பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

209


தடைப்பட்ட உணர்ச்சி அப்பரடிகளுக்குக் கச்சியில் கால்கொண்டிருக்க வேண்டும்.

திருமால் நாள்தோறும் ஆயிரம் பூக்கள் கொண்டு அரனை அர்ச்சிக்கும் நோன்பேற்று, முறை வழுவாமல் செய்து வந்தார். ஒருநாள் திருமால் ஆயிரம் பூ எண்ணி எடுத்து வந்து அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஆயிரத்திற்கு ஒரு பூ குறைந்து விட்டது. இயல்பாகக் குறையவில்லை. சிவபெருமானே வேண்டுமென்று ஒரு பூவைக் குறையச் செய்து, மலர் குறைந்ததன் காரணமாகத் திருமால் மனங்கரைந்து அழுது, தனது கண் மலரை இடந்து மலரென இடத் தூண்டித் தடுத்தாட்கொண்டதை அப்பரடிகள் நினைத்து பாடுகிறார்.

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே!

என்பது அப்பர் திருப்பாடல்.

தன்னை இறைவன் இனிதே ஆண்டுகொண்டான் என்றும் பின்னர் ஐம்பொறிகளுக்கு ஒற்றியாக வைத்தான் என்றும் கூறுகிறார். ’ஏன்று ஆண்டு கொண்டாய்’ என்பது மலக்கட்டு நிலையில் வாழ்ந்த போது, கருணையினால் ஆண்டு கொண்டு உய்தற்குரியவாறு முதற் பிறப்பு கொடுத் தமையைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். உய்தற்குரிய வண்ணம் உயிரை இறைவன் உடலொடு சேர்ப்பிக்கின்றான்.

உடலிடைத் தங்கிய உயிர், பொறிகளைக் கொண்டு ஆரத் துய்த்து, வேட்கை தணிந்துழி இறைவா இன்ப நிலையை எய்துகிறது. பொறிகளுக்கு உயிரிடத்தில் நிரந்தரமான