1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட எந்திர அல்லது மின்சார சாதனம், 2. கணினி மின் வெளிப்புறப் பொருள். 3. கணினிக்குள்ளே அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவி.

device address : சாதன முகவரி : ஒரு கணினியின் ரேம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச்சாதனத் தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப் பிடம். துண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக் கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச்சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும்.

device cluster : சாதனத் தொகுதி : தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டுப் பொறியுடன் பங்கு கொள்ளும் முகப்புத் தொகுதி அல்லது பிற சாதனங்கள்.

device code : சாதனக்குறியீடு : ஒரு குறிப்பிட்ட உள்ளீடு அல்லது வெளியீட்டுச் சாதனத்திற்கான எட்டு துண்மிக் குறியீடு.

device, communication : தரவு தொடர்புச் சாதனம்.

device dependent : சாதனம் சார்ந்த : ஒரு நிரலாக்கத்தொடர் அல்லது ஒரு குறிப்பிட்ட கணினியுடன் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி அல்லது அச்சுப்பொறி அல்லது மோடெம் போன்ற ஒரு குறிப்பிட்ட வெளிப்புறப் பொருள். உள்ளீடு அல்லது வெளியீட்டுடன் பயன்படுத்தப்படவில்லை யென்றால் செயல்படாதது .

device, direct access storage : நேரணுகு சேமிப்பகச் சாதனம்.

device driver : சாதன இயக்கி : ஒரு கணினியின் தவறுகை அடைவினை, முக்கியமாக நினைவுப் பதிப்பி எவ்வாறு நிருவகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து உயர்த்துவதற்கு அல்லது மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் பயன்பாட்டுச் செயல்முறை.

device, external : புறச் சாதனம்.

device flag : சாதனக் குறி : ஒரு சாதனத்தின் தற்போதைய தகுதியைப் பதிவு செய்யும் ஒரு துண்மிப் பதிவு.

device header : சாதனத் தலைப்பு : ஒரு DOS சாதன இயக்கி நிரல்கூறில், சாதனத்தை அடையா ளங் காட்டுவதற்குள்ள தொடக்கப் பகுதி.

device independence : சாதன சுதந்திரம் : உள்ளீடு/வெளியீடு சாதனங்களின் தன்மைகளின்றி உள்ளீடு/வெளியீடு இயக்கத்தின் நிரலை அளிக்கும் திறன்.

device, intelligent : நுண்ணறிவுச் சாதனம்.

device, input : உள்ளீட்டுச் சாதனம்.

device interrupt handler : சாதன இடையீட்டுக் கைப்பிடி : ஒரு சாதன நிரல்கூறுவின் உடற் பகுதி. இது சாதன இயக்கிச் செயற்பணிகளைக் கொண்டு செல்கிற குறியீட்டினைப் பற்றி வைத்துக் கொள்கிறது.

device manager : சாதன மேலாளர் : ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (configuration settings) பார்வையிடவும் மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (Interrupts) அடிப்படை முகவரிகள், நேரியல் (Serial) தகவல் தொடர்பின் அளபுருக்களை (Parameters) பார்க்க வோ;மாற்றவோ முடியும்.

device media control language : சாதனத் தரவுத் தொடர்புக் கட்டுப்பாட்டு மொழி : ஒரு தரவு தளத்தை ஒரு வட்டுச் சேமிப்புச் சாதனத்தின் மீது வரைவதற்குத் தரவுத்தள நிர்வாகி பயன் படுத்தும் மொழி.

device mode : சாதனக் கணு.

device name : சாதனப் பெயர் : ஐபிஎம் தனிமுறைக் கணினி (Personal computer) அல்லது 3840 மாடல் வட்டு அலகு போன்ற ஒரு வகையான சாதனத்தின் பொதுப்பெயர்.

device number : சாதன எண் : ஒரு குறிப்பிட்ட புறநிலைச் சாதனத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஓர் எண். இது கணினியில் அச்சாதனததை அடை யாளங்காணப் பயன்படுத்தப்படுகிறது. device options : சாதன விருப்புத் தேர்வுகள்.

device strategy : சாதன உத்தி : ஒரு சாதன இயக்கி நிரல்கூறின் ஒரு பகுதி. இது, இயக்கியை வேண்டுகோள் தலைப்புடன் இணைக்கிறது. இந்தத் தலைப்புத்தான், இயக்கியை நிருவகிப்பதற்கு 00S உருவாக்குகிற நிலையளவுருக்களின தொகுதி யாகும்.

devorak keyboard : துவோரக் விசைப்பலகை.

DIA : டயா;டிஐஏ : 'ஆவணப் பரிமாற்றக் கட்டு மானம்'என்று பொருள்படும் Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழு த்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறை மைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA), ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினி களுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங் களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழிமுறை களை டயா வரையறுத்துள்ளது.

diacritical mark : பிரித்தறிக் குறியீடு : ஒலிபிரித்தறி அடையாளம் : ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படு கின்றன.

diagnosis : குறைகண்டறிதல் : பழுதறிதல் : கணினி கருவியிலோ அல்லது நிரலாக்கத் தொடர் மற்றும் அமைப்புகளிலோ உள்ள பிழை அல்லது கோளாறுகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறை.

diagnostic : ஆய்ந்தறிதல் : பழுதறிதல்.

diagnostic board : குறைகுறி பலகை : பழுதிற பலகை : குணங் குறிகாண் சோதனைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள விரிவாக்கப் பலகை. இது, தனது சொந்தப் படிப்பியின் வாயிலாக முடிவு களை அறிவிக்கிறது. இதன் மூலம் கணினியின் தவறான செயற்பாட்டினைச் சோதனை செய்ய லாம்.

diagnostic compiler : பழுதறி தொகுப்பி, பழுதறி மொழிமாற்றி.

diagnostic message : குறைகுறி காண் செய்தி : பழுதறி செய்தி : முறையற்ற நிரல்களை ஒரு செயல்முறையாளருக்குச் சுட்டிக் காட்டுகிற, கணினி உருவாக்கும் குறிப்புகள்.

diagnostic programme : பழுதறி நிரல்.

diagnostic routine : குறை கண்டறியும் செயல்முறை : பழுதறி செயல்முறை : மையச் செயலக அலகு அல்லது ஒரு வெளிப்புற சாதனத்தின் கோளாறினைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்படும் வழக்கச் சொல்.

diagnostics : குறை அறிவிப்பு : ஒரு கணினி தானாகவே அச்சிட்டு அதனைப் பயன்படுத்து வோருக்கு அனுப்பும் செய்திகள், பிழைச் செய்திகள் எனப்படும் தவறான ஆனைகளையும், அளவைப் பிழைகளையும் இது குறிப்பிடுகிறது.

diagnostic tracks : குறைகுறி காண் தடங்கள் : பழுதறி தடங்கள் : சோதனை நோக்கங்களுக்காக இயக்கியினால் அல்லது கட்டுப்பாட்டாளரால் பயன்படுத்தப்படும், ஒரு வட்டு மீதான தனித் தடங்கள். நினைவுப் பதிப்பி, விசைப்பலகை, வட்டு கள் போன்ற வன்பொருள் அமைப்பிகளைச் சோதனை செய்வதற்கான மென்பொருள் நிரல்கூறுகள் சொந்தக் கணினிகளில் இவை படிப்பதற்கு மட்டுமான நினைவுப் பதிப்பியில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுத் தூண்டிவிடப்படுகின்றன.

diagram : வரைபடம் : இயக்கங்கள் அல்லது வழக்கச் செயல்களை வரிசை முறையில் குறிப் பிடல்.

diagram; block : தொகுதி வரைபடம்.

diagram, circuit : மின்சுற்று வரைபடம்.


diagram, flow : பாய்வு வரைபடம்.

diagram, network : பிணைய வரைபடம்.

diagram, ) wiring : கம்பிச் சுற்று வரைபடம்.

dialect : கிளைமொழி : பேச்சு மொழி : பேசிக் அல்லது பாஸ்கல் போன்ற சில அடிப்படை மொழி களில் சிறு மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்ட ஒரு கணினி மொழி. அதே மொழியில் இருந்து உருவாக்கப்பட்ட பிற பேச்சு மொழிகளிலிருந்து இது மாறுபட்டிருக்கும்.

dialing properties : எண் சுழற்று பண்புகள்.

'dialing system : சுழல்வட்டு இயக்கு முறை.

dialog : உரையாடல் : ஒரு கணினிக்கும், மனிதனுக்கும் இடையே நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சி.

dialog box : உரையாடல் கட்டம்/சட்டம் : பயனாளருக்கு பல்வேறு வினாக்களை அல்லது மாற்றுகளைக் கூறும் ஒரு பட்டியல். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் சிலவற்றுக்குப் பயன் படுத்துபவர் பதிலளிப்பார். (இதனாலேயே உரையாடல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) பிறகு முக்கிய பட்டியலுக்கு அல்லது முந்திய/ அடுத்த பணிக்குச் செல்கிறார்.

dialogue management : உரையாடல் மேலாண்மை.

dialogue window : உரையாடல் சாளரம்;சொல்லாடற் பலகணி.

dials : சுட்டுமுகப்பு;அளவு சுட்டு முகப்பு.

dial-up : தொலைபேசி இணைப்பி : செய்தித் தரவுத் தொடர்புகளில், தொலைபேசி இணைப்பி பயன்படுத்தி அல்லது அழுத்தும் பொத்தான் தொலைபேசியைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தொலை பேசி அழைப்பு ஏற்படுத்துவது.

dial up access : தொலைபேசி வழி அணுகல் : ஒரு தகவல்தொடர்புப் பிணையத்துடன், தொலைதொடர்புத் துறையினரின் தொலைபேசி வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு.

dialup adapter : தொலைபேசி வழித் தகவி.

dial-up IP : தொலைபேசிவழி ஐ. பீ.

dial-up-line : தொலைபேசி இணைப்புத் தொடர்;அழைப்பு வழி : செய்தி தரவுத் தொடர்புகளை பரிமாற்றும் ஊடகமாகப் பயன்படுத்தப்படும் சாதாரண தொலைபேசிக் கம்பித் தொடர்.

dial-up modem : தொலைபேசி மோடம்.

dial-up-network : தொலைபேசி வழி தொடர்பு கொள்ளும் இணையம் : அரசினால் முறைப் படுத்தப்பட்டு இணைய சேவையாளர்களால் நிருவகிக்கப் படும் தொலைபேசி வழி தொடர்புபடுத்தும் இணையம்.

dial-up networking : தொலைபேசி பேசி வழி பிணைப்பு : தொலைபேசி வழி இணைப்புப் பெறும் பிணையம்.

dial-up service : தொலைபேசி அணுகல் சேவை : உள்ளுர் அல்லது உலகளாவிய பொது மக்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனம், இணையம் (Internet), அக இணையம் (Intranet) ஆகியவற்றை அணுகுவதற்கு வழங்கி வரும் சேவை. செய்திச் சேவைகளையும், பங்குச் சந்தை விவரங்களையும் அணுக இச் சேவை துணைபுரியும்.

diary management : நாட்குறிப்புப் பதிவு மேலாண்மை.

diazo film : 'டியோசோ சுருள்' : நுண் சுருள் படிகள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் படச்சுருள். இது, புறவூதா ஒளியில் மூலப்படச்சுருள் முன் காட்டப்பட்டு, ஒரு மாதிரியான படிகள் உருவாக்கப்படுகின்றன. படியின் ஊதா, ஊதா-கருப்பு அல்லது கருஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

DIB : டிப்;டிஐபி : 1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும் Device Independent Bitmap என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென்பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்தப் பயன்பாட்டில் தோற்றமளிப்பது போலவே இன்னொரு பயன் பாட்டு மென்பொருளிலும் காண்பதற்கு ஏதுவான கோப்பு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட படம். 2. கோப்பகத் வண்ணம் தகவல் தளம் என்று பொருள்படும் Directory Information Base என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 முறைமையில் பயனாளர்கள் மற்றும் வளங்களின் பெயர்களைக் கொண்ட ஒரு கோப்பகம். இந்தக் கோப்பகம், ஒரு கோப்பக வழங்கன் முகவரால் (Directory Server Agent-DSA) பராமரிக்கப்படுகிறது.

dibble : தரவு குலைவு.

dibit : இருதுண்மி;டிபிட் : கீழ் வரும் இரும எண் வரிசை முறைகளில் ஏதாவது ஒன்று : 00, 01, 10 அல்லது 11.

dichotomizing search : இருமையாக்கும் தேடல் :

dictionary : அகராதி;அகர முதலி : ஒரு செயல்முறையில் பயன்படுத்தப் படும் முகப்புச் சீட்டுகள் அல்லது விடைக் குறிப்புகளையும், அவற்றின் தருக்க முறையான பொருள் விளக்கங்கள் பற்றிய ஒரு விவரிப்பினையும் கொண்டுள்ள ஒரு பட்டியல்.

dictionary, automatic : தானியங்கு அகரமுதலி.

dictionary programme : அகராதி நிரலாக்கத்தொடர் : எழுத்துப் பிழை சோதனை செய்யும் நிரலாக்கத் தொடர். சொல் செயலாக்க அமைவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

diddle : டிடில்;தரவுக் குலைப்பு : தரவுகளை மாற்றுதல்.

die : அச்சு : மின்மப் பெருக்கிகள் அல்லது ஒருங்கிணைந்து மின் சுற்றுகளை உருவாக்கும் போது துண்டாக்கப்படும் அல்லது அறுக்கப்படும் வட்ட வடிவ அரைக்கடத்தி சிலிக்கான் தகட்டின் மிகச்சிறிய நாற் கோணத் துண்டு.

dielectric : மின்தாங்கு பொருள் : மின் விசையைக் கடத்தாமல், மின்விசை விளைவுகளை மட்டும் கடத்தக்கூடிய கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் முதலிய பொருள்கள்.

DIF : டிஐஎஃப் : Data InterChange Format என்பதன் குறும்பெயர். தரவுக் கோப்புகளுக்கான ஒரு குறிப்பிட்ட தர நிர்ணயம். எதிர் காலத்தை உரைக்கும் பல நிரலாக்கத்தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மென்பொருள் தொகுதியில் உருவாக்கிய கோப்புகளை முற்றிலும் வேறுபட்ட ஒரு நிறுவனம் உருவாக்கிய வேறு ஒரு மென்பொருளில் படிக்கப்படுவது.

difference : வேறுபாடு : ஒன்றைவிட மற்றொரு எண் அல்லது அளவு அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் அளவு.

difference engine : வேறுபாட்டு எந்திரம் : 1822இல் சார்லஸ் பாபேஜ் வடிவமைத்த எந்திரம். வேறுபாட்டு முறை என்னும் கணக்கிடும் செயலை இதில் எந்திரப்படுத்தினார்கள்.

differential : வேறுபாட்டளவை : மின்னணுவியலில் ஒரு குறிப்பிட்ட வகை மின்சுற்றைக் குறிப்பிடுகிறது. இந்த மின்சுற்று இரண்டு சமிக்கைகளுக் கிடையே உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும். வருகின்ற ஒர் உள்ளிட்டு சமிக்கையை வேறொரு உள்ளிருப்பு மின் அழுத்தத்துடன் ஒப்பிடாது.

differential analyzer : வேறு பாட்டளவையியல் பகுப்பாய்வுக் கருவி : வேறுபாட்டளைவையியல் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண வான்னேவார் புஷ் (MIT, 1930களில்) உருவாக்கிய ஒத்தியல்புக் கணிப்புச் சாதனம். இவை 12 எண்ணிக்கைக்குக் குறைவாகவே தயாரிக்கப்பட்டன. எனினும், இவை இரண்டாம் உலகப்போரின் போது ஏவுகணை அட்டவணை களைக் கணிக்கத் திறம்படப் பயன்படுத்தப்பட்டன. இந்த எந்திரம் ஒர் அறை முழு வதையும் அடைத்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. முனைந்த பகுதியுள்ள சுற்றுருளை போன்ற பல்லினைகள் மூலம் இது செயல்படுத்தப் பட்டிருந்தது.

differential configuration : வேறு பாட்டளவையியல் உருவமைதி : ஓசையினையும் குறுக்குப் பேச்சுகளையும் கேட்கமுடியாத அளவுக்கு ஒவ்வொரு மின்னியல் சைகைக்கும் கம்பியினைகளைப் பயன்படுத்துதல். இது, ஒற்றை முனை உருவமைதியிலிருந்து (Single-ended Configuration) வேறுபட்டது.

differentiator : வேறுபாட்டளவி;வேறுபாட்டளவைக் கருவி : மாறு பாடளப்பான்;உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண்டிருக் கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளியீட்டு மின்அளவு, உள்ளீட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளியீட்டளவு dx/dt ஆகும்.

DF fies : டிஐஎஃப் கோப்புகள் : டிஐஎஃப் தரநிர்ணயத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கோப்புகள். பல்வேறு எந்திரங்களுக்கிடையே மாற்றிக் கொள்ளக்கூடிய கட்டு. கோப்புகள் ஏற்புடையனவாக இருந்தாலும், ஆப்பிள் டிஐஎஃப் கோப்பு வட்டினை நேரடியாக ஐபிஎம் எந்திரத்தில் படிக்க முடியாது. இந்த வட்டுகள் வெவ்வேறு எந்திரத்துக்காக வெவ்வேறு முறையில் அமைக்கப்படுகின்றன.

diffusion : பரவச் செய்தல் : சிலிக்கான் மென்தகடு போன்ற ஒரு பொருளின் மீது துய்மைக் குறைவு. அணுக்களைச் சேர்க்கும் அதிவெப்ப செயல்முறை. இவை சென்று சேரும் பொருளில் உள்ள அணுக்களை மாற்றி அதில் உள்ள பொருள்களின் தன்மையை, விரும்பும் வழிகளில் மாற்றிவிடும் நிலை சக்தி உள்ளவை. சிலிக்கானில் துய்மைக்குறைவுகளைச் சேர்க்க 900 முதல் 1, 200 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் பரவச் செய்யப் படுகிறது.

digest : சுருக்கத் தொகுப்பு : 1. இணையத்திலுள்ள செய்திக் குழுவில், இடையீட்டாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்களைக் கொண்ட தொகுப்பு. 2. ஒரு அஞ்சல் பட்டியலிலுள்ள வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பப்படும் தனித்தனிக் கட்டுரைகளுக்குப் பதிலாக அவற்றின் சுருக்கங் களைத் தொகுத்து அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தி. அஞ்சல் பட்டி யலுக்கு ஒர் இடையீட்டாளர் இருப்பின் அச்சுருக்கத் தொகுப்பு திருத்திச் சீரமைக்கப்படலாம்.

digit : இலக்கம்;எண்ணியல் : ஒரு அளவைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் எண் முறைக் குறியீடு. பதின்ம முறை யில் 0 முதல் 9 வரை பத்து இலக்கங்கள் உள்ளன.

digital ;எண்ணியல்;எண்மம்;இரு நிலை உரு;இலக்க முறை;இலக்க வகை : இயக்கம், நிறுத்தத்தினைக் குறிப்பிட 1 அல்லது 0-க்களாகத் துண்மி குறியீடு இட்டு தரவைக் குறிப்பது பற்றியது. கணினி மற்றும் செய்தித் தரவுத் தொடர்பு தொழில் நுட்பத்தில் மிகவும் இன்றியமையாதது.

digital audio tape : இலக்கமுறை ஒலிநாடா.

digital audio/video connector : இலக்க முறை கேட்பொலி) /ஒளிக் காட்சி இணைப்பி : சில உயர்திறன் ஒளிக்காட்சி அட்டைகளிலும் (தொலைக்காட்சி டிவி) தடத்தேர்வு அட்டைகளிலும் இருக்கும் இடைமுகம். இதன் மூலம் இலக்கமுறை கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி சமிக்கைகளை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். டிஏவி இணைப்பி எனக் சுருக்கமாவும் அழைப்பர்.

digital camera : இலக்கமுறைப் படப்பிடிப்புக் கருவி : எண்ணுருப் படமாக்கி : வழக்கமான ஃபிலிமிற்குப் பதிலாக மின்னணு முறையில், பட உருவங் களைப் பதிவுசெய்யும் கருவி. இக் கருவியில் மின் எற்றப்பட்ட சாதனம் (Charge-Coupled Device-CCD) உள்ளது. இயக்குநர், படக் கருவியின் மூடியைத் திறக்கும் போது, லென்ஸ் வழியாக படஉருவத்தை சிசிடி உள் வாங்கு கிறது. பிறகு அப்பட உருவம், படக் கருவியின் உள்ளே இருக்கும் நிலை நினைவகம் அல்லது நிலைவட்டில் சேமிக் கப்படுகிறது. படக்கருவியுடன் தரப்படும் மென்பொருளின் உதவியுடன் பதியப்பட்ட பட உருவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருடுபொறி மற்றும் அது போன்ற உள்ளிட்டுக் கருவிகள் மூலம் கணினியில் கையாளும் படங்களைப் போன்றே படப் பிடிப்புக் கருவி மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்ட படத்தையும் நாம் விரும்பியவாறு திருத்தி, சீரமைத்து வைத்துக் கொள்ளலாம். digital cassette : இலக்க ஒளிப்பேழை : தரவு சேமிப்புச் சாதனத்தின் ஒரு குறிப்பிட்ட வகை.

digital circuit : இலக்கச் சுற்று வழி : ஒர் ஒருங்கிணைந்த மின் கற்றுவழி. இது, உயர்ந்த அல்லது தாழ்ந்த மின் அழுத்தங்கள் போன்ற சைகை அளவுகளின் குறிப்பிட்ட மதிப்பளவுகளில் இயங்குகிறது.

digital clock : இலக்கக் கடிகாரம்.

digital communications : இலக்க முறை தகவல் தொடர்புகள் : மின்னணு சமிக்கைகள் மூலம் குறியீடு அளித்து தகவலைப் பரிமாறுதல்.

digital computer : இலக்கமுறை கணினி : இலக்கமுறைத் தரவுகளைக் கையாண்டு அந்தத் தரவுகளில் கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்யும் சாதனம்.

digital control : இலக்கமுறை கட்டுப்பாடு : இயக்கும் சூழ் நிலைகளில் மாற்றம் இருந்தாலும் விரும்பிய வகையில் இயக்க அமைப்புகளின் நிலை யைக் கட்டுப்படுத்த இலக்கமுறை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

digital darkroom : இலக்க இருட்டறை : கறுப்பு-வெள்ளை ஒளிப்படங் களின் நுட்பத்திறனை அதிகரிப்பதற்காக சிலிக்கன் பீச் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மெக்கின்டோஷ் வரைகலைத் தொகுப்புச் செயல்முறை.

digital data : இலக்கமுறை தரவு : தொடர் வடிவத்தில் ஒத்திசைவான முறையில் தரவுகளைக் குறிப்பிடுவதற்குத் தொடர்ச்சியில்லாத முறையில் தனித்தனியாக தரவுகளைக் குறிப்பிடுதல்.

digital data service : இலக்க தரவுப் பணி : பொதுத் தரவுத் தொடர்பு சேவையாளர்களால் இயக்கப்படும் ஒரு செய்தித் தொடர்பு இணையம் (எடுத்துக் காட்டு : டெலிகாம் ஆஸ்திரேலியா). இது, இலக்கத் தரவுகளை அதிவேகத்தில் கொண்டு செல்கிறது. தரவுகள் பெரும்பாலும் கணினிக்கும், கணினியிலிருந்து புறநிலைச் சாதனங்களுக்கும், சேய்மை உணர்விகள், தொலைமானிக் சாதனங்கள் போன்றவை மூலம் கொண்டு செல்லப் படுகின்றன. இதன் சுருக்கப்பெயர்‘DDS', இதனைச் சிலசமயம் 'இலக்கத் தரவு இணையம்' (Digital Data Network-DDN) என்றும் அழைக்கின்றனர்.

digital data storage : இலக்கமுறை தரவுச் சேமிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/S&oldid=1085158" இலிருந்து மீள்விக்கப்பட்டது