பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கூட்டுறவு இயக்கத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள மிகச் சாதாரண மக்களுக்கும் வளமை தரமுடியும். நீண்ட கால அபிவிருத்திக் கடன்கள் வாங்குவதில் நமது மக்கள் இன்னும் போதிய அக்கறை காட்டவில்லை. கூட்டுறவுக் கடன் விஷயமாக இதைக்காட்டிலும் எளிமையாகச் சட்டங்கள் ஆக்கமுடியாது. கூட்டுறவு இயக்கத்தில் கடன் வாங்குவது மிகவும் சுலபமானது. கூட்டுறவு இயக்கத்தில் இன்று நமக்கு வாய்த்திருக்கிற அதிகாரிகள் அலுவலர்கள் எல்லோரும் இனிய பண்புடையவர்களாக பழகுதற்கு எளியவர்களாக இருக்கிறார்கள் என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.

இன்று, கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டவர்களாவது வம்புவழக்குச் செய்து கொள்ளாமல் அன்பாகப் பண்பாகப் பழகி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். கூட்டுறவு இயக்கத்திற்கும் அதிகார உணர்வுக்கும் நெடுந் தொலைவு. நம்முடைய நாடு எல்லார்க்கும் எல்லா வாய்ப்புக்களும் வழங்குகிற ஒரு சுதந்திர சோஷலிசக் குடியரசு நாடாக விளங்க நாம் எல்லாரும் அன்பாகப் பண்பாக, அண்ணனாக, தம்பியாக மனச்சாட்சியோடு பழக வேண்டும்.


11. [1]கூட்டு வாழ்க்கை

ண்ணில் மனித வாழ்க்கை என்பது முன்மாற்றத்தை வளர்ச்சியை, முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. மானுடத்தின் குறிக்கோளை ஒரு வார்த்தையில் சொன்னால் "முன்னேற்றம்-PROGRESS" என்று கூறலாம். மனிதன் பொருளாதாரத் துறையிலும் சமய ஞானத் துறையிலும் பல அனுபவங்களைப் பெற்று வளர்ந்து முன்னேறி மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். அமைதியைக் காண்கிறான்.


  1. சிந்தனைச் சோலை