பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

151


நாமிருக்கும் நாடு நம
தென்பதறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம்
என்ப துணர்ந்தோம்
பூமியில் எவர்க்குமினி
அடிமை செய்யோம் - பரி
பூரணனுக்கே அடிமை
செய்து வாழ்வோம்!

என்று பாடினார். ஆம்! ஏழாம் நூற்றாண்டிலேயே முழங்கால் வரை வேட்டியுடுத்திய கோலத்தால் மிகப்பழமையானவரான நமது அப்பரடிகள் “ஆட்சிக்காக மக்கள் அல்லர்; மக்களுக்காகவே ஆட்சி - அரசு எல்லாம்! கொடி கட்டி நாடாளும் பல்லவ மன்னனுக்கு நாம் அடிமையல்லோம்; இறைவனுக்கே நாம் அடிமை” என்ற கருத்தை வெளியிட்டார். இவ்வாறு ஏழாம் நூற்றாண்டிலேயே விடுதலை முழுக்கம் செய்த பெருமை நமது அப்பரடிகளுக்கு உண்டு. எல்லாம் இறைவனுடைமை; எல்லாரும் இறைவன் மக்கள் என்னும் உடன் பிறப்பொற்றுமை எண்ணம் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்தும்; சமுதாய ஆட்சி மலரும்; அதுவே இன்பமும் மகிழ்ச்சியும் ஆகும்.

கவிழ்ந்த பாலுக்குக் காரணம் யார்?

அன்று இந்த நாடு அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தமையின் காரணமாக இந்நாட்டு மக்களின் சராசரி வயது 27 ஆக இருந்தது. இன்றோ, இந்த நாடு சுதந்திரம் பெற்று விட்ட பிறகு, மக்கள் நலன் கருதுகிற சொந்தக் குடியரசு நாடாக ஆகிவிட்ட பிறகு பல்வேறு நலன்களும் சுகாதார வாய்ப்புக்களும் பெருகியுள்ளன. எனவே மக்களின் சராசரி வயது 47 ஆக உயர்ந்திருக்கிறது. 27இல் செத்தது