பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவைகளைக் கடந்து விளங்கும் பொதுமறை; இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ள நூல். மாந்தரைப் பிரிவினைப் படுத்தக்கூடிய எந்தச் செய்தியும் திருக்குறளில் இல்லை. திருக்குறள் வாழ்க்கை நூல்-பொதுநூல், திருக்குறளைத் தேசிய நூலாக ஏற்று, நாடு தழுவிய நிலையில் ஏற்பாடு செய்வது நல்லது. செய்ய வேண்டியதும்கூட. நாடு தழுவிய நிலையில் ஒழுகுதலே குடிமைப் பண்பு என்று திருக்குறள் கூறுகிறது.

இந்தியா ஒரு நாடு, இந்தியாவின் மக்கள் இந்தியர்கள். நாம் அனைவரும் இந்தியர் என்ற கொள்கையை, கோட்பாட்டை உயிரினும் உயரியதாகப் போற்றுவோமாக!

நமது நாட்டின் தொன்மையான ஒரு பிரார்த்தனையுடன் நமது உரையை முடிக்க விரும்புகின்றோம்.

“ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

ஒன்று சேர்ந்து உண்போம்

ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்.

ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்.

எவரையும் வெறுக்காமல் இருப்போம்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!”


26. ஏன் திருவருள் பேரவை?

னித உலக வரலாறு ஒரு தொடர் வரலாறு; வளர்ந்து வரும் வரலாறு; இனியும் வளரவேண்டிய வரலாறு. வளர்ச்சியும் மாறுதலும் இயற்கையின் நியதிகள். மனித குலத்தை அழிவிலிருந்தும் தேக்கத்திலிருந்தும் காப்பாற்றி நிலையான நல்வாழ்வினை அளித்த பெருமை சமயங்களைக் கண்ட சான்றோர்களுக்கு உண்டு.