பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 15


Award of Black Mark : பிழைக் குறியீடு அளித்தல்

Award of Certificate : சான்றிதழ் வழங்கல்

Award of Red Entry : திறமைக் குறியீடு வழங்கல்

Ayacut : ஆயக்கட்டு ; பாசனப் பரப்பு

Ayah : பணிப்பெண்; ஆயா

Ayurvedic System : ஆயுர்வேத மருத்துவமுறை

[B]

Backspace : பின் நகர்வு

Backup copy : காப்பு நகல்

Bacteriology : நுண்மவியல்

Bad Debt : வாராக் கடன்

Bad Debt fund : வாராக் கடன் நிதி

Bad Debt Reserve : வாராக் கடனுக்கான ஒதுக்கீடு

Badge : குறியீட்டுச் சின்னம்

Balance as his credit : அவரது கணக்கில் உள்ள இருப்பு

Balanced Budget : சமநிலை வரவு செலவுத் திட்டம்

Ballot Box : வாக்குப் பெட்டி

Ballot paper : வாக்குச் சீட்டு

Bandage : கட்டுத் துணி; துணிப்பட்டை

Banian : உள்ளங்கி

Bank Deposit : வங்கி வைப்புத் தொகை ; வங்கி இருப்புத் தொகை

Bank Draft : வங்கிப்பணக் கொடுப்பாணை

Bank Notes : வங்கிப் பணமுறி

Banner Headline : நாளிதழில் முழுநீளப் பேரெழுத்துத் தலைப்பு

Banqueting hall : விருந்து மண்டபம்

Baptism : பெயரிடு விழா : திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு

Barbed wire : வரிமுட் கம்பி ; வரிமுள் கம்பி

Bar code : பட்டைக் குறிமுறை

Bar Council : வழக்குரைஞர் கழகம்; வழக்கறிஞர்கள் பெருமன்றம்

Barracks : பாளையம் (படைக் குடியிருப்பு)