பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

95



- அடுத்து, ஒருவனுக்கு இரண்டாவதாக அமையும் பகை உட்பகை

- உட்பகை என்பது, உள்ளத்துப் பகை வைத்துக் கொண்டே பழகுகின்ற நண்பர்கள், அல்லது நெருக்கமாகப் பழகி, ஏதோ ஒரு காரணமாக விலகியும் விலகாமலும் உள்ளவர்கள்.

- இவர்களிடத்தும் ஒருவன் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். என்னை?

‘அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு' - 382

‘மனம்மாணா உட்பகை’ - 884

‘உறல் முறையான் உட்பகை’ - 885

‘செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை’ - 887

‘மனத்தின் அமையாதவர்’ - 825

‘இனம்போன்று இனமல்லார் கேண்மை’ - 822

'உட்பகை அஞ்சித்தற் காக்க’ - 883

‘எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்'
'உட்பகை உள்ளதாம் கேடு’ - 889

- என்பார் ஆசிரியர்.

‘தன்மை இலாளர் பகை’ - இன்னா: 31 : 4

'நட்பின் நய நீர்மை நீங்கல்
குற்றம் தரூஉம் பகை’ - திரிகடு: 86:3-4

‘உட்பகை ஒருதிறம் பட்டென - புறம்:68:11

'நகையாய நண்பினார் நாரின்மை இன்னா’ - இன்னா:82

- என்பார், பிறரும்.

- இனி, ஒருவற்கு மூன்றாவதாக அமையும் பகையே புறப்பகை பெரும்பாலும் இதன் மிகுதியும், கேடும் கருதி இதனைப் பகை என்னும் பொதுப் பெயராலேயே வழங்குவர்.

- புறப்பகை வெளிப்படையாக இயங்கும். அதனால், அதனை அடையாளம் காணுவதும் எளிது.

- இப்புறப்பகை ஒருவற்குப் பல்வேறு கூறுகளான் அமைவது.

அவற்றுள் சில :

1) வழிவழி வருவது.

2) கடுமையான வாய்ச்சண்டையிடுவது.