பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈதலுக்குக் காலம் ஏது?!

55


திருஞானசம்பந்தர் அழுதவுடன் அவர் தம் தந்தையைத் தேடாமல் - தேடி உணர்த்தாமல் - நேரடியாகவே - உடனடியாகவே அன்னைக்கு அன்னை பராசக்தி பாலட்டி ஊட்ட முன் வந்தாள். வாழும் மக்கள் இயல்பு கடவுளியல் இயங்கவும் துணை செய்யும்போலும்! இதனைத் திருஞானசம்பந்தர் -

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே,

என்று பாடுகின்றார்.