பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வேங்கடம் முதல் குமரி வரை

சூரிய ஒளி பொருந்தியது. அதை யாரும் ஊனக் கண்ணால் பார்த்தல் இயலாது. ஆண்டுக்கொரு முறை மார்கழித் திருவாதிரை அன்றுதான் பழைய சந்தனக் காப்பு கழற்றட்பட்டுப் புதிய காப்பிடப்படும். அப்படிக் காப்பிடும் அர்ச்சகரும் தம் கண்களை நன்றாக மூடி, துணியால் கட்டிக் கொண்டே காப்பிடுவார். அப்படிக் காப்பிட்ட பின் தான் அந்த மூர்த்தி மற்றவர்களுக்குத் தரிசனம் கொடுப்பார். ஆம்! இறைவனை நோக்கி எவ்வளவோ காலம் தவம் கிடக்கலாம். ஆனால் அவன் நேரே நம் முன் திடீரென்று பிரத்தியட்சமாகத் தோன்றிவிட்டால் அவனுடைய திவ்ய தேஜோமயத்தை நம் கண் கொண்டு காணுவது எளிதானதா?

தமிழ் நாட்டுச் சிற்பக்கலை அழகில் ஈடுபட்ட எனக்கு, இந்த நடராஜன் ஏமாற்றத்தையே அளித்தார், சந்தனக் காப்பை ஊடுருவி அவர் உண்மை உருவை, மூர்த்தியை அவர் இருக்கும் எண்ணத்திலேயே காண முடியாத காரணத்தால். ஆனால் இந்த மாற்றத்தோடு நான் வீடு திரும்பவில்லை. இந்தச் சந்நிதியை விட்டு, பிரதான கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கு நின்று ஆடிக்கொண்டிருந்த நடராஜரைக் காணும் பேறு பெற்றேன். அற்புதமான செப்பு விக்கிரகம். 'அழகமர் திரு உரு' என்று மணிவாசகர் பாடுகிறாரே, அது இந்தத் திருவுருவைக் கண்டுதானோ என்னவோ,- அத்தனை அழகு.

இந்த நடராஜரது திருவுருவத்தைக் கண்டதோடு திருப்தி அடைகிறவனில்லையே நான். உத்தரகோச மங்கை என்ற பெயருக்கே காரணமாயிமந்த அந்த மங்கை, பூண்முலையாள், மங்களேசுவரி; கல்யாண சுந்தரியையும் காண வேண்டுமே என்று துடித்தேன். அவளும் காட்சி கொடுத்தாள்.

காரேறு கருங்குழலும், திருநுதலும்
சுடரிலை வேல் கண்ணும், கஞ்சத்
தாரேறு திருமார்பும், கரும்புருவத்
தடந்தோளும், கருணை காட்டி