பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் (குறள் 635)

அறிமுகமும் பரிச்சயமும் (கிடைத்தல்)

அறியாமலும் தெரியாமலும் செய்த பிழை

அறிவுக்குப் பொருந்தாத ஆபாசங்கள்

அறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்றவர்

அறிவும் அழகும் நிரம்பியவன் (ள்)

அறிவும் அனுபவமும் உடையவர்

அறிவும் ஆண்மையுமுடையவர்

அறிவும் திருவும் செறிந்த செல்வர் அறிவுள்

அறிவை அறியுமவரும் அறியவரிய பிரமம் கடவுள் (குமர 409)

அறிவைக் கெடுக்கும் அபத்தக் களஞ்சியங்கள் அண்ணா

அறிஞர்க்கு அழகு அகத்துணர்ந்து அறிதல் (பழ)

அறிந்தும் புரிந்தும் வைத்திரு

அறியாமல் தெரியாமல் செய்த சிறுபிழை

அறிவிலும் புத்தி நுட்பத்திலும் சிறந்து விளங்கியவர்

அறிவுறுத்தித் தெருட்டல்

அறிவும் ஆற்றலும் வாய்ந்த

அறிவும் செல்வமும் ஒருங்கே செறிந்த

அறிவு நினைவு இல்லாதவன் (பே)

அறுக்கப் பொறுக்கப் பாடுபடல்

அறுதியுறுதி- அறுதிச் சீட்டு

அறைகூவி அழைத்தல்

அறைபறை யன்னர் கயவர் (குறள் 1076)

அறை முறையிடுதல்- குறை தெரிவித்தல்

அன்பர் என்புருகக் கசிந்திடுபசுந்தேன் (குமர 69)

அன்பா தரவுடன் வரவேற்றல்

அன்பின் மேம்பட்ட நண்பர் (மறைமலை)