பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

387



பதிகங்கள் உள்ளன. 1026 பாடல்கள் உள்ளன. ஆயினும், சுந்தரர் அருளிய பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைத்தில என்பதே வலிமையான கருத்து.

சுந்தரர் பதிகங்கள் அனைத்திலும் கடைக்காப்பு உண்டு. திருநாவுக்கரசர் பதிகத்தில் மட்டுமே கடைக்காப்பு இல்லை. சுந்தரர் திருமுறையின் விழுமிய சிறப்பு, சிவத்துடன் சுந்தரருக்கு இருந்த நெருங்கிய உறவும் உரிமையும் வெளிப்படும் நிலை, ஏவல், இகழ்தல், ஏசுதல் போன்றவை சுந்தரர் தேவாரத்தில் மிகுதி.

“மகத்திற் புக்கதோர் சனி எனக்கானாய்” என்றார். திரு ஒணக்காந்தளியில் “மதியுடையவர் செய்கை செய்யீர்” என்றார். இம்மொழிகளைத் திரும்பச் சொல்லவும் நாணம் ஏற்படுகிறது. ஆயினும் வன்தொண்டர் வாய்ச் சொற்கள் அன்றோ? அதனால் பெருமானுக்கு உவகையாயின.

சுந்தரர் இறைவனை அன்றாட வாழ்க்கையில் உடன் உறைவானாகப் பெற்றவர். பெற்று நடந்து கொண்டவர்; வாழ்ந்தவர்.

சங்க காலந்தொட்டே சிவபெருமானுக்கு “நீலமணி மிடற்று இறைவன்” என்ற பெயர் வழங்கி வருகிறது. ஒளவையார்,

நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே!

என்றார். பாற்கடல் கடைந்த போழ்து கடலில் எழுந்த நஞ்சினைத் தான் உண்டும், அமுதத்தினை அமரர்களுக்குத் தந்தும் நஞ்சினை உமையம்மை துணையுடன் கண்டத்தில் அடக்கியதால் “நீலகண்டன்” என்ற பெயர் வந்தது. நஞ்சின் காரணமாகச் சிவபெருமான் கண்டம் கருத்திருந்தது.

சுந்தரர் திருமுறையில் “நீலமணி மிடற்றிறைவன்" என்று போற்றப் பெறுகிறான். திருப்புன்கூர்ப் பதிகத்தில்