பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின்வடமேற்கு கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் வந்து இந்தியாவில் விந்தியபர்வதத்திற்கும் நர்மதைக்கும் வடக்கில் தாங்கள் பெயரிட்ட "ஆரியவர்த்தம" என்கிற பாகத்தில நெடுங்கால மிருந்தனர். இவர்கள் பூர்வீக சாஸ்திரங்களின் படி ஆரிய வர்த்தத்தைவிட்டு தென்புறம் வரத்தகாதவா. தென்னிந்தியாவில் தமிழர்கள் ஆரியருக்கு இடங்கொடாமல தாங்கள் தமிழ் தெலுங்கு முதலிய திராவிட பாஷைகளைப் பேசிக்கொண்டு சுயாசசியாய் நெடுங்கால மிருந்தனர் இத்திரா விடர் ஜாதிகுல வேறுபாடுக ளற்றவர்களாய் ஒருவரோடொ ருவர் விவாகம பிரிகிபோசனம் முதலியவைகள் எவ்வித ஆக்ஷேபனையுமன்றி செய்து கொண்டும், பிரதேசங்களுக்கு கப்பல யாததிரை சென்று வியாபார முகலிய துசெய்தும் கல்வியிற் சிறந்தவர்களாகவும் அதிக நாகரீக முடையவர்களா வுமிருந்தார்கள். இத்திராவிடராஜ்ஜியங்களைப்பற்றி மனுதர்ம சாஸ்திரத்திலும் ஆரியர் புராணமாகிய ராமாயணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. திராவிட நாட்டின் சிறப்பைப் பற்றியும் அவர்கள் நாகரீகததைப்பற்றியும் இராமாயணத்தி லேயே பரக்கக் காணலாம். இவ்வண்ணம் சிறப்புற்று சுத்த சைவசீலராய் கோதரத்துவம் நிறைந்து சுகமாய் வாழ்ந்து வந்த நாட்டிற்கு ஆரியா முதலில் யாத்திரைப் பிரயாணிக ளாக வந்தனர். அவர்களுக்கு திராவிடர் மிலேச்சர் என்று பெயரிட்டனர். பண்டைகாலத்து நிகண்டுகள், திவா கரம், பின்கலந்தை முதலியவைகளில் ஆரியர் என்ப தற்கு "மிலேச்சர் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாரியரில் சிலராவது அனுசரித்துவந்த ஆசாரங்களும் நடத்தைகளும் திராவிடர்களின் நடவடிக்கைகளுக்கு தாழ்ந் திருந்தமையால் அம்மாதிரி " மிசேச்சர் என்று பெயரிட் டிருக்கவேண்டும். சமஸ்கிருத பாரதத்திலேயே சிந்துநதி