பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுது இனிய முகத்துடன் இன்சொற்கள் கூறி வழங்கும் பண்பாடுடையவர்கள்.

……
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ்
மிக்கழிவி லாத வகையார்
வெய்ய மொழி தண்புலவ ருக்குரை செ
யாத அவர் வேதிகுடியே!

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு.

புகழ் பெறுதல் அரிது. பெற்ற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவுரை உணர்தலுக்குரியது. கொடையளிப்பதில் காலந்தாழ்த்தக்கூடாது. இன்று, நாளை என்று கூறக்கூடாது என்பது தமிழர் மரபு. சங்க காலத்தில் மூவன் என்பவன் பெருந்தலைச்சாத்தனார் என்ற புலவருக்குப் பரிசில் தரக் காலம் நீட்டித்தமையின் காரணமாகப் புலவர் பரிசிலே பெறாமல் போய்விட்டார் என்று வரலாறு உண்டு. திருஞானசம்பந்தர் சீகாழி நகர மக்கள்,

இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார்

என்று அருளிச் செய்கின்றார். இன்று தமிழரிடையே இந்தப் பண்பு அருகிக்கொண்டு வருகிறது.

திருஞானசம்பந்தர், மனித நேயம் மிக்குடையவர். இறைவழிபாட்டிற்கு ஈடாக மனித நேயம், உயிரிரக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தார். திருமருகல் திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்திருத்தலத்திற்கு வழிபாட்டிற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் ஊரின் எல்லைக்குள் நுழையும்பொழுதே அவர் தம் காதில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. உடன் திருஞானசம்பந்தர் திருக்கோயிலுக்குச் செல்லாமல் அழுகுரல் கேட்ட திசையில் செல்கிறார். ஆங்கு ஒரு மடத்தின் திண்ணையில் ஓர்