பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய இலக்கியங்கள்

339


என்ற அருமையான சங்க கால இலக்கியச் சொற்றொடர் நினைவு கூரத்தக்கது. சங்ககால இலக்கியங்கள் அப்பட்டமான சமய இலக்கியங்களன்று என்பதும், ஆயினும் சமய நாகரிகம் தழுவிய இலக்கியங்களே என்பதும் முன்பே கூறப் பெற்றன. சங்க காலத்தில் வாழ்க்கையே சமயமாக விளங்கியதால் சங்க கால இலக்கியங்களில் சமய வாழ்க்கையை விளக்கும் பாடல்கள் பல உள்ளன. இத்தகைய சமய வாழ்க்கையின் முடிவான செய்திதான்,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

என்ற சொற்றொடர்.

எல்லா உலகமும் ஆனாய் நீயே

என்ற அப்பரடிகளின் அருள்மொழியும் சாதி வேறுபாடற்ற ஒருமைப்பாடுடைய மனித குலத்தையே விரும்புகிறது.

மனித குலத்தை அரித்துத் தின்றழிக்கும் தீமையில் தீமை வறுமை, ஏழைமை, சமய அறிவற்றோர், வறுமையில் வாழ்தலும்கூட ஒருவகையான அறம் என்றும் ஆதலால் ஆசைகள் கூடாது என்றும் கூறுவர். இங்ஙனம் சொல்வது தவறான வழிகாட்டுதலாகும். இதனால் உயிரியலில், உலகியலில் ஆர்வம் குறைந்து வறுமையே விஞ்சியது. ஏன்? “வறுமை இயற்கை; மாற்ற முடியாதது” என்ற கருத்து வேரூன்றியுள்ளதால் உழைப்பார்வம் இல்லை.

வறுமையை விரும்பியேற்பது உயர் சமய நெறியின் மரபன்று. வறுமையை "நச்சுப் பாம்பின் நஞ்சினும்கொடியது” என்று திருவாசகம் வருணிக்கிறது.

நல்குரவென்னும் தொல்விடம்

என்பது திருவாசகம். மிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்களாகிய-சமய இயலின் தத்துவம் உணராதார் வறுமைக்கு ஊழ் காரணம் என்றனர். மேலும் அறியாதார் சிலர் ஊழை நியதியாக்கி, வெற்றி காணமுடியாது என்றனர். ஆயினும்