பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அ-2-16 பயனில சொல்லாமை 20


- இவ்வுலகியல் தொடர்பற்ற புனைவியல் விளக்கங்களாம் என்க. என்னை?

- அறிஞர்கள் ஆய்கின்ற மக்களியல் சார்ந்த நுண்பொருள்கூறுகள், எப்பொழுதும் இவ்வுலகியல் சார்ந்தவையாகவே இருத்தல் வேண்டும் என்பதும், அப்பொழுதுதான் இவ்வுலகம் சார்ந்த மக்கள் இயக்கம் சரிவர இருக்கும் என்பதுமே மெய்யறிவினார் கொள்கை என்க. அவற்றை ஆசிரியர் கூற்றுகளாலேயே தெளிவிப்போம்.

'ஒப்புரவறிதல்' அதிகாரத்து, ஒப்புரவுணர்வின் - சமநிலை உணர்வின் - பொதுநிலை உணர்வின் - பயன் புத்தேள் உலகத்தும் பெறலாம் எனினும், அஃது இவ்வுலகத்தும் பெறல் வேண்டும், என்பதை,

‘புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற' - 213

என்பதும்,

'துறவு' அதிகாரத்து, துறவின் பயனால், இவ்வுலகத்தும் பெறவேண்டிய பல, என்பதை

'வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டு இயற்பால பல' - 342

என்பதும்,

'அவா அறுத்தல்' அதிகாரத்து அவாவுதல் இன்மைபோல் விழுமிய செல்வம் இவ்வுலகத்து வேறொன்றுமில்லை வேறெங்கும் அதுபோல் வேறில்லை, என்பதை,

'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்லை' - 363

என்பதும்,

இறைமாட்சி அதிகாரத்துத்

'தன்சொலால், தான் கண்டனைத்துஇவ் வுலகு’ - 387

- என்பதும்,

'அமைச்சு' அதிகாரத்து, இவ்வுலகத் தன்மைகளுக்கு உரிய செயற்கை நிலைகளை அறிந்தபோதும், இவ்வுலக இயலின் இயற்கை நிலைகளையும் அறிந்து செய்தல் வேண்டும், என்பதை

‘செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்’ - 637