இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆம்பியர்

விக்கிமூலம் இலிருந்து

ஆம்பியர் : மின்காந்தவியல் என்ற அறிவியல் துறையின் தோற்றத்திற்குக் காரணமாயமைந்தவர் ஆம்பியர். இவர் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நாட்டு இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.

முதன்முதலாக அர்ஸ்டெட் எனும் ஆய்வாளர் மின்சாரத்திற்கும் காந்தத் தன்மைக்குமுள்ள

ஆம்பியர்

தொடர்பைக் கண்டுபிடித்தார். இச்செய்தியும் ஆய்வும் ஆம்பியரை வெகுவாகக் கவர்ந்தது. அர்ஸ் டெட் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து மேன்மேலும் ஆராய்ச்சிகளைச் செய்யலானார். இதன் விளைவாக 'மின்காந்தவியல்’ எனும் ஒரு புதிய துறையே உருவெடுத்தது. இதன் காரணமாக மின்னோட்டத்தை அளந்தறியும் கருவி இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஒரு சுற்றில் ஏதோ ஒரு பகுதியில் ஒரு ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் தொடர்ந்து பாய்ந்தால் அது 'ஆம்பியர் மணி’ என்று அழைக்கப்படும். அக்குமுலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க ஆம்பியர் மணி பயன்படுத்தப்படுகிறது.