பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒழுக்கமும் பெற்று இந்த நாடு திகழும் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்த அக ஒழுக்கமும் மிக்கோங்கினால், சமுதாயத்தில் மக்கட்பண்பு மலர்ந்தோங்கும்.

உயிரும் உலை நீர் ஆமையும்

வாழும் மனித சமுதாயத்திற்கு உலகியல் அறிவு மட்டும் போதாது. மக்கட் பண்பும் வேண்டும். மக்கட் பண்பையும் அறிவையும் பற்றிப் பேசுகிற திருவள்ளுவர்,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போவ்வர்
மக்கட்பண் பில்லா தவர்,

என்று குறிப்பிடுகிறார். அரம் போன்ற கூர்த்த மதி சிலருக்கு இருக்கும். அவர் கூறும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் பேரைச் சுண்டியிழுக்கிற வன்மையும் இருக்கும். ஆனால் அது நஞ்சாக, நரியின் தந்திரமாக, வாழ்நாள் முழுவதுமே வெறியை - வெறுப்பை ஊட்டுவதாகவே இருக்கும். இந்தக் சூழ்நிலையை மாற்றி, ‘அறிவு’ என்பதற்கு அழகான விளக்கம் தருகிறார் அப்பரடிகள். நல்ல எடுத்துக் காட்டுக்களோடு, உவமையோடு கூறுகிறார். வாழ்க்கையில் நன்மைபோல் தோன்றித் தீமை விளைவிப்பனவும் உண்டு. தீமைபோல் தோன்றி நன்மை புரிவனவும் உண்டு. நிலையற்றனபோல் தோன்றி நிலைப்பனவும் உண்டு. நிலைப்பனபோல் தோன்றி நிலையாதனவும் உண்டு. இந்தக் கருத்தை ஓர் அழகான உவமையோடு பொருத்திக் கூறுகிறார் அப்பரடிகள். பொதுவாக, நாட்டுப் புறங்களிலே ‘ஆமை’ சமைத்து உண்ணுகிற மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஆமையைப் பிடித்து வருவார்கள்.

உலைப் பானையிலே தண்ணீர் ஊற்றி அதை அடுப்பிலேற்றித் தீயை மூட்டிப் பின்னர் ஆமையை அதில் போடுவார்கள். தண்ணீர் இளம் சூடாகிறது. தண்ணீரில்