பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31

ஈவிரக்கம் பச்சாத்தாபம் எதுவும் இல்லாமல்

ஈவு இரக்கமின்றி அடித்தல்

ஈவு சோர்வு (- சமய சந்தர்ப்பம்) அறிந்து பேசுதல்

ஈறும் முதலும் இல்லாத இறைவன்

ஈனம் மானம் இல்லாதவன்

உச்சி உமித்துப் போதல்; உச்சி உளுத்துப் போதல்

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை

உச்சி முதல் உள்ளங்கால் வரை

உச்சிமேல் வைத்து மெச்சுதல்

உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்

உடம்பு உலர்ந்து மெலிந்து போயிருத்தல்

உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்தல்

உடல் புளகித்து உள்ளம் எலாம் உருகி நிற்றல் - (வில்லி 11-246)

உடல் பொருள் ஆவியைக் கொடுத்து உழைப்பவர்

உடல்பொருள் உயிர் மூன்றையும் அளித்தல்

உடல் நலிந்து மெலிந்து வருந்துதல்

உடலுருகி ஊனுருகி உளம் உருகி நிற்றல் (கல்கி)

உடை நடையால் உயர்வு தாழ்வு காணல்

உடைமையுஞ் செல்வமும் ஒரு வழி நில்லா

உண்டி உறக்கம் இல்லாமல் உழைத்தல்

உண்டி உறையுள் வசதி

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி 11-96; புறம் 18)

உண்டு உடுத்து உறங்கி வாணாள் போக்கல்

உண்டுடுத்து உலாவி உயிர் வைத்திருத்தல் (இராம லிங்கசு)