பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

கேட்கிறார். அதற்கு வேண்டிய பொருள் தன்னிடம் இல்லையே என்றதும், 'பரவாயில்லை வீட்டில் கிடக்கிற இரும்பு, செம்பு, ஈயம், பித்தளை எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டுவா' என்கிறார். அத்தனையையும் அன்றிரவே புடம் போட்டுத் தமது ரஸவாதத் திறமையினால் எல்லாவற்றையும் நல்ல உலோகமாக்கிக் கொடுக்கிறார்; வந்த சித்தர் மறைந்து விடுகிறார் பின்பு கிடைத்த உலோகத்தால் பொன்னனையாள் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு இறைவனது திருவுருவை வடிக்கச் சொல்கிறாள். அப்படிச் சிற்பி வடித்த படிமமும் மிக்க அழகுடையதாக அமைந்து விடுகிறது. அந்த அழகைக் கண்டு ஆனந்திக்கிறாள். அந்த அழகிய பிரானது கன்னத்தைத் திருகி முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள். இப்படி அழகை அனுபவித்த பொன்னனையாளைப் பரஞ்சோதியார்,

மழவிடை உடையான் மேனி
வனப்பினை நோக்கி அச்சோ!
அழகிய பிரானோ என்னா
அள்ளிமுத்தங் கொண்டு அன்பில்
பழகிய பரனை யானும்
பரிவினால் பதிட்டை செய்து
விழவுதேர் நடத்திச் சின்னாள்
கழிந்தபின் வீடு பெற்றாள்,

என்று நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்படிக் கன்னம் கிள்ளிக் கொஞ்சியதால் ஏற்பட்ட வடுவுடனேயே இறைவன் இன்னும் அந்தக் கோலத்தில் இருந்து கொண்டிருக்கிறான். அப்படிப் பொன்னனையாளால் உருப்பெற்று, நகக் குறியும் பெற்ற இறைவன் இருக்கும் தலம்தான் திருப்பூவணம். அந்தத் திருப்பூவணத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருப்பூவணம், மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் பாதையில் மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. சிறிய ஊர்தான், மதுரை மானாமதுரை லயனில் சென்றாலும் திருப்பூவணம் ஸ்டேஷனில் இறங்கிச் செல்லலாம். மெயின் ரோட்டுக்கு வடப்புறம் ஒரு பர்லாங்கு தூரத்தில் கோயில்