பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தமிழ்ப் பழமொழிகள்


மழை பெய்கிறதும் பிள்ளை பெறுகிறதும் மகாதேவனுக்கும் தெரியா.

மழை பெய்தால் அடி மறக்காது.

மழை பெய்து அடி மறைந்தாற் போல.

(ஒடி மறைந்தாற் போல.)

மழை பெய்து குளம் நிறையுமா? பனி பெய்து நிறையுமா?

மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையும். 18180


மழை பெய்தும் கெடுத்தது. காய்ந்தும் கெடுத்தது.

(பேய்ந்ததும்.)

மழை பெய்து விடியுமா? பனி பெய்து விடியுமா?

மழை பெய்து விளைய வேணுமே தவிரப் பனி பெய்து விளையப் போகிறது இல்லை.

மழைமுகம் காணாப் பயிரும் தாய்முகம் காணாச் சேயும் வாட்டமாம்.

(பிள்ளையும்.)

மழையில் நனைந்த நாய் முடங்கிப் படுத்தது போல 18185


மழையில் போட்டாலும் நனைகிறது இல்லை; வெயிலில் போட்டாலும் காய்கிறது இல்லை.

மழையிலும் நனைய மாட்டான்; வெயிலிலும் காயமாட்டான்.

மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவரருக்கும் தெரியாது.

மழை வறண்டால் மணக்கத்தை விதை.

மழைவாய்க் கருக்கல் ஆனாலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு தாண்டாது. 18190



மழை விட்டும் தூவானம் விடிவில்லை.

மழை விழுந்தால் தாங்கலாம்; வானம் விழுந்தால் தாங்கலாமா?

மறத்தி தாலியும் பள்ளித் தாலியும் வற்றாத் தாலி.

மறதி பாராதவன் கழுதை.

மறந்த உடைமை மக்களுக்கு ஆகாது. 18195


மறந்த சடங்கை மகத்தில் விடு,

(திருமழபாடியில் மகம் விசேஷம்.)

மறந்த ததியை மகத்தில் கொடு,

மறந்து செத்தேன்; பிராணன் வா என்றால் வருமா?

(செத்தால் உயிர் வருமா?)

மறவன் உறவும் பனை நிழலும் சரி.

(போல நீடியாதன.)

மறுசாதம் போட்டுக் கொள்ளாவன் மாட்டுப் பிறப்பு. 18200