பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

55


- அதற்குப் 'பல்லாரகத்து’ என்று சொல்ல வேண்டுவதில்லை. ‘பல்லாரிடத்து' என்றே சொல்லலாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.

- இரண்டும் தளைப் பிழையாதிருத்தலை உணர்க.

- இடத்து என்னும் பொருளில் 'அகத்து’ என்னும் சொல்லைத் திருவள்ளுவர் போலும் முற்றி முதிர்ந்த அறிவினார் கூறார்.

-இங்குப் பயனில்லாத, பண்பற்ற சொற்களைத் தொடர்ந்து கேட்பார்தம் அகவுணர்வுத் தாக்கத்தையே ஆசிரியர் கூறவந்ததை நுண்ணுணர்வினார் உய்த்து உணர்க.

- அவ்வாறு கேட்பவர்தம் உள்ளத்து நிகழும் மாற்றங்களையே அடுத்துக் கூறவருகிறார் என்பதை முழுவதும் உணர்ந்தால்தான், 'அகத்து' என்பதை ‘உள்ளத்து' என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும் என்று புலப்படும் என்க.

- அவ்வாறன்றி, அவர்கள் அடுத்த தொடர்க்கும் வேறு மயக்கப் பொருளையே கொண்டதை அடுத்துக் காட்டுவோம்.

2) நயன்சாரா நன்மையின் நீக்கும் : நேர்மை உணர்வு படியாமல் செய்து, அவர்களை நன்மை பெறுவதினின்றும் நீக்கிவிடும்.

- இந்த அடிக்குப் பொருள் கூறிய மணக்குடவர், பரிமேலழகர், பாவாணர் முதலியோரும், இந்த விளைவைப் பயனில கூறுவான் மேலேற்றிக் கூறிப் போந்தனர்.

- பரிதியார், 'நலஞ்சேராமல், திருமாது (திருமகளும்) போம்' என்றும்,

- காலிங்கர் 'நலஞ் சேராமல் திருமாதும் பொய்க்கும்' என்றும் பொருள் தருவது இன்னும் பொருந்தாததாம்.

- ஆனால், பயனில சொல்லுவார்க்கு இந்த விளைவுகள் ஏற்படுவதாகக் கூறுவது, மிகவும் தவறாகும்.

- ஏனெனில், பயனில சொல்லுவானுக்கு வரும் கேடுகள் முன்னரே கூறப்பெற்றன.

அவனை எல்லாரும் எள்ளுவர் (191) என்றும், நயனில நட்டார்கண் செய்தலினும் அவன் கேடடைவான் (192) என்றும், அவனின் எந்த நன்மையும் பெறமாட்டான் என்றும் (193), அவனுக்கேற்படும் விளைவுகளைக் கூறியபின், மீண்டும் அவனைப் பற்றியே அதே கருத்துகளைத் திரும்பக் கூற மாட்டுவரல்லர் ஆசிரியர் என்க.

- இதில் கூறப்பெறும், நேர்மை உணர்வு உள்ளத்தில் படியாமல் போகும். அவர்கள் வாழ்வியல் நன்மை பெறுவதினின்றும் கேட்கப் பெறும்