பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

389


குற்றொரு வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொரு வரைச் செய்த தீமைகள்
இம்மையே வரும் திண்ணமே!
மற்றொரு வரைப் பற்றி லேன்மற
வாதெழும் மட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றம் ஏறி
புறம் பயந்தொழப் போதுமே!

(7.35.4)

ஆதலால், இப்பிறப்பிலேயே தீமைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மனித குலத்தில் உறவு முக்கிய இடத்தை வகிக்கிறது. உறவு மூலம் சமுதாயம் உருக்கொள்கிறது; வளர்கிறது; வாழ்கிறது. உறவு என்பது எல்லோருக்கும் உற்றுழி உதவுதல். “உற்று மற்றின்மை” என்று பாடுகின்றார்.

வாழ்க்கைக் கல்வி இன்றியமையாதது. சங்க காலத்தில் கல்வி போற்றப்படுவதாக இருந்தது. நீடூர்ப் பதிகத்தில் “கற்ற கல்வியினும் இனியானே இறைவனே!” என்றார்.

சுந்தரர் இறைவனை அனுபவித்தவர். சுந்தரர் பதிகங்கள், பதினேழு பண் வகையில் அமைந்துள்ளன. சுந்தரர் தமிழிசை கேட்பதில் சிவபெருமானுக்குள்ள விருப்பத்தை நினைவு கூர்கிறார்; திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு தந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூர்கின்றார். அவர்களுடைய தமிழிசைக்குக் காசு தந்த நீ, என் தமிழ்ப் பாடல் கேட்டு, கண் தரக்கூடாதா என்பது போலக் கேட்கின்றார்.

சுந்தரர் தம் காலத்திலும், தம் காலத்திற்கு முன்பும் வாழ்ந்த அடியார்களை மதித்தவர் போற்றியவர். திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழி மண்ணைத் தம்