பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33
சமய இலக்கியங்களில் அறநெறி


மனிதனின் ஏற்றத்தாழ்வு, பெருமை, சிறுமை ஆகியன மனத்தையே சார்ந்திருக்கின்றன. மனம், விந்தையானது. மனம் நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். மனம் நல்வழியில் பழக்கப்படுத்தப்பட்டால் அஃது இனிய துணையாக அமையும். மனிதனின் பொறிகள், புலன்கள் அனைத்தும் மனத்தின் வழி இயங்குபவை. மனம், புத்தியால் இயக்கப்படும். புத்தி, சிந்தையால் சிறப்படையும். சிந்தனை, புத்தி, மனம் ஆகியவை ஒருங்கிணைந்து நன்னெறியிற் செயற்படுமானால் மனத்துய்மை வந்தமையும். தூய்மையான மனத்தால் இயக்கப்பெறும் பொறிகளும் புலன்களும் அறநெறியில் நிற்கும்; ஒழுகும்; மகிழ்வைத் தரும்; வாழ்வை இன்பமயமாக்கும்.

மனம் இயல்பில் மயங்கும் தன்மையது; எளிதில் கவர்ச்சி வசப்படும்; தெளிவில்லாமல் ஒன்றினைப் பற்றும் அல்லது விடும். மனத்தின் அவலத்திற்கு அடிப்படை இன்ப விழைவு. அதனால், இன்ப விழைவு தீயதென்று கொள்ளுதல் கூடாது. வாழ்க்கையின் நோக்கமே இன்ப விழைவுதான். ஆனால், மயங்கிய மனம் இன்பமல்லாதனவற்றை இன்பம் என்று கருதுகிறது; அடைய முயல்கிறது. மனம் தெளிவு இல்லாமல் குழப்பமடைந்து விடுவதால், இன்பத்தைத்