பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அ-2-18 ஒப்புரவறிதல் 22



- இனி, மழை கைம்மாறு கருதாது உலகு புரக்கப் பெய்தலின், அது, தண்ணளிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகியது.

- உலக மக்களிடை எவ்வகை வேறுபாடும், ஏற்றத் தாழ்வும் கருதாமல்,பொதுமை நல அறஞ்செய்வதற்குச் சான்றாக, மழையே தலையாய எடுத்துக்காட்டாகும்.

- பிறர்க்கும் உதவுதல் தன்மையே மக்களிடைப் பொதுமை நலச்சிந்தனைகளை வளர்க்கும்.

- மழைபோலும் ஈதல் தன்மை கழகக்கால இலக்கியங்களுள் பெரிதும் பாராட்டப் பெற்றுள்ளது.

- அதுவும் கைம்மாறு கருதாத கடப்பாடு கடமை என்பது மழையின் கொடையளிக்கு மிகவும் பொருந்துவது.

- உவர் நீராகத் தேங்கியுள்ள கடல் நீரை முகந்து கொண்டு வந்து,மக்கட்குப் பயன்படு நீராக, அதன் உவர்ப்புத் தன்மையை மாற்றி, மேகங்கள், எவ்வகை வேறுபாடும் இன்றி மழையாகப் பொழியும் தன்மை, தம்மிடத்து முழுவதும் பயன்படுத்தப் பெறாமல் உள்ள பெருஞ்செல்வத்தை, அது தேவையுள்ளவர்க்கு நன்றிப் பயன் கருதாமல் கொடுக்கும் கொடையே போன்றதாகலின், அதன் தன்மையே ஒப்புரவு - மக்களின் பொதுநல அறம் - என்று போற்றத்தக்கது என்றார். அவ்வறச் செயலுக்குச் சான்றாக, நூலாசிரியர் மழையை - மாரியை - உவமையாக்கினார் என்க.

- அம்மழையின் தண்ணளித் தன்மையால் உலக உயிரினங்கள் பயன்பெறுகின்றன. ஓரறிவுயிர்முதல் ஆறறிவுயிர்வரை மழையாலேயே உயிர் வாழ்கின்றன. அதுபோல் சமநிலைகருதும் பொதுமையறம்,மேனிலை மாந்தர்களாலும் கடைப்பிடிக்கத் தக்கது. இதுவே ஒப்புரவறிதலின் ஒண்பயன் என்று ஆசிரியர் இவ்வுவமையால் அதனை விளக்கினார், என்க.

- மழைதான் உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாதது என்பதை ஆசிரியர் பெருமான், முன்னரே வான்சிறப்பு அதிகாரத்தில் கூறியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.

'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி’ -13.

இக்கருத்தையே வேறுகோணத்தில் விளக்குமுகத்தான் பெருஞ்செல்வர்கள் வறுமை எய்துவது மழைபெய்யாது உலகம் வறண்டு போதலைப்