பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

17


‘புறங்கூற்றுத் தீர்ப்பதுஓர் பொருளுண்டேல்’ - கலி:38:21

'பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டாம் அவற்கு’
- நாலடி:158

'நட்டார் புறங்கூறான் வாழ்தல் இனிது' - இனிநாற்:19:1

‘பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்' - ஏலாதி:33:1

குறளை :

‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி' - நாலடி:189:1

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லென'
- மணிமே:30:68

‘குறளையுள் நட்பளவு தோன்றும்’ - திரிகடு:37:1

‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
- ஆசாரக்:38:1

‘கடையாயார்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி:113:3-4

‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’ - பழமொழி:147:1

‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’ - பழமொழி:193:2

‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது' - முதுமொழி:74

‘பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
மறலையின் வாயின வாம்’
- ஏலாதி:28:3-4

- புறங்கூறுதலை ஆங்கிலத்தில் back biting என்றும், குறளை கூறுதல், பழி கூறுதல், அவதூறு கூறுதல் ஆகியவற்றை Calumny, aspersion, defamation என்றும் கூறுவர்.

இனி, ஒருவனுக்கு மற்றவனின் செல்வம், பதவிநிலை, கல்வி, அறிவு, ஆக்கம், சிறப்புநிலை, புகழ், குடும்பநலம், முன்னேற்றம் முதலியவற்றில் பொறாமையும் (அழுக்காறும்) அவன் உடைமைகள் மேல் விரும்புதலும் (வெஃகுதலும்) ஏற்பட்டு, அவற்றைத் தானும் அடையாமற் போயினும், அவனின் நன்னிலையைத் தாழ்த்த விரும்பி, அவனொடு பழகியிருக்குங்கால், அவன் கண்ட சில மறைவு நிலைகளைக் கூட்டியோ, திரித்தோ, பொய், புனைவு செய்தோ (183), அல்லது அவனைப் பற்றி அவன் கேள்விப்படும்