பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள். டாக்டர் கால்ட் வெல் துரை " பறையர் " என்போர் முதல் எல்லோரும் திராவிடரே, வேறு பூர்வகுடிகளில்லை என்கிறார். ஆயினும் நாகரே பூர்வகுடிகள் என்று தோன்றுகிறது. கிமு. 11-வது நூற்றாண்டில் தமிழர் வந்தபிறகு நாகரும் தமிழரும் கலந்து திராவிடராயினர்.

1911 ௵ சூலை௴ 28௳ யுள்ள ரிபோர்ட்டில் சர்க்கார் சாசன சாஸ்திரவித்துவான் அடியில்வருமாறு கூறுகின்றனர். "மகாபாரதவீரன் அருச்சுனன் நாகஇராணியையும், தமிழ் நூல்களில் சோழ அரசர்களைப்பற்றி அவ்வித சங்கிதியையும், நாகர்கள் பல்லவ அரசர்களுடன் விவாகம் செய்து கொண்டதாகவும் ஏற்படும் சரித்திரங்களால் நாகர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஏற்படுகிறதுடன் வடக்கிலிருந்து வந்த அரசர்களால் ஜெயிக்கப்பட்டார்களென்றும் அப்படிவந்த அயலாருடன் விவாகங்கள் செய்து கலந்தபடியினால் நாகர் என்னும் வமிசம் மறைந்துவிட்டதாகவும் ஏற்படுகிறது. மணிமேகலையில் அடியில் கண்ட பாடலிருக்கிறது:-

"வெனறிவேற் கிள்ளிக்கு நாகநாடாள் வோன
றன்மகள் பீலிவளை தானபயந்த,
புனிற்றிளங்குழவி -"

அதாவது. "நாகநாட்டு அரசன் குமார்த்தி பீலிவளை எனபவள், ஜெயக்கொடிஏந்திய சோழன் கில்லி என்பவனுக்கு ஈன்ற இளங்குழந்தை."

இதனால் தமிழ் அரசனாகிய கில்லிக்கும் நாகநாட்டு பெண் பீலிவளை என்பவளுக்கும் விவாகம் நடந்ததாக ஏற்படுகிறது. இம்மாதிரியாக தமிழர்களும் நாகர்களும் விவாகங்கள் செய்துகொண்டு கலப்புற்றார்கள். இவ்வகை கலந்தவர்கள் சமபூமியில் உள்ளவர்தான். அம்மாதிரி கலக்காதவர் மலைகளில் இன்னு மிருக்கின்றனர். நீலகிரியிலுள்ள தோ-