பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1

திருஞானசம்பந்தர்

செந்தமிழையும் சிவநெறியையும் போற்றி வளர்த்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. நாயன்மார்கள், பழுத்த மனத்து அடியார்கள் எனப் பலர், காலந்தோறும் தோன்றி, திருநெறிய தமிழைப் போற்றி வளர்த்து வந்துள்ளனர். தமிழினத்தை ஆண்ட மூவேந்தர்களும் தண்ணார் தமிழைப் பேணுவதிலும் சிவநெறியைப் பேணுவதிலும் முன்னின்றனர். செந்தமிழையும் சிவநெறியையும் பேணி வளர்த்த நாயன்மார்களில் முதலில் நின்றவர் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தர் தம்மைத் “தமிழ்ஞான சம்பந்தர்” என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ந்தார். திருஞானசம்பந்தரைப் போற்றவந்த நம்பிராரூரர், “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்” என்று போற்றினார். சீகாழியில் சிவபாத இருதயர் - பகவதியார் ஆகிய இருவரும் தவம் செய்து பெற்ற குழந்தை திருஞானசம்பந்தர். இன்று நம் நாட்டில் “ஆஸ்திக்கு ஒரு பிள்ளை” என்பர். அங்ஙனம் நினைத்த பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தையல்ல திருஞானசம்பந்தர். செந்தமிழையும் சிவநெறியையும் பேணி வளர்க்கக் குழந்தை வேண்டும் என்று தவம் செய்து பெற்ற குழந்தை. இளமையிலேயே அழுது உமையம்மையால்

கு.இ. VII.2.