பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


14. ஆற்றில் கெருத்துக் குளத்தில் தேடுவதா?

இறைவன் எங்கும் இருக்கின்றான்; எல்லாவற்றிலும் இருக்கின்றான்; எப்பொழுதும் இருக்கின்றான். எங்கும் இறைவன் தங்கியிருப்பதனாலேயே அவனுக்கு இறைவன் என்று பெயர். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று மணிமொழி இறைவனைப் போற்றுகிறது; பாராட்டுகிறது. எல்லாத் திருக்கோயில்களுக்குள்ளேயும் நுண்ணறிவில்லாத வரும் கண்டு அறிந்து போற்றும்படி திருமேனி கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான். திருக்கோயில்கள் யாவும் இறைவன் திருக்கோயில்களே. எல்லாத் திருக்கோயில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்திகளிலும் இறைவன் திருவருட் பொலிவோடு எழுந்தருளியிருக்கிறான். ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை. இங்கென்றும் அங்கென்றும் இறைவனைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு திருக்கோயிலில் வழிபாடு செய்து வைக்கும் பொறுப்புள்ள அர்ச்சகரே இன்னொரு திருக்கோயிலில் உள்ள தெய்வத்திற்கு நோன்பு எடுத்துக் கொண்டு அங்குச் செல்வார். இது எவ்வளவு பெரிய அதிசயமான செய்தி! சிற்றுண்டிச்சாலையை வைத்திருப்பவர் தாம் அங்கு உண்ணாமல் அடுத்த கடையில் போய் உண்டு, வருகிறதென்றால் அது வேதனையைத் தரக்கூடிய செய்தியல்லவா?

திருநல்லூர்த் திருக்கோயில், எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில். அங்கு, கண்ணுக்கும் கருத்துக்கும் தோற்றமாகும்படி இறைவன் எழுந்தருளியிருக்கின்றான். ஆனாலும் திருநல்லூர்த் தொண்டர், திருநல்லூர்த் திருக்கோயிலுக்குள்ளேயா இறைவனைக் காண முயல்-