பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

இடக்கு மடக்கு - குதர்க்கம்

இடக்கு முடக்கு - சங்கடம், இடையூறு , துன்பம்.

இடம் பொருள் ஏவல் எல்லாம் நன்றாகமைந் திருத்தல்; எல்லாம் உடையவர்

இடா முடாங்கு-ஏறுமாறு, தாறுமாறு, ஒழுங்கீனம்

இடி இடித்தென வெடிபடச் சிரித்தல் (வில்லி 3-129)

இடித்துத் தகர்த்தல்

இடித்துப் பிடித்துக்கொண்டு செல்லல் - முட்டி மோதிக் கொண்டு செல்லல் (கல்கி)

இடித்துப் புடைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுதல்

இடுக்கண்களும் இடையூறுகளும் இன்னல்களும் - (நெடுஞ்செழி)

இடுக்கு முடுக்கு - மூலை முடுக்கு இடைசாய நடைபயிலும் மடமாதர்

இடைஞ்சலும் இடுக்கணும்; இன்னல்களும் (இல்லாமல்)

இடைந்து பின் வாங்குதல்

இடையழகும் நடையழகும் உடையவள் (மின்னொளி கு)

இடையறவில்லா இன்பப் புணர்ச்சி (பெருங் 4-4-114)

இடையூறின்றி இனிது நிறைவேறல்

இடையூறும் இடுக்கணும் விளைவித்தல்

இடையூறோ இடங்காடோ இல்லாத இடம்

இணக்க வணக்கமாகப் பேசுதல்

இணை இணையாகக் கூடி வாழும் விலங்குகள்

இணைத்துக் கட்டுதல்

இணைந்து இழைந்திருத்தல்

இணைந்து உறவாடல்

இதமுண்டாக இச்சக வார்த்தைகள் பேசல்

இதயம் ஒத்து இசைதல் (வில்லி 1-25)