பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அப்பரடிகள் இறைவனை “நீதிமுறை விளங்க இம் மண்ணில் புகுந்து இம் மண்மேல் நடமாடியவன்” என்று பாடிப் பரவுகின்றார். மேலும் கோயில் பதிகத்தில் பெருமானை, “நீதியே நிறைவே” என்று பாடிப் பரவும் பாங்கினை அறிக, ஓர்க; உணர்க!

பக்தி-தொண்டு

அன்பு, மனித குலத்திற்கும் சரி, உயிர்க்குலத்திற்கும் சரி, இயல்பாயமைந்த அடிப்படைப் பண்பு - குணம். இந்த அன்பு, காட்டும் இடம் நோக்கி வேறு வேறு பெயர் பெறுகிறது.

கடவுளிடத்தில் காட்டப்பெறும் அன்பு, பக்தி என்று கூறப்பெறும். அன்பினால் ஆன்மா நினைந்தும் உணர்ந்தும் கடவுளிடம் காட்டப்பெறுவது பக்தி. தூய சிந்தனை பிறக்க, இறையன்பு வேண்டும். மனம், புத்தி, வாக்கு, செயல் எல்லாம் இறைவனை நோக்கி நடப்பதே பக்தி நிறைந்த வாழ்க்கை.

காந்தத்தை நோக்கி இரும்பு நகர்கிறது. அல்லது காந்தத்தால் இரும்பு ஈர்க்கப்படுகிறது. மனைவி கணவனைக் காதலிக்கிறாள். கொடி, கொம்பைப் பற்றிக் கொண்டு படர்கிறது. ஆறுகள் அலைகடலை நோக்கி ஓடிக் கலக்கின்றன. அதுபோல - “தைலதாரை” போல இடையறாது இறைவன் திருவடிகளைச் சிந்தனை செய்வது பக்தி.

“இறைவனை நோக்கி ஆன்மா அழுதலே பக்தி” என்பார் டென்னிஸன். நாம் வாழும் இந்தக் கலியுகத்திற்கு ஏற்ற நெறி, பக்தி நெறியாகும். எரியூட்டப் பெற்ற நெருப்பு கூட இடைவிடாது விசிறியும் ஊதியும் எரியும்படி செய்யத் தவறினால் அணைந்து போகும்.

அதுபோலவே நாம் அரிதில் முயன்று கிடைத்த ஞானம், வைராக்கியம், பக்தி முதலியவற்றை வாசனா மலம் அழித்துவிடும்! கொட்டும் மழையில் நனைவதில் குளிர்