பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தமிழ்ப் பழமொழிகள்



கூடு இருக்கக் குருவி போன மாயம் என்ன?

கூடு புருவம் குடியைக் கெடுக்கும்.

கூடும் காலம் வந்தால் தேடும் பொருள் நடு மடியிலே.

கூடு முடி குடியைக் கெடுக்கும்.

கூடைக் கல்லும் பிள்ளையாரானால் எந்தக் கல்லைக் கும்பிடுகிறது? 9210


கூடை கூடையாகக் கொடுத்தாலும் குறை நீங்காது.

கூடை நகையும் குச்சிலிப் பொட்டும்.

கூடையைச் சுட்டுக் கரியாகுமா? கூந்தலைச் சுட்டுக் கரியாகுமா?

(மயிரை.)

கூண்டில் அகப்பட்ட புலிபோல்.

கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும். 9215


கூண்டோடு கைலாசம்.

கூண்டோடு போயின குளிரும் காய்ச்சலும்.

கூத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்காரிக்கு வழி இல்லை.

(கூத்தரிசிக்காரி. வழி ஏது? வழி இல்லை.)

கூத்தன் என்றும் கோழி என்றும் சொல்கிறார்களா?

கூத்தாட்டுச் சிலம்பம் படைவெட்டுக்கு ஆகுமா? 9220

(கூத்தாடி சிலம்பம்.)


கூத்தாடிக் கணவன் வயிற்றைக் கெடுத்தாள்; வாய்ப்பட்டி மாமியார் வாயைக் கெடுத்தாள்.

கூத்தாடிக்கு ஒரு குரங்கு கிடைத்தாற் போல.

கூத்தாடிக்குக் கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண்.

கூத்தாடிக்கு மீசை எதற்கு?

கூத்தாடிக்கு முறை இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை. 9225


கூத்தாடிக் குரங்கு ஆகாமலும் சூதாடித் தோற்காமலும்.

கூத்தாடிகளில் பெரியவர்; கூட்டத்தில் சிறியவர்.

கூத்தாடி கிழக்கே பார்த்தான்; கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

கூத்தாடி குண்டாகரணம் போட்டாலும் பிண்டச் சோற்றுக்கு மன்றாட்டம்.

கூத்தாடி சிநேகம் குடியைக் கெடுக்கும். 9230