தமிழ்ப் பழமொழிகள் 3/3
Appearance
சை எனத் திரியேல்.
சைகை அறியாதவன் சற்றும் சங்கதியா அறியான்.
- (சங்காத்தியா அறிவான்)
சைவத்துக்கு ஆசைப்பட்டு மரக்கறியைத் தள்ளிவிட்டேன். 11540
சைவத்தைக் கெடுக்கப் பண்டாரம்; வைணவத்தைக் கெடுக்கத் தாதன்.
சைவப் பழம், வில்வக் கிளை.
சைவம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது.
சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம்.
சைனன் கையில் அகப்பட்ட பேனைப் போல். 11545