பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அண்ணனிடம் கொண்டுள்ள உறவு அமைதி பெறுவதில்லை. பாசம், அன்பாக மாறி வளர்ந்தது. இப்போது காதல் பருவம். காதல் பருவத்தில் அண்ணனிடமிருந்த-ஐயனிடமிருந்த உறவு நெகிழும் நிலையில் ஒருத்தியைத் தேடுகிறது.

ஒருத்தி என்ன கடைவீதியில் கிடைப்பாளா? அப்படி கிடைத்தாலும் வாழ்க்கைத் துணைநலமாக அமைவாளா? ஆதலால் இவன் பிறந்து வளரத் தொடங்கிய காலத்திலேயே இவனுக்காக ஒரு பெண்னை ஈன்றெடுத்து வளர்த்து மனைவியாகத் தர முன்வரும் மாமனார், மாமியார் சாதாரண பணியையா செய்கிறார்கள்! இல்லை. அவர்கள் செய்வது மிகப் பெரிய பணி; உதவி! அதனாலேயே “அன்புடைய மாமன், மாமி" என் அழைக்கப்படுகிறார்கள்! ஆம்! எதிர்வரும் தேவையை நெஞ்சில் நினைத்து உதவி செய்வது ஒரு பெரிய அறம். மாப்பிள்ளைகளுக்கு வாய்க்கும் அன்புடைய மாமன், மாமி போல் பெண்கள் அனைவருக்கும் வாய்த்து விட்டால் இந்த உலகம் ஒரு சொர்க்கம்தானே! ஐயனை-அண்ணனைத் தொடர்ந்து அன்புடைய மாமன்; மாமி!

அடுத்து, காதல் மனைவி. அனைத்திலும் தனக்கு ஒப்புடைய தலைவி! இவன் வாழ்க்கைக்கு ஒப்புதல் அளித்து உடன் பயணம் செய்யும் தலைவி-மனைவி! வாழ்க்கைத் துணை நலம்! வேராக நின்று தாங்கி வளமூட்டி வாழ்வளிப்பவள்.

இதுவரை வந்தமைந்த துணைகள் உயிருள்ளன! இப்போது துணையாய் வந்தமைவது கருவியாக அமையும் பொருள்! பொருள், வாழ்க்கையின் தேவை! பொருள் இல்லார்க்கு இவ்வுலகமே இல்லை! அந்தப் பொருளும் உழைப்பால் வந்த பொருளாதலால் ஒண்பொருளாயிற்று! போதுமா? வாழ்க்கை இயக்கமாகி வளர்ந்து வருகிறது. ஆனால் முழுமையான நிறை நலம் சார்ந்த நிலை இன்னமும்