பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

359


இந்த வழக்கைக் கூறும் இவர் ஒரு பித்தனாக இருக்க வேண்டும் என்று கருதி முதியவரை நோக்கி “எங்கே ஒலை?” என்றார்.

உன்மீது நம்பிக்கை இல்லை! ஒலையைத்தர இயலாது; நீ கிழித்தாலும் கிழித்துவிடுவாய் என்று கூறி ஒலையைத்தர மறுத்தார் முதியவர். நம்பியாரூரர் நெருங்கிப் போய் ஒலையைப் பறிக்க முயன்றார். முதியவர் ஒலையைத் தர மறுத்தார்; போராடினார்.

நம்பியாரூரர் ஒலையைப் பிடுங்கிக் கிழித்துப் போட்டு விட்டார். ஒலையைக் கிழித்தது முதியவரின் வழக்குக்குச் சாதகமாக மாறியதோடு வழக்கிற்குரிய ஆவணத்தை மறைக்கக் கிழித்ததாக முதியவர் கூறினார். வழக்கு, முதியவர் பக்கம் சாதகமாகத் திரும்பும்படி நம்பியாரூரர் செய்தது ஏனோ?

என்னதான் அவதாரமாக இருந்தாலும் மண்ணின் இயல்பும் சுற்றுச் சூழலும் யாரை விட்டுவைக்கிறது?

மீண்டும் திருமணப் பந்தலில் உள்ளோரும், நம்பியாரூரரும் "நும் ஊர் எது?” என்று முதியவரைக் கேட்கின்றனர்! முதியவர் திருவெண்ணெய் நல்லூர் என்று கூறுகின்றனர். திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயில் ஊர்ச்சபைக்கு இந்த வழக்கைக் கொண்டுபோக இருவரும் உடன்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூரை நோக்கி முதியவர் நடக்கிறார். நம்பியாரூரர் காந்தத்தை நோக்கி இரும்புத் துண்டு செல்வதுபோல முதியவர் பின் போகிறார். திருவெண்ணெய் நல்லூரிலிருந்த ஊர்ச் சபையை அணுகினார். முதிய வேதியர் வழக்கை அவையின் முன் எடுத்துரைத்தார்.

“திருநாவலூரனாகிய இவன் எனக்கு அடியான். இவன் அடிமை என்பதற்குரிய சான்றாக விளங்கிய ஒலையை என்