பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

323


இன்பத்தினைப் பார்த்து அந்த இன்பத்தினை மேலும் வளர்த்துப் புதுமையதாக்கி அனுபவித்தல் வேண்டும். 'நேற்று’ என்பது இன்று அப்படியே அப்பட்டமாக ஆகுமானால், பயனில்லை. 'நேற்று போய் 'இன்று' உருவாகும் பொழுது கழிப்பன கழித்தும், கொள்வன கொண்டும் புதுமைப் பொலிவு பெற வேண்டும். வறட்சித் தன்மையுடைய கிழட்டுத் தனத்தை நீக்கப் புதுமை உணர்வு துணை செய்யும். ஆக, புலன்களைச் சென்ற வழியே செல்ல விடாமல், போன வழியிலேயே போய்ப் பாழாக விடாமல் புது நெறியில் - பொது நெறியில் நெஞ்சத்தை நாம் பழக்க வேண்டும். ஆனால், புலன்களோ புதுமையில் நாட்டமில்லாது வழக்கத்திற்கும் பழக்கத்திற்கும் அடிமையாகின்றன. “என்னால் மாற்றிக்கொள்ள இயலவில்லையே! என்ன செய்வது?” என்று சிலர் அங்கலாய்க்கின்றனர். இந்தப் பொல்லாத பழக்கம் பயனுடையதன்று.

நிலம், பரப்பளவில் அதிகமுடையது. ஒரு நிலத்தை முழுவதும் உழுதால்தான் நிலம் பயனுடையதாகும். ஒரு நிலத்தின் ஒரு சால் மட்டுமே உழப்பெற்று, அதற்கு அண்மைத்தாய அடுத்த சால் உழப்பெறாது போகுமானால், முன்னர் உழுத உழவின் பயனுமில்லை. அது போலவே நேற்றைய தீய பழக்கத்தை விலக்க, அதனைச் சார்ந்து வரக் கூடிய தீய பழக்கங்களையும் விலக்க வேண்டும். நேற்றைய நற்பழக்கத்தை உறுதிப்படுத்திக் காப்பாற்றிக் கொள்ளப் புது நற்பழக்கங்களும் தேவை. பக்தியாகிய நற்பழக்கத்தை அரண் செய்து காப்பாற்றத் தொண்டு தேவை. இங்ஙனம் இனிய பழக்கங்களை விரிவாக்கிக் கொள்ளாமல் வாழ்தல் வாழ்க்கை ஆகாது.

இதனை அப்பரடிகள் உழுத சாலில் உழவே விரும்பும் இழுதை நெஞ்சமென்று எடுத்துக் காட்டி, இடித்துரைக்கின்றார். ஆதலால், வழக்கங்களையும் பழக்கங்களையும் மாற்றி, நலம் பல பெருக்கி, நன்றுடையானை வாழ்த்தி வாழக்