பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குலங்களும் கோத்திரங்களும்கூட சமுதாயத்திற்குத் தீமை பயக்கும். ஏன்? ஒரு மனிதனைப் பிறிதொரு மனிதனிட மிருந்து பிரித்து அந்நியப்படுத்தும் எதுவும் தீமையே!

நமது நாட்டில் நூற்றுக்கணக்கான சாதிகள், இந்தச் சாதிகளை எதிர்த்து இரண்டாயிரதம் ஆண்டு காலமாக அரசியல் – சமய உலகங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” –கணியன் பூங்குன்றன்

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” –திருமூலர்


“சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்திர மும்குல மும்கொண்டு என்செய்வீர்
–அப்பரடிகள்


“சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆத மிலி நாயேனை” –மாணிக்கவாசகர்

“சாதி இரண்டொழிய வேறில்லை” –ஒளவையார்

“சாதிகள் இல்லையடி பாப்பா” –பாரதியார்

என்று காலந்தோறும் கடிந்து வந்துள்ளனர். ஏன் நாம் வழிபடும் கடவுளும்கூட சாதி ஒழிப்புக்கு நடத்திய அருள் நிகழ்ச்சிகள் பலப்பல! ஆயினும் வெற்றிதான் கிடைக்கவில்லை. வெற்றி கிடைக்காதது மட்டுமல்ல. மாபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர் மதத் தலைவர்கள் முதல் ஆள்கிறவர்கள் வரையில். ஆட்சியாளர்கள் தயவில் சாதி முறைகள் பேணி வளர்க்கப்பட்டு வந்தன – வருகின்றன. இன்று சாதிமுறை பொருளாதார ஆதிக்கம் பெறுவதற்குத் தேவையான ஒன்றாக – அவசியமானதாக ஆகிவிட்டது. இதனை ஆட்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் ஆட்சி தமது மக்களை மக்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் வாழ்விற்கு உத்தரவாதம்