பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 21


Cancelling of Licence : உரிமம் நீக்கல்

Cancer Institute : புற்று நோய் நிலையம்

Candidate : வேட்பாளர்; பணிக்கு விண்ணப்பிப்பவர்; தேர்வு நாடுபவர்

Canon : சட்டம் ; நெறிமுறை

Canon-Law : கிறித்துவ சமயச் சட்டம்

Canons of Financial Propriety : நீதி ஒழுங்கு நெறிமுறை

Canteen : (பணிமனைச்) சிற்றுண்டிச்சாலை

Cantonment : பாளையம்

Canvassing Agent : ஆதரவு நாடும் முகவர்

Capital : முதல் ; தலைநகர்; மூலதனம்

Capital Account : முதலீட்டுக் கணக்கு

Capital Cost; Capital Expenditure : முதலீட்டுச் செலவு

Capital Goods : முதலீட்டுச் சரக்கு

Capital levy : முதலீட்டு வரி

Capital Offence : கொலைக் குற்றம்

Capital Outlay : முதலீட்டுத் தொகை

Capital Punishment : மரண தண்டனை

Capitation allowance : தலைவீதப்படி; ஆளினர் வீதப்படி

Capitation tax : ஆளினர் வீத வரி

Car : சீருந்து; வண்டி; தேர்; தொடர் வண்டிப் பெட்டி; இரயில் பெட்டி

Car advance : சீருந்து முன்பணம்

Carbon paper; Carbon sheet : கரிப்படி தாள்; மைபடி தாள்

Card : அட்டை

Card Board : மெல்லிய அட்டை; அட்டைத் தாள்

Career : வாழ்க்கைப் போக்கு; வாழ்க்கைத் தொழில்; பிழைக்கும் வழி

Career for woman : மகளிர்க்கான தொழில்

Care Home : காப்பு இல்லம்

Care take Government : காபந்து அரசாங்கம்

Care taker : பொறுப்பாளர்

Cargo : கப்பல் சரக்கு

Car Park : சீருந்து நிறுத்துமிடம்

Carpentry unit : தச்சு வேலைப் பிரிவு