பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
கடவுளியல் விளக்கும் காட்சி!

இறை, எல்லா உயிர்களையும் விட மிக்குயர்ந்து மேம்பட்டது. ஆற்றலாலல்ல; ஆட்பாலவர்க் கருளும் திறத்தால் மேம்பட்டது. கடவுளைக் காணாமல் போகலாம். கடவுளைப் பற்றி விவாதங்கள் நிகழலாம். ஆனால், கடவுளியலைப்பற்றி விவாதங்கள் நிகழ முடியாது. இன்று எங்கும் கடவுளியலைப் பற்றிப் பேச்சில்லை; கடவுளைப் பற்றிய பேச்சே அடிபடுகிறது. கடவுளியலைப் போற்றிப் புகழ்ந்து பேணுவாரைக் காணோம். கடவுளைப் பூசிப்பார் பலருண்டு. தமது இயலை விரும்பாமல் தம்மை விரும்புவாரைக் கடவுளும் நாடார். கடவுளியல் தண்ணளியுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; விழுமிய ஒருமைப்பாடுடையது; நன்றென்றே வாழ்த்தப் பெறுவது.

எம்பெருமான் “நீலகண்டம்” என்றும் அழைக்கப்படுகின்றார். அந் நீலகண்டத்தை வண்ணத்திற் காட்ட முடியாது போனாலும், வடிவத்தில் காட்டும் தோற்றமே ஒவ்வொரு மனிதரின் கண்டத்திலும் உருளும் உருளை என்று கூறுவர். எம்பெருமான் கண்டம் உயிர்களைக் காத்தது; இன்பத்தை வழங்கியது. ஆனால், அதன் நினைவாக விளங்கும் கண்டத்தின் உருளைகள் வாழ்விக்கப் பயன்